MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே, 2012

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......

தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் 'செலினியம்' ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்', எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

தினசரி 4 கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள 'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்' கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.

வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான 'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை' கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
 

தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

சராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.

சாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். 'டயட் ' குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

காலை உணவும், மதிய உணவும் 11 மணியை தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.
பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.
 
நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.
அங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.
மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.


நன்றி :மின்னஞ்சல்

27 மே, 2012

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதிஅவதிதான். தெரியாதவர்கள் இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!என்றால் வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் சுர்ர்என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
1.   மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
2.   பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
3.   ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
4.   உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
5.   காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
6.   பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
7.   இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
8.   உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
9.   பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
10.  மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?
அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:
- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது
இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.
வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?
வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
1.   தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
2.   வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
3.   தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
4.   மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
5.   மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
6.   மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது:
வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- அபூ ஸாலிஹா

26 மே, 2012

பெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்!


''பனை மரம் செத்த காலம் பஞ்சப் பேயி வந்த காலம் டோய் - கிராமப் புறங்களில் பேச்சுவாக்கில் இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். வேடிக்கையாகச் சொல்லும் இந்த வார்த்தை இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய் எங்கும் வறட்சி. தென் மாவட்டக் கிராமங்கள் குடிக்கக்கூட தண்­ரின்றி கிராமம் கிராமமாக காலியாகி வருகின்றன. வெறுமை சூழ்ந்து பூட்டிக் கிடக்கும் வீடுகளே இன்றைக்கு பெரும்பான்மையான கிராமங்கள். 

கிராமங்களில் நிலைமை இப்படியிருக்க நகர்ப்புறங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பயங்கரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. காசு கொடுத்தும் தண்­ர் கிடைக்காத அளவிற்கு மாநகர்களில் இன்றைக்கு ''குடிநீர்ப் பஞ்சம்.'' விளைவு - நகரத்துக் கடைகள் தோறும் கடையின் முகப்பை மறைத்தபடி தொங்குகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ''வாட்டர் பாட்டில்கள்.'' தவிச்ச வாய்க்கு தண்­ர் கொடுத்து விருந்தோம்பிய விவசாயிகள் இன்றைக்கு ''வாட்டர் பாக்கெட்'' விற்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 

மக்கள் படும் இப்பாடு போதாதென்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குடிநீரை ''கண்டபடி எடுத்துக் கொள்ளும் உரிமையை'' தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இருக்கிற ''தண்­ர்ப்பஞ்சம்'' போதாதென்று பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செயற்கையான முறையில் ''குடிநீர்ப் பஞ்சத்தையும் உருவாக்கி விட்டார்கள். ''முதலாளித்துவம் எதனையும் காசாக்கும் கூர்மையான அறிவு படைத்ததாகும்'' என்று அறிஞர் மார்க்ஸ் கூறியது போல இன்று அது குடிநீர்ப் பஞ்சத்தையும் காசாக்கி வருகிறது ''மினரல் வாட்டர்'' எனும் பெயரில்.
 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் இந்தியாவில் ''மினரல் வாட்டர்'' என்ற பெயருடன் 1967 ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது. பெல்ஸ் பிஸ்லரி (Bisleri) எனும் இத்தாலியப் பெரு முதலாளி முதன் முதலில் இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்த நாடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களுடன் தண்­ரைச் சேர்த்து சுத்திகரிப்பு செய்து, மினரல் வாட்டர் என ''உல்டா'' செய்தும் ''உடல் நலத்திற்கு மிகவும் நல்லது'' என்று பசப்பு வார்த்தை கூறியும் விற்பனை செய்தார்கள். அதே உல்டாவை இந்தியாவில் செயல்படுத்த நினைத்த முயற்சி எடுபடவில்லை. உல்டாவை தொடர்ந்து செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். 1993 -ஆம் ஆண்டு கோ கோ கோலா கம்பெனி குடிநீர் விற்பனையில் ஆணித்தரமாக காலூன்றியது.
 

1998 - ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் குடிநீர் சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ''சாதாரண குடிநீர் பாட்டில்களில் மினரல் வாட்டர் என்று போடக்கூடாது'' என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பன்னாட்டுக் கம்பெனிகள் எல்லாம் ஒன்று கூடி ''பாதுகாப்பான் குடிநீர்'' என்ற பெயரை மாற்றி, மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். இது தான் இந்திய பாட்டில் குடிநீர் வரலாறு.
 

''மினரல் வாட்டர்'' என்ற ஒரு பெயர் மயக்கத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் மற்றும் வியாபார யுக்திகளின் மூலமாக ஏற்படச் செய்து. பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் கம்பெனிகள் விற்பனை செய்வதெல்லாம் சுத்திகரிக்கப்பட்ட சாதாரண குடிநீரே. பாட்டிலில் உள்ள லேபிளை சற்று உற்று நோக்கினால் எங்குமே ''மினரல் வாட்டர்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படிப் போடுவது சட்டப்படி குற்றம். எனவே இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன தெரியுமா? Pure Water/ Purified Drinking Water/ Packed Drinking Water/ Protected Water/ Bottled Water என்ற வார்த்தைகளைத்தாள். ஆனால் நாமோ ''மினரல் வாட்டர்'' என்று கூறிக் கொண்டு ''எனர்ஜி டானிக்'' குடிப்பது போல் குடித்து மகிழ்கிறோம்[!] இந்த வாட்டர் வகைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் பெப்சி (Aquafina), கோகோகோலா(KinleY). பிரிட்டானியா(Evian), கோத்தாரி(Yes, ganga), கோத்ரேஜ் (Aquapure), நெஸ்லே மெக்டவல், சாபோல்ஸ் (Sabols) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள்தான்.
 

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கையில் சூட்கேஸைப் பிடித்துக்கொண்டு, மறுகையில் வாட்டர் பாட்டிலை ஏந்திக் கொண்ட செல்வோரை ''சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்'' என்று மிரட்சியுடன் பார்த்த காலம் இருந்தது. வாட்டர் பாட்டிலை வெளிப்படையாக எடுத்துக் செல்வது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. கலர்பான கம்பெனிகளுக்கும், குடிநீர் விற்பனை கம்பெனிகளுக்கும் ஒரு கடுமையான வியாபாரப் போட்டியே கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
 

இந்தியாவில் 1994-ஆம் ஆண்டு தான் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை பரவலாக்கப்பட்டது. 1998-99 இல் 80%, 2000 இல் 150%, 2001 இல் 400%, 2003 இல் 600% என்ற வளர்ச்சி வேகத்தில் குடிநீர் வணிகம் நடந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ.800/- கோடிக்கு விற்பனை செய்தார்கள். 2004-ஆம் ஆண்டில் ரூ.5200/- கோடிக்கு இந்தியாவில் குடிநீரை விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
 

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குடிநீர் விற்பனை அதிகமாகப் பெருகியுள்ளது. தமிழகத்தில் ரூ.750/- கோடிக்கு குடிநீர் விற்பனையை இலக்கு வைத்து வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் சென்னையில் 2002-ல் ரூ.200 கோடிக்கு இருந்த குடிநீர் சந்தையை 2003-ல் ரூ.300/- கோடிக்கு உயர்த்தியுள்ளார்கள். 2004-ல் ரூ.500/- கோடிக்கு குடிநீர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் கேரளாவிலோ 20% க்கு மேலாக குடிநீர் விற்பனையைப் பெருக்க முடியவில்லை. அங்குள்ள தென்னை மரம் வளர்ப்போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் இணைந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் முயற்சியை முறியடித்தனர். தண்­ரை விற்றால் இளநீர் வியாபாரம் பாதிக்கப்பட்டு ரத்தக் கண்­ர் சிந்த வேண்டிய அபாய நிலை வருமென்று முன்கூட்டியே உணர்ந்து போராடி குடிநீர் வியாபாரத்தை முடக்கிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் போராடிய மக்களையெல்லாம் இங்குள்ள கட்சிகள் (ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர) வேடிக்கை பார்த்தன.
 

சமீபத்திய விளம்பரம் ஒன்றில் ஒரு சொகுசு காரின் ரேடியேட்டரில் பாட்டில் குடிநீரை ஊற்றுவது போல் காட்டி ''Drink and Drive'' என்ற வாசகத்தையும் காட்டுகிறார்கள். அதாவது ''மனிதர்கள் மட்டுமல்ல.. இயந்திரங்களும் குடிநீரையே உட்கொள்ளும்'' என்று. ஆகா! பலேபலே! ஆனால் நம்மவர்கள் தான் பாவம். வாட்டர் பாட்டில் வாங்கி ''ரேடியேட்டரில்'' ஊத்திக் தொலைக்கிறார்கள் [!]
 

இத்தகைய பெரும் வணிகச் சுரண்டலை நடத்தும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனத்தினர் ''மினரல் வாட்டர்'' வாங்கச் சொல்வதன் காரணம் என்ன தெரியுமா? ''நகராட்சி குழாய்களில் வரும் தண்­ர் சுத்தமானதாக இல்லை. குடிநீர் வடிகட்டி சாதனம் சரியாக வேலை செய்வதில்லை. எனவே வெளிநாட்டு நவீன முறைப்படி வடிகட்டப்பட்ட சுத்தமான தண்­ரை வாங்கி அருந்துங்கள்'' என்பதே. அப்படியானால் இவர்கள் விற்பனை செய்யும் ''பாட்டில் குடிநீர்'' உண்மையிலேயே தரமானதா? அதுதான் இல்லை.
 

சமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றப்புறச் சுழல் மையம் (Centre for Science and Environment) என்ற அமைப்பு பாட்டில் குடிநீரை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில் 21 நிறுவனங்களின் ''பாட்டில் குடிநீரில்'' விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. பிஸ்லரி, ந்துஸ்தான் கோகோ கோலா, சர்டிமில்க் புட், பெப்சி, கோ, கோத்தாரி, வைபவா, சர்துல் மினரல், வைஷாலி மினரல் என தடைசெய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் தங்களை ''மினரல் வாட்டர்" என்று கூறிக்கொண்டவைகள். இவர்கள் பாஷையில் 32 வகையான நஞ்சைக் கலப்பது தான் ''மினரலோ'' ! [?] இருக்கலாம்.
 

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏதோ பெட்ரோல், டீசல் நிலையம் திறப்பதைப் போல ''குடிநீர் நிரப்பும் நிலையம்'' திறக்கப்பட்டுள்ளது. சாயி எண்டர் பிரைசஸ் கம்பெனியிலிருந்து 300 மி.லி. ரூ.1 (பிளாஸ்டிக் பையுடன் ரூ.2க்கும்) 1 லிட்டர் ரூ.2 (பிளாஸ்டிக் பாட்டிலுடன் ரூ.6க்கும்), 5 லிட்டர் ரூ.10 (பிளாஸ்டிக் கேனுடன் ரூ.25க்கும்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே ஒரு வியாபார மோசடியையும் நாம் கவனிக்க வேண்டும். விளம்பரம், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் எதுவுமின்றி நேரிடையாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் ரூ.6 என விற்கப்படுகிறது. அதே குடிநீரை மற்ற கம்பெனிகள் வெளியில் விற்றால் 1லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.12. ஆனால் ரயில் நிலையத்திற்குள் விற்றால் ரூ10. ஒரு லிட்டர் குடிநீருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.4 கூடுதலாகவும், வெளியே ரூ.6 கூடுதலாகவும் என ''ரேட் பிக்சிங்'' செய்து கொண்டு பொது மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.
 

''ஆசியாக் கண்டத்திலேயே சிறந்த குடிநீர்'' என்று கூறப்படும் கோவை சிறுவாணி குடிநீரைக்கூட ஒரு லிட்டர் ஒரு காசு என தமிழ்நாடு குடிநீர் வாரியம் விற்பதில்லை. ஆனால் நயா பைசா பெறாத குடிநீரை ஒரு லிட்டர் ரூ.12/- க்கு தனியார் கம்பெனிகள் IS:14543 தர முத்திரை என்ற பெயரில் விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டாமா? ''ஊழலற்ற நேர்மையான அரசு'' என கூறிக்கொள்ளும் தமிழக அரசு இதில் ஏன் தயக்கம் காட்டுகின்றது?
 

சென்னையில் TEAM என்ற நிறுவனம் குடிநீரை ''மூலிகை நீர்'' (Herbal Water) என்று பெயரிட்டு ''சருமத்திற்குப் பாதுகாப்பு'' என்று கூறி 20 லிட்டர் கேனை ரூ.100/- க்கு விற்பனை செய்கிறது. இதே போன்று தமிழகமெங்கும் ஆங்காங்கே போலிப் பெயர்களுடன் வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றவையா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்து விடுகிறோம். எந்த தேதியில் ''பேக்கிங்'' செய்யப்பட்டது? எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது? என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இது போன்ற பல்வேறு ''குடிநீர் விற்பனைக்'' கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா [!?] என்பதே தெரியவில்லை. இவைகள் தத்தமது போக்கில் வியாபாரங்களை நிகழ்த்தி வருகின்றன.
 

குடிநீர் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் கிண்டி தண்­ர் பரிசோதனை நிலையம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வுக்கூடம் ஆகியவை மட்டுமே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. 1971- ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல இடங்கயில் குடிநீர் ஆய்வுக் கூடங்களை நடத்தி வருகிறது. அவைகள் அனைத்தும் தற்போது சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல. எனவே அவைகளுக்கு 1974-ஆம் ஆண்டு தண்­ர்ச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய பிரிவு 12, 13 இன்படி ஆவன செய்ய வேண்டும். அதுவரை குடிநீர் வாரிய ஆய்வுக் கூடங்களின் பரிசோதனை முடிவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மத்திய ஆய்வுக் கூடத்தின் கீழ் சட்ட ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இன்றைக்கு IS:14543 இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரம் என்ன? என்பதை தெளிவு படுத்த அரசுகளோ தனியார் நிறுவனங்களோ விளம்பரம் செய்யவில்லை. நாமும் நாள் பட்ட ''பாட்டில் குடிநீரை'' க் குடித்து விட்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றப்போக்கு, மஞ்சள் காமாலை காலரா மற்றும் žதபேதியில் சிக்கி žரழிந்து கொண்டிருக்கிறோம்.
 

தரமான குடிநீர் தேவையான அளவு பொதுமக்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் அன்றாடம் உடலிற்குத் தேவைப்படும் குடிநீர்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசுக்கு குடிநீர் வாங்கிக் குடித்து விடுகின்றனர். சாதாரண மக்கள்....? இதனால் சாதாரண, நடுத்தரத்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கு ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழியாக குறைந்த விலைகளில் பாட்டில் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்சினையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்....? யானைகளுக்கு இன்பச் சுற்றுலா கொடுத்த அரசு மக்களின் துன்பம் பற்றி செவிசாய்க்குமா?
 

வீட்டுக்கு வந்த உறவினர்களை மோரும் பழரசமும் தந்து உபசரித்த தமிழர்கள் இன்று. நள்ளிரவில் உறங்கக்கூட முடியாமல் தண்­ருக்காக அலைகிறார்கள். குழாயடிகளில் திடீர்ச் சண்டைகள், வெட்டு, குத்து. ''தண்ணிக்குப் போயி சண்டையா''....? என்று ''பெரிசுகள்'' அதிர்ந்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ''போர்'' போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

நன்றி: புதியகாற்று

25 மே, 2012

சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!


கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை... தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.

பிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.

பிரசவ அறிகுறிகள்

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதை ஒருநிலைப்படுத்துங்கள்

மூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.

மூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எண் கணக்கு

பெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..

முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.

நன்றி: தேட்ஸ்தமிழ்.காம்

23 மே, 2012

சுயமருத்துவம்... வேண்டாம் இந்த விபரீதம் ! உபயோகமான தகவல்கள்

'காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...'' 
- வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை.
இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை, எல்லா வகையான வலிகளுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக... ஆர்த்ரைட்டீஸ், கால் மூட்டுவலி, தசைவலி, மூட்டு எரிச்சல் போன்றவற்றுக்கு முதல் முறை பிரச்னை வந்ததும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வாங்கிய மாத்திரைகளை... அடுத்தடுத்த முறை அந்த வலி தோன்றும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகிறோம்.
''இது சரியா?'' என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கருணாநிதியைச் சந்தித்தபோது...
''வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கூட்டினார் டாக்டர்.
''என்னிடம் வரும் நோயாளிகளில் பாதிப் பெண்கள், 'கை, கால் குடைச்சல் தாங்க முடியல டாக்டர். வலி சட்டுனு போற மாதிரி மாத்திரை கொடுங்கஎன்பார்கள். ஏன் இந்த வலி நமக்கு வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட, வலி உடனே பறந்து செல்வதற்கு என்ன வழி என்றுதான் பலரும் அவசரப்படுகிறார்கள். இதற்குக் காரணம் வீட்டு வேலை, பிழைப்புக்கான வேலை என்று சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கைச் சூழல்தான்.
வலியைக் குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் 'நான்-நார்காடிக்’, 'நார்காடிக்என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் 'நான்-நார்காடிக்வகையில் 'நான் ஸ்டீராய்டல் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ்' (NSAID- Non Steroidal Anti-Inflammatory Drugs) மாத்திரைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புரூஃபன், அசிட்டமினோபென் போன்ற மாத்திரைகள் இந்த வகையில் அடங்கும்.''
''வலி நிவாரணிகளை அடிக்கடி விழுங்கு வதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?''
''ஒருமுறை வலி போவதற்காக நாம் பயன்படுத்திய மாத்திரையை அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வலி தோன்றும்போது டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் விழுங்கிப் பழகிக் கொண்டால்... அது மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்கிற 'அடிக்ஷன்பிரச்னையை உண்டாக்கும். அடுத்த கட்டமாக முதலில் வயிற்றில் புண் (அல்சர்) உண்டாகும். அதன் எதிரொலியாக குடலின் தோல் கிழிந்து, உள்ளேயே 'கேஸ்ட்ரிக் எரோஸன்எனப்படும் ரத்தக்கசிவு உண்டாகும். அதை உணராமலும், தெரியாமலும் 'வயிற்று வலி வயிற்று வலிஎன்று துடித்து, அதற்காக தனி சிகிச்சை எடுப்போம். சிலருக்கு வலி நிவாரணிகளைத் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால்கூட, பிரச்னை வரலாம். அடுத்து நேரடியாக பாதிக்கப்படுவது சிறுநீரகம்.
50 வயதைக் கடந்தவர்கள் வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்தும்போது, 'ஹைபர் டென்ஷன்மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபர் டென்ஷன் உண்டான பின்பும் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது மாரடைப்பு வரை செல்லலாம். கூடுதல் பரிசாக, ரத்தம் உறையும் பிரச்னையும் உண்டாக்கும்.
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்த
   பிரச்னை அதிகமாகும். சிலருக்கு இந்த மாத்திரைகளை சில நாட்கள் உட்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும்.''
''வலி நிவாரண மாத்திரை களால் ஏற்படும் விளைவு களைத் தடுப்பது எப்படி?''
''அறுவை சிகிச்சை, மூட்டு - தசை வலிக்குள்ளானவர்கள் வலி நிவாரணிகளை உட்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, முதல் முறை டாக்டரைச் சந்திக்கும்போது 250 மில்லி கிராம் அளவு மாத்திரையைக் கொடுத்திருந்தார் என்றால், சில நாட்கள் கழித்து அந்த வலி உண்டாகும்போது அதைக் குறைக்க 100 மில்லி கிராமே பரிந்துரைப்பார். அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக் கொள்ளும்போது, 250 மில்லிகிராமையே பயன்படுத்துவோம். இது ஆபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.
வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, 'ஆன்ட்டி - ஆசிட்மாத்திரைகளையும் சேர்த்து உட்கொண்டால், மாத்திரையால் உண்டாகும் அல்சர் வராமல் தடுக்க முடியும்.''
 

22 மே, 2012

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்! ஹலோ டாக்டர்


உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.

சிறுநீரக கல்:
 சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.

அறிகுறிகள்:
 இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் சிக்கல்:
புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.

வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.
http://pettagum.blogspot.in

20 மே, 2012

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்


உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.
கொழுப்பை கரைக்கும் உணவுகள்
கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.
சரி விகித உணவுகள்
காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
சூடான நீர்
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
வீட்டு உணவுகள் சாப்பிடலாம்
3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள். இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம். டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது. பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
பி பாசிட்டிவ்
உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
நன்றி: கண்ணோட்டம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons