13 நவ., 2010

மர்பி விதிகள் 1126-1050


1126. இந்த உலகில் தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எளிதான பொருள் இன்னும் கண்டறியப்படவில்லை. 

1127. சூழ்நிலைகளே பல முட்டாள்களையும் மேதைகளாக உருமாற்றுகிறது. 

1128. யார் புகழப்படுகிறாரோ, அவரே வெறுக்கவும் படுவார். 

1129. உங்களுக்கு மரம் தேவைப்படும்போது தான் அலுமினியமும், இழைக் கண்ணாடியும், வினைல் பொருட்களும் கைகளுக்குக் கிடைக்கும். 

1130. சீர்திருத்தம் கீழிருந்து தான் மேலே வருமேயன்றி, மேலிருந்து கீழ் அல்ல.
1131. பயனுள்ள வகையில் இயற்றப் படும் எந்த ஒரு சட்டமும், பத்திரிகைகளின் கண்களுக்குத் தெரிவதே இல்லை. 

1132. இதுவரை திட்டப்படி எதுவுமே நடந்ததில்லை. 

1133. பிரச்னையை யார் உருவாக்கினார் என்பதைக் கண்டறிந்ததும் பிரச்னையைத் தீர்க்கும் வேலை முடிவடைந்து விடும்! 

1134. ஒரு பொருள் இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஏதும் இல்லையென்றால், அந்தப் பொருள் இருந்தே தீரும். 

1135. அரசியல்வாதிக்கும் நத்தைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், நத்தை தான் சென்ற பாதையில் தடம் ஏற்படுத்தியிருக்கும். 

1136. கணிணி தவறு செய்கிறது என்று சொல்வதன் பின்னால் இரண்டு மனித தவறுகள் இருக்கும். ஒன்று அந்தத் தவறைச் செய்தவர். இன்னொன்று, அந்தப் பழியைக் கணிணி மேல் போடுவது! 

1137. எந்தப் பணி மனிதனை நம்பி இருக்கிறதோ அப்போதே அது நம்பமுடியாததாகிறது. 

1138. அனுபவமும் தகுதியுமுள்ள தலைவர்கள் என்ன செய்தாலும் மக்கள் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்பார்கள். அனுபவமும் தகுதியுமில்லாத தலைவர் என்ன செய்தாலும் அதை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். 

1139. தவறுகளைப் பற்றிச் சொல்லும் எந்தப் பத்திரிகைச் செய்தியும் தவறோடு தான் இருக்கும். 

1140. புழுக்கள் குறைவாக இருப்பதால் கோழி குப்பையைக் கிளறாமல் இருப்பதில்லை!
1141. நிர்வாகத்தில் கெட்ட செய்தி மட்டும் எதிர் நீச்சல் போட்டு பரவும்! 

1142. நீங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணும் போது பிரச்னை தானே தீர்ந்திருக்கும்! 

1143. எழுதும் மையை அதிக அளவில் வாங்குபவருடன் (பத்திரிகையாளர்கள்?) எச்சரிகையாக இருங்கள்! 

1144. மிக மிக முக்கியமான கூட்டம் என்று நீங்கள் கருதும் கூட்டத்தில் தான் சாதாரண விஷயங்களுக்காக விவாதம் நடந்து கொண்டிருக்கும். 

1145. சந்தையிலிருந்து திரும்பும் போது உங்கள் வீட்டுச் சாவி எப்போதும் சரக்கு இருக்கும் பைக்கு அடியிலேயே இருக்கும். :) 

1146. இரண்டு மனிதர்கள் சேர்ந்து மூன்றாவது மனிதனின் பணத்தை எவ்வாறு செலவளிப்பது என்று திட்டமிடும் போது தான் திருட்டுத் தனம் ஆரம்பமாகிறது. 

1147. ஒரு விஷயம் நடக்க இருக்கும் நிகழ்தகவும் அதை எதிர்பாராமல் இருக்கும் நிகழ்தகவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

1148. குதிரைப் பந்தயத்தில் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் சீட்டு வெற்றி பெற வாய்ப்பே இருக்காது. 

1149. உங்களுக்கு உணவுப் பொட்டலத்தை விமான சிப்பந்தி வழங்கும் தருணத்தில் தான், விமானம் காற்றுப் பொட்டலத்துக்குள் பிரவேசிக்கும். (கனவுலகத்துக்குப் போய்ட்டீங்களா?!) 

1150. அந்தக் காற்றுப் பொட்டலத்தின் அளவு, நீங்கள் வாங்கிய தேநீரின் சூட்டுக்கு நேர் விகிதத்திலேயே இருக்கும். (அப்பாடி!! நனவுலகத்துக்கு வந்துட்டீங்களா?!)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons