12 நவ., 2010

மர்பி விதிகள் 101-125


101. ஆசிரியருக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் பாடம் மாணவர்களுக்கு மிகவும் அறுவையாகவே இருக்கும்.

102. பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் நேரமும் அதை மாணவர்கள் பதிய வைத்துக் கொள்ளும் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

103. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கினால் அதன் பெருமை மாணவர்களையே சாரும். குறைந்த மதிப்பெண் வாங்கினால் வாத்தியார் தான் சரியாக நடத்தவில்லை.

104. எந்த மாணவனை அடிக்க ஆசிரியர் கையை ஓங்குகிறாரோ அவன் தான் பள்ளியின் தாளாளரின் பையனாக இருப்பான்.

105. புதிதாக நமது பள்ளிக்கு வந்து சேரும் மாணவர்கள் இதற்கு முன் எதுவுமே நடத்தாத பள்ளியிலிருந்து தான் வருவார்கள்.

106. நல்ல மாணவர்கள் வெளியேறிக் கொண்டே இருப்பார்கள்.

107. வகுப்பு நேரத்தை விட ஓய்வு நேரம் மிக அதிகமாக ஓடும்.

108. ஒரு வகுப்பில் 20 பேர் தான் இருக்க முடியும் என்றிருந்தால் உங்கள் விண்ணப்ப எண் 21 ஆக இருக்கும்.

109. இறுதித் தேர்வில் 80% கேட்கப்படும் கேள்வி நீங்கள் வராத அந்த ஒரு நாளில் நடத்தப்பட்ட பாடத்திலிருந்தும், நீங்கள் படித்திராத அந்த ஒரே ஒரு புத்தகத்திலிருந்தும் தான் கேட்கப்படும்.

110. (அ) நீங்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்றிருந்தால் நீங்கள் புத்தகத்தை மறந்து வைத்து விடுவீர்கள்.
(ஆ) நீங்கள் வீட்டில் வைத்தே தேர்வு எழுதலாம் என்றிருந்தால் வீட்டையே மறந்து விடுவீர்கள்.
(இ) இணையத்தில் வைத்து எழுதப்படும் தேர்வில் உங்கள் கடவுச் சொல் மறந்து போகும்(!)

111. அம்மாவிடம் இருந்து நீங்கள் இரண்டே சமயங்களில் தான் அறிவுரை பெற முடியும். நீங்கள் விரும்பும்போதும் விரும்பாத போதும்.

112. உங்கள் அம்மா ஒருவர் தான் உங்களை விட உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவர் ஆவார்.

113. நீங்கள் கேட்டுக் கடைபிடிக்காத அறிவுரை மட்டுமே உங்கள் அம்மாவிடம் இருந்து வந்த மிகச் சிறந்த அறிவுரையாக இருக்கும்.

114. நீங்கள் அம்மாவிடம் ரகசியத்தை மறைத்து விட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளாடையை யார் மாட்டி விட்டது - மறந்து விட்டீர்களா?

115. உங்கள் காதலி ஒரு தொலைபேசி எண்ணைக் கூறும் போது தான் அதை சேமிக்க ஒரு தாளும் உங்களிடம் இருக்காது.

116. உங்கள் கணிணியின் வன்பொருள் ஏதாவது பழுது பட்டால் அதைப் பார்க்கும் பழுது பார்ப்பவர் மென்பொருளைக் குறை கூறுவார்.

117. முந்தைய விதியை மாற்றிப்போட்டுக்கொள்ளுங்கள்!

118. ஒரு கணிணி மென்பொருளில் கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது.

119. ஏற்கனவே தாமதமாக இருக்கும் ஒரு மென்பொருள் வேலை புதிதாக ஆட்களைச் சேர்த்தால் இன்னும் தாமதமாகும்.

120. ஒரு கணிணியைப் பழுது பார்க்கும் ஒரு நபருக்கும் கணிணிக்கும் இடைப்பட்ட தூரமும் அக்கணிணியில் ஏற்படும் பழுது நீங்குவதும் எப்பொதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

121. நீங்கள் அதிகம் விரும்பும் செயலியை இயக்குவதற்கு தேவையான நினைவிடம் உங்களிடம் எப்போதும் இருக்காது.

122. நீங்கள் நினைவிடம் வாங்கி விட்டால் வன் தட்டில் இடமிருக்காது.

123. உங்கள் தரவுகள் நினைவிடத்துக்கு தகுந்தாற்போல் விரிவடைந்து கொள்ளும்.

124. உங்களிடம் நினைவிடமும் இருந்து, வன் தட்டில் இடமும் இருந்தால் அந்த மென்பொருள் இயங்காமல் உங்கள் கணிணியையும் செயலிழக்கச் செய்துவிடும்.

125. அவ்வாறு செயலிழக்கச் செய்யாது இருந்தால் அது அதற்கான தக்க தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons