13 நவ., 2010

மர்பி விதிகள் 1151-1175


1151. நன்றாகத் துடைக்கப்பட்ட கார்க் கண்ணாடியில் முதலில் மோதும் பூச்சி, உங்கள் கண்களுக்கு முன்னர் தான் சரியாக மோதும். 

1152. அதிகம் நடமாட்டம் இருக்கும் குறுகலான தெருவில் தான் அடிக்கடி கட்டிட வேலையும் நடைபெறும். 

1153. நீங்கள் நினைப்பது எப்போது மட்டும் சரியாக நடக்கும் தெரியுமா? நீங்கள் தவறாக நடக்கும் என்று கணிக்கும் போது மட்டும். 

1154. யார் குறைவான வேலை செய்கிறார்களோ, அவருக்குத் தான் அத்தனை புகழும் சென்றடையும். 

1155. அனுபவம் என்பது நீங்கள் எத்தனை இயந்திரங்களைப் பழுதாக்கி உள்ளீர்கள் என்பதைப் பொருத்தது. 

1156. சாலையில் வளரும் எந்தச் செடியும் எந்தக் கவனிப்பும் இல்லாவிடினும் வாடிப்போவதே இல்லை. வீட்டிலோ? 

1157. ஆற்றைக் கடக்கும் வரை படகோட்டியைக் குற்றம் சொல்லக் கூடாது. 

1158. இயந்திரம் வேலை செய்ய வேண்டும். மனிதன் சிந்திக்க வேண்டும். 

1159. எந்த வேலையையும் நீங்கள் செய்ததை விட எளிதாகச் செய்ய வழியிருக்கும். 

1160. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, ஒரு காரின் விலையை, ஒரு முறை முடிவெட்டும் செலவால் வகுத்துக் கிடைக்கும் விடையாகும். குறைவான விகிதம் இருந்தால் அது வளர்ச்சி அதிகம் என்றும் விகிதம் அதிகமாய் இருந்தால் வளர்ச்சி குறைவு என்றும் அர்த்தம்.
1161. இருவர் ஒரே அறையில் தங்கி இருக்கும் விடுதியில் ஒருவர் தூங்கும் போது தான் மற்றவர் வருவார். 

1162. மேற்கண்ட அறையில் ஒருவர் எழுவதற்காக வைக்கும் அலார ஓசை அந்த விடுதியையே எழுப்பி விடும் படி இருக்கும். 

1163. நீங்கள் எதையாவது கண்டறிய வேண்டுமெனின் தேட ஆரம்பிக்க வேண்டும். 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தொலைபேசி அழைப்பு 

1164. நீங்கள் வீட்டைப் பூட்டி வெளியேறிய உடன் அழைக்க ஆரம்பிக்கும். 

1165. குளிப்பதற்காகத் தலையில் தண்ணீர் ஊற்றியவுடன் அழைக்க ஆரம்பிக்கும். 

1166. அப்படியும் நீங்கள் ஓடிவந்து எடுத்தால் அது தவறான அழைப்பாகவே இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? 

1167. நீங்கள் தொலைபேசியில் அழைத்த நபர் அந்த நிமிடம் தான் வெளியே போயிருப்பார். 

1168. தொலைக்காட்சியில் முக்கியமான காட்சியை மட்டும் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். 

1169. பக்கத்து வீட்டுக் காரர் பார்த்திருப்பார் என்று அவரிடம் கேட்டால், "அது என்ன நிகழ்ச்சி?" என்று ஆரம்பிப்பார். :) 

1170. ஒரு விஷயம் தவறாக நடக்கும் முன்பே, ஒருவர் இது தவறாகவே நடக்கும் என்று எச்சரித்திருப்பார்.
1171. தூரத்தில் அழகாய்த் தெரிந்த எந்தப் பொருளும் அருகில் வந்தால் அழகாக இருப்பதில்லை. 

1172. தூரத்தில் அழகில்லாமல் தெரியும் பொருளும் அருகில் வந்தால் அழகாக இருப்பதில்லை. 

1173. ஒரு பறக்கும் தூசு பக்கத்தில் இருக்கும் கண் யாருடையதோ அவரை நோக்கியே வரும். 

1174. கண்டுபிடிப்பதை நிறுத்தி விட்டு, அதை முறைப்படி செயல்படுத்தும் காலம் எப்போதாவது வருமா? 

1175. பொறுமை இல்லாத மேலாளருக்குத் தான் குறும்புக்கார வேலையாள் மாட்டுவார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons