11 ஜன., 2012

விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்


கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.
முதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.
 
அடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்:
 நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்கள்:
 எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம். 

3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்:
 நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும். 
விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.
 

4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்:
 விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.

5. சர்வீஸ் பேக் பைல்கள்:
 நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.

6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்:
 விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.

7. இன்ஸ்டால் செய்தபின்:
 ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.

8.பாதுகாப்பு புரோகிராம்கள்:
 அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.

9. ரெஸ்டோர் பாய்ண்ட்:
 புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

10 ஜன., 2012

மடிகணினியை பாதுகாப்பது எப்படி


1.        மடிகணினியை  பயணம் செய்யும் போது  அதிக நேரம் பயன்படுத்த கூடாது .
2.         POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும் .
3.        ORINIGAL CHARGER  ரை  பயன்படுத்துவது நல்லது. 
       சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு .
4.        கணினியில் இருந்து   வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை   சமம்மான இடத்தில் 
       பயன்படுத்தவேண்டும் .
5.        அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)
6.        மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
7.        முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது .
8.         அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு  BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது 
9.        மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும்.
நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து  BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும்

9 ஜன., 2012

தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு


ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.
1 . அனால்ஜின்  ( Analgin)
பயன்பாடு
 - வலி நிவாரணி
பக்க விளைவு
 - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு
 - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் 
பக்க விளைவு
 - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன்  ( phenyl propanolamine )
பயன்பாடு
 - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் 
பக்க விளைவு
 - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு
 - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து 
பக்க விளைவு
 - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர்  (quinodochlor )
பயன்பாடு
 -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் 
பக்க விளைவு
 - கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு
 - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் 
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு
 - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு
 - வலி நிவாரணி
பக்க விளைவு
 - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு
 - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு
 - நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு
 - மலமிலக்கி
பக்க விளைவு –
 புற்றுநோய்
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா
1 .  அனால்ஜின்  - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட்
 -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன்
 - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு
 -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன்
 - Furoxone
6 . பைப்பரசின்
 -Piperazine citrate
7 . குயிநோடக்ளர்
 - Entero quinol

இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும்  செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.
ஆமாம், கடந்த வாரம் ஒரு முக்கியமான மருந்து தடை செய்யப்பட்டதற்கான காரணம் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா, அது வேறு ஒன்றும் இல்லை.
G.S.R. No. 510 (E) dt 25-7-2005 (with effect from 25-7-2005)
79. Valdecoxib and its formulations for human use.

மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்கவிளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது  என்று தடை கூட வந்தது.
ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துவிற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி,தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரின்தந்தையிடம் 200 கோடி கொடுத்தன ஒரு ஆறு மாதம் விற்பனை செய்தசம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானாஇருக்கிறானா என்று தெரியவில்லை.

8 ஜன., 2012

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

·         இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்
·         பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்

·         வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்
·         அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).

·         ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்
·         அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்

·         உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும்
·         பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
·         அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

·         உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

·         இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும்
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons