20 ஏப்., 2012

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?---உபயோகமான தகவல்கள்


இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும் என்றே நாம் கூறவேண்டும். 

அயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது.
 

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் பின்செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் பின்செய்து கொள்ளுங்கள்.
 

புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம்.
 

குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.
 

மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.
 

புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.
 

மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது.
 

சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும்.
 

சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.
 

சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்
Pettagum

19 ஏப்., 2012

புடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி?


பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.

ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்:

1.
 விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.

2.
 விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.

3.
 அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

4.
 சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

5.
 விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட "ஓடோனில்"லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.

6.
 ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.

7.
 பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

8.
 அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.

9.
 விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.

மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்
Pettagum

18 ஏப்., 2012

COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை---


compaq-desktop-computers கணினி என்றால் என்ன?
கணினி என்பது பல electronic இளைகளினால் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) ஆன பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஒரு electronic இயந்திரத்தை; operating system என்னும் programe மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும் வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் programs (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். operating system (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் programs (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் operating system வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?:
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.

Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

De-fragment - செய்வதால் ஆவது என்ன?
நாம் ஒரு புறொக்கிறாமை உட்புகுத்தும் போது, அல்லது ஒரு பைலை சேமிகும் போது அவை நிரந்தரமாக ஹாட்டிஸ்கில் பதியப்பெறுகின்றது. ஆனால் அவை தொடற்சியாக அல்லது ஒரே ஒழுங்காக உடனடியாக பதியப்பெறுவதில்லை. கணினி நேரத்தை மீதிப்படுத்துவதற்காக வெற்றிடமாக உள்ள இடங்களில் எல்லாம் பதிந்து தொடர்பை வைத்துக் கொள்ளும். நாம் அவற்றைப் பாவிக்க கிளிக் செய்யும் போது அவற்றை நமக்கு பெற்றுத் தருவதற்காக பதிந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து அவற்றை எமக்கு எடுத்து வருகின்றது. அதனால் அதற்கு சிரமமும் நேரமும் எடுக்கின்றது. இதனால் கணினி தாமதமாக இயங்குவது போல் தோன்றுகின்றது.

Defragment செய்யும் போது அவை ஒரேசீராக தொடற்சியாக ஒழுங்காக பதியப் பெறுகின்றது. அதனால் திரும்பவும் பாவனைக்கு எடுத்து வரும் போது சிரமப்படாது உடனடியாக இயங்குகின்றது. De-fragment செய்வதற்கு நாம் முன்பு ஸ்கான் செய்ய Check Now என்ற பொத்தானை அழுத்தியது போல் இதற்கு Defragment Now என்ற பொத்தானை அழுத்துதல் வேண்டும். இதுவும் ஹாட் டிஸ்கின் நிலைமையைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளும். De-fragment மாதமொருமுறை செய்யவேண்டியதில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். சில புதிய ஒப்பறேற்ரிங் சிஸ்ரம் Analyze செய்து (பரிசோதித்து) தற்போது அவசியமா? என்பதைக் கூறும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk De-fragementer சென்றும் C Drive வை De-fragement செய்யலாம்).

Disk Clan up-டிஸ்க்கை சுத்தம் செய்யவதற்கு அதாவது தேவை அல்லாத வற்றை அழித்து இடத்தை சேமிக்க Disk Clan up செய்யப்பெறுகின்றது. உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய Disk Clanup மிகவும் அவசியம். Disk Clanup செய்வதற்கு முன்பு கூறியது போல் My computer ரை கிளிக் செய்து Proreties க்கு செல்லுதல் வேண்டும். அங்கே Disk Clanup செய்வதற்கான பொத்தான் உள்ளது. இதை கிளிக் செய்ததும் சிறிது நேரத்தில் ஸ்கான் செய்யப்பெற்று ஒரு விண்டோ தோன்றும். அவற்றுள் சில சரி போடப்பெற்றிருக்கும். அவை அனேகமாக கணினிக்கு தேவையற்றவை, நீங்களாக எதையும் கிளிக் செய்து சரி போடாதீர்கள். அவைகள் கணினி இயங்க தேவையானவைகளாக இருக்கலாம். பின்பு OK என்ற பொத்தானை அழுத்துங்கள் கணினி அவற்றை தானாகவே கிளீன் செய்துவிடும். இதன் போது Free ஆக இருந்த இடம் இன்னும் அதிகரித்திருக்கும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk Cleanup சென்றும் C Drive-யை Disk Cleaneup செய்யலாம்) அல்லது அதனை கணினி தன்னிச்சையாக செய்வதற்கு கணினி ஓய்வான நேரத்தில் செய்யக்கூடியதாக Schedule செய்து விடலாம். கணினி தானாகவே குறிக்கப்பெற்ற தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து செய்துவிடும்.

வைரஸ் அழிப்பு மென்பொருளை (install) உட்புகுத்தி பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போவதற்கு வைரஸ் தாக்கம் முக்கியக் காரணியாகும். எனவே நிபுணர்களின் ஆலோசனைப்படி நல்ல வைரஸ் அழிப்பு மென்பொருட்களை வாங்கி (install) உட்புகுத்துதல் அவசியமாகும். அதன்பின் அதனை உபயோகித்து வைரஸ் ஸ்கேனிங் செய்து வயிரஸ் தாக்கம் இருந்தால் அவறை அழித்து விடல் வேண்டும். இலவசமாக கிடைக்கும் வைரஸ் அழிப்பு மென்பொருட்களை பாவிப்பதில் அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updates செய்தல்: கணினியில் பதியப்பெற்ற ஒப்பறேற்றிங் சிஸ்ரத்திற்கான Updates அவ்வப்போது உட்புகுத்துங்கள். அல்லது கணினியே அவற்றை தானாகப் பெற்று அவ்வப்போது உட்புகுத்த கணினியை Schedule செய்யுங்கள். அவை கணினிக்கு பாதுகாப்பையும், பல மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கும்.

fபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்:
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் fபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. (XP) மற்றும் விண்டோஸ் விஸ்ரா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் fபயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவையெல்லாம் கணினியை மந்தமடையச் செதுவிடும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

அத்துடன், டெஸ்க் ரொப்பில்-Desktop அதிகம் கோப்புகளை வைத்திராதீர்கள். அவற்றை வேறு இடத்திற்கு (My Document) மாற்றி விடுங்கள். இப்படிச் செய்வதனால் கணினி ஆரம்பிக்கும் போது ஏற்படும் தாமதம் நிவர்த்தி செய்யப்பெறும்.

பயன்படுத்தாத புரோகிராம்களை அழித்து விடுங்கள்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கொன்ட்ரோல் பனலில் உள்ள ADD or Remove பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.

கணினியை சுத்தமாக வைத்திருத்தல்:கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் சென்று விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும். கணினியை அடுப்பங்கரைக்கு அண்மையாகவோ, தூசு, புகை அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் உள்ள இடங்களில் வைத்திருத்தலை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

கணினி வேலை செய்யும் நேரங்களில் அதனை (துணியால்) மூடி வைத்தல் ஆகாது. கணினியின் உள் உறுப்புகள் சூடேறாமல் சீரான வெப்பநிலையையை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு ஏற்ற வகையில் அதன் வெளிக் கவர் டிசைன் செய்யப் பெற்று சில காற்றாடிகள் உள்ளே இயங்குகின்றன. நாம் கணினியை மூடிவிட்டால் உள் உறுப்புகள் சூடேறி கணினி வேலை செய்யாது நின்றுவிடும்.

கணினியை எப்பொழுதும் திறக்கப்பெற்ற எல்லா கோப்புகளையும் CLOSE செய்த பின் START மெனு மூலம் நிற்பாட்டுதல் அவசியம். சுவிச்சு மூலம் நிற்பாட்டுதல் பல பிரச்சனைகளை உருவாக்கும். திரும்ப ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுக்கும்.

அடுத்து மின்சார வினியோகம் கூடிக் குறைந்து காணப்படும் பிரதேசங்களில் வசிப்போர் ஸ்திரமான மின்சரத்தை வழங்கும் (Stabilizer) உபகரண மூலம் கணினியின் மின்சாரத் தொடர்பை எற்படுத்தி கணினிக்கு தேவையான மின்சாரத்தை பெற ஒழுங்கு செய்தல் வேண்டும். இல்லையேல் கணினியின் பல பாகங்கள் பழுதடைந்துவிடும்.

சிறுவர்கள் உபயோகிக்கும் கணினி எப்பொழுதும் எல்லோராலும் கவனிக்கக் கூடிய இடத்தில் இருப்பது நல்லது. இதனால் அவர்கள் தகாத இடங்களுக்கு செல்வதை தடுக்கலாம். இன்ரநெற் உள்ள கணினியை சிறூவர்கள் பாவிக்கும் போது பெரியோகள் அவதானமாக இருத்தல் அவசியம்.
Pettagum

17 ஏப்., 2012

பல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்


சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது.

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.

பாதுகாப்பு முறை:

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம்.

பல் இடுக்குகளில் உணவுப் பொருட் கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.

பல்லைப் பாதுகாக்க இன்னும் சில டிப்ஸ்

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.

கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.

கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
Pettagum

16 ஏப்., 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி ?


1. படிச்சவரும் முட்டாளும் 

படிச்சவர் யாரு? முட்டாள் யாரு? இது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம். ஆனா எப்படி யோசிக்கிறது?
 

படிச்சவர் அனாவசியமா யோசிப்பார் . முட்டாள் யோசிக்கவே மாட்டார் அப்படினு ஒரு பொது கருத்து வைச்சிப்போம். ஒரு பக்கத்துல படிச்சவரே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். மறு பக்கத்துல முட்டாளே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். இவங்க சொல்ற கருத்தை எல்லாம் எடுத்து ஒரு குறிப்பு வைச்சிப்போம். அப்புறம் யாரு படிச்சவர், யாரு முட்டாளு அப்படினு தெரிஞ்சி போயிரும். இவங்க பேசி முடிக்கிறவரைக்கும் நாம காத்திருப்பது சரிதானுங்களா, அதுதான் இல்லை. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க பாருங்க அவங்க தான் முட்டாளுங்க. இதுவும் சரிதானா, அதுதான் இல்லை.
 

சரி, தமிழ் விக்கிபீடியாவில , ஆங்கில விக்கிபீடியாவில அப்படி இப்படி பீடியாவில் எல்லாம் போய் தேடித்தான் பாருங்க. படிச்சவர், முட்டாள் அப்படிங்கிறதுக்கு என்ன விளக்கம் அப்படினு. ஒரு மண்ணும் இருக்காது. எதுக்குனா இதை எல்லாம் ஒரு கட்டத்துக்குள்ள விளக்க முடியாது. இது ஒரு பெரிய வட்டம். சுத்தி சுத்தி வரும்.
 

படிச்சவர் : குறைந்தது ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். இவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை பாகுபடுத்தி பார்க்கத் தெரியும். சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவதில் சிறப்பானவர்.
 

முட்டாள் : இவருக்கு குறைந்தபட்சம் ஒரு மொழியை கூட எழுதவோப் படிக்கவோ தெரியாது. சமயோசிதமாக சிந்திப்பதில் சற்று குறைபாடு இவரிடம் இருக்கும். என்ன பேசுகிறார் என்பதற்கான சிந்தனை கூட இவரிடம் இருப்பதில்லை.
 

சரி படிச்சவங்களுல முட்டாளுங்க இல்லையா அப்படினு சமயோசிதமா ஒரு கேள்வி வரும். முட்டாளுங்க படிச்சவங்க மாதிரி நடந்துக்க முடியாதா அப்படினு இன்னொரு கேள்வி வரும். இப்படி கேள்வி கேள்வி கேட்கறவங்க எல்லாம் படிச்சவங்கனு சொல்ல முடியாது. எதுக்குனா முட்டாத்தனமா கேள்வி கேட்கறவங்க முக்காவாசி பேரு படிச்சவங்கதான்.
 

ஆக மொத்தம் படிச்சவங்களுல முட்டாளுங்க இருக்காங்க. அவங்கதான் படித்த முட்டாள்கள். இப்ப இருக்கிற வாழ்க்கையில நூத்துக்கு ஐம்பது சதவிகிதம் இப்படிப்பட்ட படித்த முட்டாள்கள் தான் உலகை ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க. மீதி ஐம்பது சதவிகிதம் படிச்ச விரக்தியில ஒன்னும் செய்ய முடியாதா அப்படிங்கிற மன அழுத்தத்துல இருக்காங்க. அவங்களும் ஒரு முட்டாள் கூட்டம் தான். ஆக இது, மொத்தத்துல ஒரு முட்டாள்களின் உலகம். இல்லை, இல்லை நான் முட்டாள் இல்லை, அப்படி இப்படினு நீங்க குதிச்சா நல்லா குறிச்சி வைச்சிகோங்க, நீங்கதான் உண்மையிலேயே முட்டாள். 'எப்படி மன நிலை பிறழ்ந்தவர் தன மனநிலையை குறித்த சிந்தனையை அறிய இயலாதோ அதைப் போலவே முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை. அப்படி முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டாலும் முட்டாள்களாகவே வாழ்பவர்கள் இருப்பவர்கள் அதிகம்'.
 

ஒரு பாட்டு கேள்வி பட்டுருப்பீங்க, அந்த பாட்டை இன்னொருதரம் கேட்டு பாருங்க. நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவனு நாலு பேரு சொன்னாங்க, ஏற்கனவே சொன்னவங்க ஏமாளியானாங்க, எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க.
 

எப்படி சீரும் சிறப்புமா வாழ்க்கையில வாழறது அப்படினு புத்தி சொல்றதை விட, எப்படி சீரழிஞ்சி போறதுனு சொன்னா ரொம்பவே நல்லா இருக்கும்.
 

நல்லது கெட்டது பாகுபாடு படுத்தி பார்க்கிறவங்க நல்லவர், கெட்டவர் அப்படினு பிரிச்சி பார்க்கலாம். படித்த நல்லவர், படித்த கெட்டவர். நல்ல முட்டாள், கெட்ட முட்டாள். ஆனா எப்ப கெடுதலை குறித்த சிந்தனை இருக்கோ அவங்க முட்டாள் அப்படினு ஆயிரும், அதனால படித்த கெட்டவர் எல்லாம் சரியில்லை. அவர் முட்டாள். அதுதான் முன்னமே சொல்லிட்டமே முட்டாள்களின் உலகம் இது. படித்த, படிக்காத முட்டாள்களின் உலகம்.
 

சரி படித்த முட்டாளைத் தவிர்த்து முட்டாள்களுல, ஓரளவு சிந்திக்க தெரிந்த முட்டாள், அடி முட்டாள், வடிகட்டின முட்டாள் அப்படிங்கிற பிரிவினை எல்லாம் உண்டு. அதனால அவங்ககளை எந்த பிரிவுல சேர்க்கிறது அப்படிங்கிற சிந்தனையை அப்புறம் பார்த்துக்கிரலாம்.
 

எதுக்கு இப்படி ஒரு விவரிப்பு அப்படினா வாழ்க்கையில் சீரழிய முதல் தேவை நீங்கள் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்படிப்பட்ட முட்டாள் என்பதை உங்கள் செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா? என்னதான் நான் இது முட்டாள்களின் உலகம் அப்படினு ஒரு பொது கருத்தை சொன்னாலும் உங்க கடமைனு ஒன்னு இருக்கு இல்லையா? அது என்னனா...

நீங்க முட்டாளா, இல்லையா அப்படிங்கிற ஒரு முடிவுக்கு இதுநாள் வரை நீங்க நடந்து கொண்ட முறையை, இப்ப நடந்துகிட்ட முறையை ஒரு அலசு அலசுனும். அது உங்க நடத்தை, படிப்பு, பிறர் கிட்ட எப்படி நடந்து கிட்டீங்க, துரோகம், நட்பு, காதல், கத்தரிக்காய், திருமணம், புடலங்காய், வியாபாரம், கல்வி, கலவி பொருளாதாரம், கடன், உடன், ரசிக கூட்டம், தொண்டர் கூட்டம் அது, இது அப்படினு ஒன்னு விடாம அலசனும். அலசிட்டு நீங்க முட்டாளா இல்லையானு ஒரு முடிவுக்கு வரனும், அப்படி நீங்க உங்களை முட்டாள் அப்படினு முடிவு கட்டிட்டா வாழ்க்கையில் சீரழியறதுக்கு உங்களை தயார் படுத்திட்டீங்கனு மார் தட்டி சொல்லிகிரலாம்.
 
Muthamilmantram

15 ஏப்., 2012

உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்


வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.
அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:
`ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.
பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.
அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.
ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை.
`வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங் காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.
வெப்பநிலையில் மாறுதல்:
சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது. ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.
வயிற்று  கோளாறை  தடுக்க எளிய  வழி:
காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.
ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.
இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.
அசைவம்:
அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக
  குடல் நோய்களுக்கான  சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதய நோய் ஆபத்து
ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம்  என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.
நன்றி: மாலைமலர்

14 ஏப்., 2012

உமிழ்நீர்


உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உண வை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச் சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொ ல்வர். ஒரு நாளைக்கு மாந்தர் களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர் களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப் பிகளும் (படத் தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிக ளும் உமிழ் நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந் தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல்.

உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லா மல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள் களைக் கரைப்ப தால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அள வைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவ தாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வா யுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ் நீரில் உள்ள அமிலேசு என்னும் நொ தியம் மாவுப்பொருளான கார்போ ஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.
Saliva Test
உமிழ்நீரில் உள்ள உட் கூறுகள்
உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கிய மான பொருட்களும் அடங்கியுள்ளன.
இதில் அடங்கியுள்ள உட் கூறு களின் முக்கியமானவைகளை கீழே காணலாம்:
நீர்
மின்கரைசல்கள்
2-21 மில்லிமோல்/லீட்டர் சோடியம்  (குருதியில் உள்ளதை காட்டி லும் குறைவு)
10-36 மில்லி மோல்/லீட்டர் பொட்டாசியம் (குருதியில் உள்ளதைக் காட்டிலும் அதிகம்)
1.2 – 2.8 மில்லி மோல்/லீட்டர் கால்சியம்
0.08 – 0.5 மில்லி மோல்/லீட்டர் மக்னீசியம்
5-40 மில்லி மோல்/லீட்டர் குளோரைடு (குருதியில் உள்ளதைக் காட்டிலும் குறைவு)
25 மில்லி மோல்/லீட்டர் பை-கார்பொனேட் (குருதியில் உள்ள தைக் காட்டிலும் அதிகம்)
1.4 – 30 மில்லி மோல்/லீட்டர் பாஸ்பேட்டு
சளியம். இச் சளியம் பெரும்பாலும் மியூக்கோ-பாலி-சாக்கரைடு (mucopolysaccharides) (சளிய பல் இனிசியம்), கிளைக்கோ புரோட்டின் (glycoproteins) ஆகியவை அடங்கியவை.

நுண்ணியிரியை எதிர்க்கும் பொருட்கள் (தை யோ-சயனேட் (thiocyanate), ஹைடிரஜன் பெராக்சைடும் (hydrogen peroxide), நோய்த் தடுப்புக்குளியம்-A ஆகிய இம்யூனோகுளோபின் A (immunoglobulin A)
பல நொதியங்கள் உள்ளன. முக்கியமானவை மூன்று.
α-amylase (EC3.2.1.1). அமிலேசு மாவுப்பொருள் மற்றும் லிப்பேசு என்னும் கணையத்தில் இருந்து பெறப்படும் நொ தியம் செரிமான த்தைத் தொடங்குகின்றது. இதன் pH optima மதிப்பு 7.4
lysozyme (EC3.2.1.17). லைசோசைம் (Lysozyme) நுண்ணுயி ரிக ளைக் கொல்லும் நொதியம்.
உமிழ்நீர் லிப்பேசு (lingual lipase (EC3.1.1.3)). இது டிரை-கிளிசரைடு (Triglyceride) முதலிய கொழுப்புப் பொருட்களை பிரித்து ஒரு வகை யான கொழுப்புக் காடிகளாக மாற்றுகின்றது. lingual lipase (EC3.1.1.3). இந்த உமிழ்நீர் லிப்பேசு கொண்டுள்ள pH optimum ~4.0 ஆகும் எனவே இது போதிய அளவு காடிச் சூழல் பெறும் வரை செய லுந்தப்படுவதில்லை.
இவையன்றி சிறுசிறு பிற நொதியங்களும உள்ளன. அவை யாவன: உமிழ்நீர்க் காடி பாஸ்பட்டேசு A+B (EC3.1.3.2), N-அசிட்டைல் முராமி-L-அலனைன் அமிடேசு (N-acetylmuramyl-L-alanine amidase)  (EC3.5.1.28), NAD(P)H டி-ஹைடிரோ-கெனேசு-கியுனோன் (NAD(P)H dehydrogenase-quinon)e (EC1.6.99.2), உமிழ்நீர் லாக்ட்டோ-பெராக் சைடேசு (salivary lactoperoxidase) (EC1.11.1.7), சூப்பர்-ஆக்சைடு டிஸ்ம்யூட்டேசு (superoxide dismutase) (EC1 .15.1.1), குளூட்டா-தியோன் டிரான் ஸ்ஃவெரேசு (glutathione transferase) (EC2.5.1.18), வகுப்பு-3 ஆல்டிஹைடு டெ-ஹைடி ரோஜெனேசு (class 3 aldehyde dehydrogenase) (EC1.2.1.3), குளூ க்கோசு-6-பாஸ்பேட்டு ஐசோமெரேசு (glucose-6-phosphate isomerase )(EC5.3.1.9), மற்றும் டிஸ் யு கல்லிக்ரைன் (tissue kallikrein) (EC3.4.21.35) ஆகும்.
செல்கள் (கலங்கள் (Cells): ஒரு மில்லி லிட்டரில் சுமார் 8 மில்லியன் மனித செல்களும், 500 மில் லியன் நுண்ணுயிரி செல் களும் இருக்கின்றன. நுண்ணியிரியின் செல்கள் இருப்பதால் சில நேர ங்களில் வாய் கெட்ட  நாற்றம் ஏற்படுகின்றது.
 Chittarkottai.com

13 ஏப்., 2012

பெண்கள் கவனத்திற்கு…


கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன்  மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து  அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: இஸ்லாம்குரல்.காம்

12 ஏப்., 2012

உணவாகவும் நிவாரணியாகவும் பால்


பாலென்றால் எவருக்கும் வாயூறும். அது தெவிட்டாத உணவுப் பண்டம். பால் சகல சத்துக்களும் அடங்கிய ஒரு பூரண உணவு, சர்வரோக நிவாரணி நோய் எதிர்ப்பு சக்தியுடன் எண்ணிறந்த சத்துக்கள் ஒளடதங்கள் அதில் தாராளமாக பொதிந்துள்ளன.

காலாதி காலமாக ஜீவராசிகளின் உணவுகளில் முக்கிய இடத்தை வகித்து வரும் பால் உண்மையில் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை. தாய்ப் பால், ஒட்டகப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் என வித்தியாசம் வித்தியசமான பால் வகைகளை மனிதப் பயன்பாட்டின் பொருட்டு வல்ல அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான்.
பாலை தேவைகளுக்கேற்ப மனிதர்கள் தேடி அலைந்து விலையைப் பொருட்படுத்தாது வாங்கி அருந்தி திருப்தியுறுகின்றனர். இது பாலின் விலைமதிக்க முடியாத மகிமையை உணர்ந்ததனாலாகும்.
மனிதனுக்கு பல்வகை, பல்சுவை உணவுகளை ஏற்பாடு செய்த அல்லாஹ் பாலை ஒரு வித்தியாசமான பண்டமாக ஆக்கியுள்ளான். அது ஒரு போதுமான உணவு. எல்லா உணவுகளுக்குப் பின்னரும் பொதுவான துஆவை ஓதுபவர்களாகவிருந்த ரஸ¤ல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பால் குடித்த பின் தனியான துஆவொன்றை ஓதும் வழக்கமுள்ளவர்களாக இருந்தமை இப்பின்னணியில் தான்.
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் உணவை உண்ணக் கொடுத்தானோ அவர் அல்லாஹ்வே! எமக்கு இதில் பரக்கத் செய்வாயாக! மேலும் இதை விட சிறந்ததை எமக்கு அளிப்பாயாக!எனக் கூறவும்.
மேலும் எவருக்கு அல்லாஹ் பாலை குடிக்கக் கொடுத்தானோ அவர் அல்லாஹ்வே! எமக்கு இதில் பரக்கத் செய்வாயாக! மேலும் எமக்கு இதிலிருந்து அதிகப்படுத்தித் தருவாயாக!எனக் கூறவும், ஏனெனில் பாலைத் தவிர உணவு, பானத்தில் போதுமானதாக இருக்கக்கூடியதை நானறியேன்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸ¥னன் இப்னி மாஜஹ்)
நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாலருந்தினார்கள். பால் குடிப்பதை ஊக்குவித்தார்கள். பசுப் பாலைப் பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது எல்லா மரங்களிலிருந்தும் உண்ணுகிறதுஎன்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்) நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்). பசுப் பாலில் அனைத்து வியாதிகளுக்கும் குணப்படுத்துதலுண்டுஎன்றும் நவின்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
பால் வெண்மையான, தூய்மையான, மதுரமான பானம். அதற்கு நிகர் அது தான். தொன்றுதொட்டு தூய்மையின் அடையாளமாக வும் வெண்மைக்கு உதாரணமாகவும் பால் விளங்குகின்றமை குறிப்பிடத் தக்கது. பாலை விட வெண்மையானது’ ‘பால் போன்ற உள்ளம்ஆகிய சொற் றொடர்கள் வாழையடிவாழை யாக பிரயோகத்தில் இருந்து வருவது இதற்கு சான்று. மிஃராஜின் போது பாலும் மதுவும் அன்னல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது அவர்கள் பாலைத் தெரிவு செய்தார்கள். அவ்வேளை நீர் இயற்கைக்கு வழிகாட்டப்பட்டீர்என அன்னலாரிடம் சொல்லப்பட்டது. நேர்வழியைச் சுட்டுவதற்கு அல்லாஹ் இங்கே பாலைத் தெரிவு செய்துள்ளான்.
ஏகப்பட்ட அற்புதமான குணங்களை தன்னகத்தே சுமந்துள்ள பாலை மனிதனுக்கு வழங்குவதற்காக அதனை கால்நடைகளின் வயிறுகளுக் குள்ளிருந்து அல்லாஹ் எப்படி வெளிக்கொணர்கிறான் என்பதை பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தில் காணலாம்.
நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகைகளில் உங்களுக்கு படிப்பினை உண்டு. கலப்பற்ற, குடிப்பவர்களுக்கு இன்பகரமான பாலை சாணத்துக்கும் இரத்தத்துக்கும் மத்தியிலிருந்து அவற்றின் வயிறுகளிலுள்ளதிலிருந்து நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்.” (16 : 66)
சாணத்துக்கும் குருதிக்கும் இடையிலிருந்து பால் வெளிவந்த போதிலும் சற்றும் கூட அதில் சாணம், உதிரம் ஆகியவற்றின் நிறமோ, மணமோ, சுவையோ இருப்பதில்லை. இது எல்லாம் வல்லவனின் ஆச்சரியமான ஏற்பாடு.
பாலின் மகிமை, முக்கியத்துவம், அவசியம் பற்றி சமகால உலகு என்ன தான் தெரிந்து வைத்துள்ள போதிலும் அது பற்றி கூரை மேலேறி கொக்கரித்த போதிலும் தூய பால் இன்று மக்களுக்கு கிடைப்பது அரிது என விவசாய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கால்நடைகளுக்கு ஹோர்மோன் ஊசி ஏற்றி செயற்கை வழியூடாக பால் பெறுகின்ற சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தீய விளைவு இது.
ஹோர்மோன் ஊசியில் உள்ளடங்கியுள்ளவை கால்நடைகளுக்குள் சென்று பாலுடன் வெளிவந்து பாலை அருந்துபவர்களுக்கு பாதிப்பை உண்டுபண்ணுகிறது. சினையுற்று பால் தர வேண்டிய கால்நடைகள் குட்டி ஈனாது தமது குருதியை, கல்சியத்தை அளவுக்கதிகமாக பால் மூலம் வெளியேற்றுவதால் குறுகிய காலத்திலேயே நலிவுற்று போவதுடன் பால் சுரப்பும் குன்றிப் போகின்றது. அவற்றின் மடிக் காம்புகள் கூட நோயுறுகின்றன. குறுகிய காலத்தில் நிறையப் பணம்பண்ண வேண்டுமென்ற பேராசை அவனியை இப்பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது.
நமக்கு முன்னிருந்தோர் நோய் நொடி குறைவாக காணப்பட்டதற்கான காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுப் பண்டங்கள் நச்சுத்தன்மையற்றிருந்மை என இன்று பரவலாக நம்பப்படுகிறது, பேசப்படுகிறது. தூய பால் பருகி உடல் சுகத்தை, பலத்தை அவர்கள் உறுதி செய்தனர்.
கறப்பு கொஞ்சமாக இருந்தாலும் தரமான பால் கொஞ்சம் பருகினாலும் நலம் நலமேதான்.
கைத்தொழில் புரட்சிக்கு முன்னிருந்த ஆரோக்கியமான கலப்பற்ற பால் அருந்தும் நிலை நமக்கு மீண்டும் வரவேண்டும்.
ஆரோக்கியமான வெண்மைப் புரட்சி தோன்ற வேண்டும். கால்நடைகளின் நலன் உரிய முறையில் பேணப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் திட்டங்கள் வரைந்து காரியமாற்ற வேண்டும். இது இன்றைய தேவை.
நன்றி: இஸ்லாமிய அழைப்பு உலகம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons