13 நவ., 2010

மர்பி விதிகள் 1026-1050


1026. ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எவ்வளவு அதிகம் திட்டமிட்டும், கவனமெடுத்தும் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது தவறாக நடைபெறும். 

1027. மாலை 4.40க்கு மேல் பார்க்கும் அனைத்து வேலையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியதாகவே இருக்கும். 

1028. உங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டியதும் இல்லை. 

1029. திருத்தப்படக்கூடிய தவறுகளை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை. 

1030. முடிந்த வேலை முடிந்தது தான். எனவே அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. 

1031. உலகின் முதல் பொய்: இதுவரை இதை நான் செய்ததே கிடையாது. 

1032. நீங்கள் எந்த விசயத்தைப் பற்றி முழுதும் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு வரவே வராது. 

1033. நல்ல எண்ணங்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை. 

1034. முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த ஒரு கால் தான். 

1035. எதை நிலையில்லை என்று நினைக்கிறீர்களோ அதுவே நிலையானது. 

1036. எதை நிலையானது என்று நினைக்கிறீர்களோ அதுவே நிலையில்லாதது. 

1037. ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து எடுப்பதற்கு தேவைப்படும் சக்தி அதை மீண்டும் அதே இடத்தில் கனகச்சிதமாக வைப்பதற்கு ஆகும் சக்தியை விடக் குறைவாகவே இருக்கும். 

1038. நீங்கள் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை அரசாங்கத்திடம் இருந்து புறப்படும். 

1039. உங்களுக்கு எளிதில் புரிந்த விஷயத்தைத் தான் மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைக்க முடியாது. 

1040. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைத்து விட்டீர்களேயானால், உங்களுக்குப் புரியவில்லை என்று அர்த்தம். 

1041. நீங்கள் தவறாகச் செய்யும் காரியத்தை மட்டும் சரியாகச் செய்வீர்கள். 

1042. பணத்தைச் சம்பாதிக்கும் எளிய வழி அதைத் தொலைப்பதை நிறுத்துவதாகும். 

1043. எந்த நிர்வாகத்திலும் தேவையை விட அதிக மேலாளர்கள் இருப்பார்கள். 

1044. குறைந்தது 50 சதவீத உலக ஜனத்தொகை தனக்கு முன் தனது மாமியார் வருவதை விரும்புவதில்லை. 

1045. மேலாளர்களுக்கிடையே உறவை வளர்க்கும் நோக்கில் கொண்டு வரும் எந்த நடவடிக்கையும் அவர்களிடையே பகையையே வளர்க்கும். 

1046. எந்த மாற்றமும் முதலில் பார்க்கும் போது பெரியதாகத் தான் தெரியும். (புதுச் செருப்பு காலைக் கடிக்கும். பின் அதுவே பழகி விடும்) 

1047. ஒரு முட்டாள் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பது மலை மேல் இருக்கும் மனிதனைப் போல். அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனை யார் பார்த்தாலும் சிறியதாகத் தான் தெரிவான். 

1048. நேர்மையைத் தத்துவங்கள் மிஞ்சும் இடமே பல்கலைக்கழகம் எனப்படும். 

1049. அரசுக்கு அதிக செலவினத்தை உருவாக்கும் அரசியல்வாதியே ஜெயிப்பார். தொலைநோக்குக் காரர்கள் எல்லாம் சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். 

1050. சாத்தியமே இல்லாத ஒரு நிகழ்ச்சி, அது எதிர்பாராத குழப்பத்தை விளைவிக்குமானால் கண்டிப்பாக நடந்தே தீரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons