7 ஏப்., 2012

மின்சாரம் சேமிக்கலாம்

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும்.   அதற்கான சில ஆலோசனைகள்.

மின் விளக்கு அமைப்புகள்:

1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த  வழி.

2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.

3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.

4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.

5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில்மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.

6) சாதாரண குமிழி  விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல் விளக்குகளைப் பயன்படுத்தவும்.

7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.

 குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக்சோக்குகளை உபயோகிக்கவும்.

9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம்செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய 5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.

10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை
முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின்மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவைமின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும்உதவுகின்றன.

11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம்செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.

மின்விசிறி

1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.

2) மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைஉபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது.

3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.

4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.

5) மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.

கிரைண்டர்

1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.

2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும் உபயோகிக்கவும்.

3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில்அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.

வாஷிங் மெஷின்

1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும்.

2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.

குளிர்சாதனக் கருவி

1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியைதேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும்.

3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம்அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன்
தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.

6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்தஎரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.

அயன் பாக்ஸ்

1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை அயர்ன்செய்வதை தவிர்த்து, ஒரே நேரத்தில் மொத்த துணிகளை அயர்ன்செய்யவும்.

குளிர்பதனப் பெட்டி

1) குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.

2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடிதிறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப்பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.

4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.

5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கிபயன்படுத்துதல் வேண்டும்.

6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்குஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.

நீர் ஏற்றும் பம்பு

1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.

2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.

3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

4) நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.

5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை தெரிவிக்கும்/கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.

நீர் சூடேற்றி (ஹீட்டர்)

1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும்.

2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.

3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்பபாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும்.

கணினி

1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினைவீணடிக்கிறது.

2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை செலவழிக்கிறது.

3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர் மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.

4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.
மின் சேமிப்பு வீட்டிற்கும் நாட்டிற்கும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.
Thanks to PNOTIMES.com 

6 ஏப்., 2012

நீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா ?


காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான்... சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..? அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?
''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.
''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.
பசும்பால் வாங்குபவர்களுக்கு...
''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு...
'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)
வகை பால் வாங்குபவர்களுக்கு...
இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.
எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.
காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்'' என்று வழியும் சொன்னார் ஷைனி!
இதை ஆமோதிக்கும் சித்த மருத்துவர் ஜீவா சேகர், ''பாலை 'மைக்ரோ அவன்மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!'' என்பதையும் குறிப்பிட்டார்.
முழுமையான சத்துக்களைப் பெற, இனி பாலை சரியாகக் காய்ச்சுவோமா..?!

5 ஏப்., 2012

டிப்ஸ்... டிப்ஸ்....!


1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்
கொண்டு கழுவினால் சுத்தமா சூப்பரா கழுவி எடுத்து விடலாம்.

2. மிக்சியில் காரமான பொருள் அரைத்து விட்டு உடனே ஸ்வீட்டுக்கு தேங்காய் (அ) முந்திரி அரைக்கனும் என்றால் முதலில் மிக்சியில் கொஞ்சம் சோப், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுங்கள் அடுத்து மறுபடி தண்ணீர் போட்டு நன்கு கழுவி விட்டு ஒரு டேபுள் ஸ்பூன் மைதா (அ) அரிசி மாவு போட்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து கீழே ஊற்றி விட்டு அரைத்தால் அந்த கார வாடை அடிக்காது.

3. அரைக்கும் போது மிக்சி சூடாகமல் இருக்க கொஞ்சமா ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும்.

4. இல்லை பிரெட் துண்டுகளை போட்டு நன்கு ஓடவிட்டு எடுத்து விட்டு கூட அரைக்கலாம்
மருதாணி நன்கு சிவக்க
போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்
புருவத்தில் முடி வளர
புருவத்தின் முடி வளர விளக்கெண்ணெயையை தினமும் இரவு உறங்குவதற்கு முன் புருவத்தில் தடவி வரவேன்டும்
இதயம் வலிமை பெற
முருங்கை பூவை சுத்தபடுத்தி அதை எண்ணெய் கலந்து அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்க
சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.
மாதவிடாய்
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
கர்ப்பப்பை வலுவடைய
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்
கூந்தல் உதிரும் பிரச்னையா?
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
உடல் இளைக்க
தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.
பூண்டு எளிதாக உரிக்க
பூண்டு எளிதாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து உரிக்க வேண்டும்
தயிர் புளிக்காமல் இருக்க
தயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்
இஞ்சி பூண்டு விழுது கலர் மாறாமல் இருக்க
இஞ்சி பூண்டு விழுது டன் சிறிது உப்பு சிறிது எண்ணெய் சேர்த்து வைத்தால் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்
பிரியாணியின் சுவை அதிகரிக்க
பிரியாணி செய்வதற்கு முன் சிக்கனை தயிர் இஞ்சி பூண்டு மஞ்சள் பொடி போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்
உப்புமா ருசியாக இருக்க
எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா ருசியாக இருக்கும்
பாகற்காய் பழுக்காமல் இருக்க
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
புளியோதரை சூப்பராக இருக்க
ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்
ரவா உப்புமா
ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
மெதுவடை
மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.
பாகற்காய்
பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.
ரசம் ருசி அதிகரிக்க
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 
மோர் குழம்பு கமகமக்க
மோர்க்குழம்பு செய்யும்போது ஊறவைத்த துவரம்பருப்பு சீரகம் பத்து சின்னவெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால் வாசனை கமகமக்கும்
தூக்கம் நன்றாக வருவதற்கு
இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
தலைவலி சரியாக
கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
இளநரை மறைய
வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்
மீன்குழம்பு மணக்க:
மீன் குழம்பு தாளிக்கும் போது வெந்தயம் போட்டு தாளிக்க மணமும் ருசியும் அதிகரிக்கும்.
பூரி மொறு மொறு என இருக்க:
பூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க
புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து ,
காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து
வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்

4 ஏப்., 2012

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்



  • எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
  • அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
  •  தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
  • விட்டுக் கொடுங்கள்.
  • சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
  • நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
  • குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
  • உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
  • மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
  • அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
  • எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
  • கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
  • உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
  • மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
  • புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
  • பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
  • அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  • பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
  • தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.
நன்றி: விவா நினைவுகள்

3 ஏப்., 2012

மனைவியைப் புரிந்து கொள்ளுங்கள்


குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க மனைவி சொல் அப்படியே கேட்க வேண்டும் என்பது பற்றி?

ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!
கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்
ஆண்களேஉங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்….
  • அன்பாக பிரியமாக இருங்கள்அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.
  • மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.
  • சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!
  • எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.
  • உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.
  • எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.
  • மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.
  • மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.
  • பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.
  • இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
  • மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
  • அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!
  • எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.
  • மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.
  • ரொம்ப முக்கியமான விஷயம் இதுமனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.
  • கடைசியாககெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.
நன்றி: http://www.hi2forum.com

2 ஏப்., 2012

Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்


கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.  

இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள்  அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது. 

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

விண்டோஸ் 7  Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து வரும் Options  திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\sethc.exe c:\

இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe   

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.       

இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.  Login திரை தோன்றும் பொழுது, Shift Key 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)

Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (surya) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)

net user surya newpassword

அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7  DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

 c:\sethc.exe 
c:\windows\system32\sethc.exe.

 Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.
Thankssuryakannan

1 ஏப்., 2012

தண்ணீர் சிறந்த மருந்து


தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்
*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும். காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.கா லை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.
தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.
குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க
முறையாக தண்ணீர் குடியுங்கள்:
காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் குடித்தால், தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
* கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.
* முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உடம்பில் நீர் அளவை நிரப்புவது மட்டுமல்ல, மூளை உணர்ச்சியை தூண்டும்.
* மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்.
* படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தண்ணீரை முறையாய குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு   அதி வேகமாக செல்லும். அதனால்  ஹெர்னியா ஏற்படும்.
தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பளபளக்க செய்யும்.
தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.
தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.
நன்றி: தினகரன்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons