2 ஏப்., 2011

நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல்
பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப் பதிவு.
மெமரி கார்டு , பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover  செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும்.
நம் மெமரி கார்டு அல்லது பெண்டிரைவ்-களை ரிப்பேர் செய்ய
கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில்
இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும்
அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணை கொண்டு அந்த
கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான
எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது. கணினி
பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்
ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள்
மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க
சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்னதான் நாம் மெமரி
கார்டில்  இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக
Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை
பார்த்துகொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் மெமரி கார்டின்
ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்றுவரை உள்ள்
அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்,
உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ்
நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வரைஸை நீக்கலாம்,வைரஸ்
பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க
வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore
என்பதை சொடுக்கி வரும் திரையில் இடதுபக்கத்தில் Memory
Card -
க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை
காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி
செய்து முடித்த பின் Memory Card - Format செய்து பயன்படுத்தலாம்.





16 மார்., 2011

மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .


மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்
தலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனேஉதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .
தலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .
எப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .
பொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்
அதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்
நோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .
பழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .
நோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .
இயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .
வாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்துவிட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .
இப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா ? யாருக்கு வெளிச்சமோ
தலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்
சீயக்காய் - ஒருபங்கு 
மணிப்புங்கன் - கால்பங்கு 
கடலைபருப்பு - ஒருபங்கு 
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம் 
செம்பரத்தை - தேவையான அளவு 
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு 
சடமான்சில் - ஐம்பது கிராம்
என தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் . 
தலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி
தலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்
கண்களையும் காக்கிறது
தலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .
வாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .
இரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .
உப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .
உப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .
வாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .
பொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை
பயன்படுத்தி நீக்கிக் கொள்க .

இலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்
முசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons