13 நவ., 2010

மர்பி விதிகள் 1001-1025

1001. தூரத்திலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்கும் எதுவும் பக்கத்தில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருப்பதில்லை. 

1002. நேற்றைய சாப்பாட்டுக்குத் தேவையானதை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்! 

1003. ஒரு குழந்தை என்பது மிகக் குறைவு, இரண்டு என்பது மிக அதிகம்! 

1004. ஒருவர் தான் இதுவரை பேசியதைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன் என்று சொன்னாரேயானால், அவர் ஏற்கனவே எடுத்துக் கொண்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று பொருள். 

1005. எழுத்துக் கோர்ப்பவர்கள் தெரிந்தே விடும் தவறுகளைத் திருத்தி விடுவார்கள். தெரியாமல் செய்த தவறு படிப்பவர்களால் மட்டுமே தெரிந்து கொள்ளப் படும். 

1006. அந்தத் தவறு தான் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தையே மாற்றியமைப்பதாக இருக்கும். 

1007. நான் உங்களுக்கு மூளையைத் தர முடியாமல் போகலாம். ஆனால் பட்டங்கள் தர இயலும். 

1008. தள்ளுபடியாகிவிடும் என்று நினைக்கும் வழக்குகளுக்கு ஏற்கனவே தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். 

1009. உங்களுக்கு எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகள் மீண்டும் ஒருமுறை நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். 

1010. கார் நிறுத்தும் இடம்: ஆறு கார்கள் கூட நிறுத்த இயலும் அருமையான இடம். எப்போதும் சாலைக்கு எதிர்புறத்திலேயே இருக்கும். 

1011. ஒரு 'U' திருப்பம் எடுத்து நீங்கள் அங்கே போய் காரை நிறுத்துவதற்குள் ஆறு கார்கள் ஏற்கனவே வந்து நின்றிருக்கும். :) 

1012. அப்படியே உங்கள் காரை நிறுத்தி விட்டாலும் திரும்பி நீங்கள் வர வேண்டிய கட்டிடத்துக்கு வந்தால் காரை நிறுத்த அருமையான இடம் காத்துக் கொண்டிருக்கும். 

1013. எவ்வளவு பெரிய கார் நிறுத்தும் இடமாக இருந்தாலும் ஒரு கார் இன்னொரு காரை எடுக்க விடாமல் வழியை மறித்தே நிறுத்தப் பட்டிருக்கும். 

1014. ஒரு அலுவலகத்தின் ஒரு மேலாளர் இன்னொரு மேலாளருக்கு வேலை உருவாக்கும் சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்! 

1015. ஒரு வேலையைத் தாமதமாகச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்று தான். 

1016. ஏற்கனவே உடைந்து ஒட்ட வைத்த எதுவும் திரும்பவும் விழுந்து உடைவதே இல்லை. 

1017. நீங்கள் தேடும் இடம் மட்டும் வரைபடத்தில் இருக்காது. 

1018. எத்தனை அதிக உணவு வகைகள் செய்கிறீர்களோ அத்தனை குறைவாகவே விருந்தினர்கள் வருவார்கள். 

1019. எதுவுமே முடிவல்ல. 

1020. இது தான் ஆரம்பம். 

1021. பகல் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட வேலை சுவாரசியமானதாகவே இருக்கும். 

1022. இன்றைய மோசமான திட்டம் நாளைய சிறந்த திட்டத்தை விட நன்றாகவே செயல்படுத்தப் படும். 

1023. வெற்றியும் அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

1024. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்காததாக இருக்கும். 

1025. உங்கள் காரில் இருக்கும் ஏ.சி. கடும் கோடையின் போது தான் ஹீட்டர் முழுமையாக இருக்கும் வண்ணம் மாட்டிக் கொள்ளும். உங்கள் கார் ஜன்னலும் அப்போது திறக்க வராது! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons