1 நவ., 2011

வாகனத்தில் எரிபொருள் சேமிக்க...!

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!
வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.

அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த டிப்ஸ்:

டயர் பராமரிப்பு :

டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.

சிக்னலில் சிக்கனம்:

சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.

ஏர்கன்டிஷன் :

கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.

வேகம் :

வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது.

தேவை என்ன?

சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.

ஓவர் லோடு :

தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.
முக்கியமானவை இன்னும் உண்டு.

1. விடிய வாகனத்தை (மோட்டர் குளிர் நிலையில் இருக்கும் போது) ஸ்டார்ட செய்து ஓடும் போது, முதல் சில கிலோமீற்றர்களுக்கு மெதுவாக ஓட்ட வேண்டும். (20 வீதத்திற்கு அதிகமான எரிபொருள் வீணாகும் இந்த நிலையில்)

2. கண்ணாடிகளை இறக்கி விட்டு ஓட்டுவது, அதிலும் 50 மீற்றருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் போது 20 வீதத்திற்கு அதிகம் வீணாகின்ரது.

3. 1,2,3 கியர்களில் வண்டியை தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக "ரேஸ்" பன்னுவதும் கூடாது.

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 1

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அபூ ரிஸ்வான் 

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோரும் வாங்கிச் செல்கிறார்கள்.
இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள்.
‘Shopaholic’ என்னும் சொல் ‘alcoholic’ என்ற ஆங்கில சொல்லின் பொருள்படும் ‘நிறுத்தாத குடிகாரன்’ மற்றும்  ‘workaholic’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் கொண்ட ‘இடைவிடாது பணிசெய்து கொண்டிருப்பவன்’ என்பது போன்றவையே! இப்படிப்பட்ட மனக்கட்டுப்பாடற்ற நிலை மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோமானால் அதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும்.
முதலாவது காரணம்: மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள். உலக மக்கள் பலமதங்களை பின்பற்றுபவர்களாக இருந்தும் இறைநம்பிக்கையும், மறுமைப்பற்றிய சிந்தனையும், இவ்வுலக வாழ்வு மிகக்குறுகிய, நிலையற்ற வாழ்வு என்னும் உண்ணமையும் மனதில் ஆழப்பதியாததே! அதிலும் இளைஞர்களின் எண்ணங்கள் இன்னும் விபரீதமாய் இருக்கின்றன. “வாழ்க்கை வாழ்வது ஒருமுறையே; அதனால் அவ்வாழ்க்கையில் எல்லாவிதமான இன்பங்களையும், சாதனங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும்” என்பது தான்.
 இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுக்கு தேவையான பொருட்களை மற்றுமின்றி தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் தான் இப்படி ‘ஷாப்பஹாலிக்காக’ (shopaholic) இருக்கிறார்களா என்றால் அவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வசதியுடையவர்களும் (middle class) இப்படிப்பட்ட மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பு எடுக்கப்ட்ட புள்ளிவிபரப்படி, 10 ஷாப்பஹாலிக்குகளில் 9 பேர் பெண்களாகவும் ஒருவர் ஆணாகவும் இருந்தார். தற்பொழுது ஆண்களிலும் இம்மனோநிலை கொண்டவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
இரண்டாவது காரணம்: பெருமையடிப்பது. மற்றவர்களிடம் இல்லாத புதுப்புதுவகையான பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தனது தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். கடைகளில் ஏதாவது புதிய மாடல் நகை விற்பனைக்கு வந்திருந்தால், பழைய நகைகளை விற்றுவிற்று அப்புதிய மாடல் நகையை உடனே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். பெருமையோடு தம் உறவினர்களிடமும், தோழிகளிடமும் காட்டுகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு முறையும் நகைகளை மாற்றும்பொழுது எந்த அளவுக்கு பணம் வீணாக செலவாகிறது என்பதை இப்பெண்கள் உணர்வதில்லை. இம்மனநிலையை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் இது ஒருவகையான ‘நாகரீகத்தின் மேல்படியில் நிற்பவர்கள் நான்தான் என்று காட்டும் மனநிலை’ என வர்ணிக்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: பொருட்களை தேவையில்லாமல் ஆசைப்பட்டவற்றையெல்லாம் வாங்கிக்குவிப்பது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு எத்தனை ஆடைகள் தேவைப்படும்? ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்ணாயிருந்தால் அவருக்கு 5 முதல் 10 சேலைகள் தேவைப்படலாம். செல்வந்தர்களாக இருந்தால் 10 முதல் 20 சேலைகள் வாங்கி அணியலாம். இவையெல்லாம் மிதமான தேவைகள். ஆனால் தற்காலத்தில் என்ன நடக்கிறது? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் சட்டை துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suit case) வைத்து கொடுக்க்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராய் இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான் தாயகம் திரும்பும்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரையில் வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார். இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை!
மேலும் சில பெண்கள் திருமணத்திற்கு அழைப்பின்பால் செல்லும் போது ஒரு புதிய சேலையை அணிந்துக் கொண்டுதான் செல்லவேண்டும்  என்று விரும்புகிறார்கள். ஒரு ஊரில் ஒருவருடத்தில் 25 திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு புதுப்புடவை வீதம் 25 புடவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் கூட இப்படிபட்ட வீண்விரயத்தை செய்யக்கூடாது என்று இருக்கும் போது நடுத்தரவர்க்க மக்கள் இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்து பொருளாதாரத்தை அழிக்கலாமா? இதை இறைவன் மறுமையில் விசாரிக்க மாட்டான் என்று இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
நான்காவது காரணம்: பெண்களிலும் சரி, ஆண்களிலும் சரி, தனது வீட்டை மற்றவர்களைவிட அலங்கரிக்க வேண்டும் என்ற மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. வீடுகட்டும் பொழுது அவ்வீடு அங்கு குடியிருக்கப்போகும் குடும்பத்தினருக்குப் போதுமான வசதியுடையதாகவும், போதுமான அறைகள் உடையதாகவும் இருக்கவேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமும். ஆனால் வீட்டின் உட்புறம் செய்யக்கூடிய வசதியைவிட வீட்டிற்கு வெளிப்புறமும் முகப்பிலும் பெரும்  அலங்காரங்களை செய்தும், தூண்களை கட்டியும், மேலும் மார்பில் (marble) போன்ற சலவைக்கற்களை சுவரெங்கும் பதித்தும் அலங்காரம் செய்வது வீண்விரயமாய் ஆகாதா? அதிலும் முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளைவிட முஸ்லிம்களின் வீடுகள் வீண் அலங்காரங்களின் உறைவிடமாக காட்சி அளிக்கின்றன.
 எனக்குத் தெரிந்த ஒருவர் – என்னுடன் சிறுவயதில் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர் – ஒரு மிகப்பெரிய அலங்காரமான வீட்டைக் கட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவருடைய தகப்பனார் கற்கோட்டையைப் போன்ற ஒரு பெரிய வீட்டை கட்டிவைத்துவிட்டுத் தான் மரணம் அடைந்தார். மகனுக்கு அந்த பழைய மாடல் வீடு பிடிக்கவில்லை. ஊரில் மதிப்பாகவும், அலங்காரமாகவும் புதிய வீட்டில் வாழ ஆசைப்பட்டார். ஆகையால் பழைய வீட்டை முற்றாக இடித்துவிட்டு அதே இடத்தில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டை கட்டிவிட்டார். இச்செயலை என்னவென்று கூறுவது? தன் தகப்பனார் கட்டிய வீட்டில் சிறுசிறு திருத்தங்களைச் செய்து அவர் நினைவாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? அல்லது வேறொரு இடத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தாலும் பரவாயில்லை! தற்காலத்தில் முஸ்லிம்களின் ஆடம்பரம் எல்லைக் கடந்து விட்டதை மேற்கூறிய ஒரு உதாரணத்தைக் கொண்டே அறியலாம்.
முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் – ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் – தனது ஆசையென்ன? வாழ்க்கைக்கு தேவையானவை என்னென்ன? என்று உணர்ந்துக் கொள்ளவேண்டும். மறுமை நாளை நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் இந்த ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்துக் கொண்டால் இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டும், அதேசமயம் வீண்விரயமும் செய்யாமலும் இறைவனுடைய உவப்பைப் பெற்று வாழலாம். நமது ஆசைகள்  எவை, தேவைகள் எவை என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? அதை அடுத்த பகுதியில் (PArt-2) இன்ஷா அல்லாஹ் காண்போம்.

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன்

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.
இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்;தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)
யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது(இப்னுமாஜா)
தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -
‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)
‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons