12 நவ., 2010

மர்பி விதிகள் 126-150


126. நீங்கள் எவ்வளவு தான் பேரம் பேசி வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் கணிணியின் விலை குறைந்து விடும். 

127. கணிணியில் உள்ள ஒரு பாகத்தின் உபயோகமிழக்கும் வேகமும் அதன் விலையும் எப்போதும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

127. ஒரு மென்பொருளினை சந்தைப்படுத்துவதற்கு முன் 1000 நபர்கள் அதை சோதித்திருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார்.

128. உங்கள் கணிணியில் பழுதாகும் பொருள் மட்டுமே உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதும் அதன் இருப்பு இல்லாதிருப்பதும் விந்தையே இல்லை.

129. மாறிலிகள் மாறிவிடும்.

130. மாறிகள் மாறுவதில்லை.

131. உங்கள் கையிலிருந்து விழும் ஒரு பொருள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு தூரம் அது கைக்கெட்டாத இடத்தில் போய் விழும்.

132. உங்கள் முதலாளியைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால் இணையத்தில் மேயுங்கள்.

133. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது தான் உங்கள் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்.

134. நீங்கள் சேமித்து வைக்காத முக்கியமான விஷயம் எந்த வன் தட்டில் இருக்கிறதோ அது தான் முதலில் பழுதாகும்.

135. மர்பி விதிகள் சரியாக இருந்தால் என்னால் எப்படி முத்தமிழ் மன்றத்தில் இந்த பதிவுகளைப் பதி................................................. [connection reset - error message 928 ]

136. எந்த ஒரு பிரச்னையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எளிய முறையில் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்.

137. எந்த ஒரு மென்பொருளும் 5 பிழைகளைக் கொண்டது. ஆனால் இது வரை கண்டுபிடித்த பிழைகள் கணக்கில் சேர்க்கப் பட மாட்டாது.

138. எந்தக் கணிணி உபயோகிப்பாளருக்கும் தேன் வந்து பாயும் மழலை வார்த்தைகள் "அப்பா! இந்த C: பார்மட் செய்யப்படுகிறது என்று கணிணி சொல்கிறதே அதன் அர்த்தம் என்ன ?" என்று குழந்தை கேட்பது தான்.

139. நீங்கள் ஒரே வரியில் ஒரு மென்பொருள் எழுதினாலும் அதிலும் பிழை இருந்தே தீரும்.

140. எந்த ஒரு மென்பொருளாக இருந்தாலும் நீங்கள் அதை முழுமையும் படித்தறிந்த உடனேயே அதன் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

141. ஒரு வைரசினால் ஏற்படும் பாதகங்களும் அது உங்கள் கணிணியைத் தாக்கும் வாய்ப்பும் நேர் விகிதத்தில் இருக்கும்.

142. நீங்கள் கடவுச் சொல் மாற்றும் வேகமும் அதை மறக்கும் வேகமும் நேர் விகிதத்தில் இருக்கும்.

143. கடவுச் சொல்லை மாற்றவே இல்லை என்றால் அதைத் தான் அடுத்தவர் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களே!

144. எவ்வளவு அதிக நேரம் ஒரு மென்பொருள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எடுத்துக் கொள்கிறதோ அவ்வளவு தூரம் அது செயல்படுவதற்கு வாய்ப்பில்லை.

145. ஒரு மென்பொருள் நல்ல மென்பொருள் தான் பிழை இல்லாதிருக்கும் வரை - ஆனால் அது சாத்தியமே இல்லை.

146. ஒரு மென்பொருளில் பிழை வரும் வாய்ப்பு கணிணியை எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள் அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பொருத்தது.

147. எந்த ஒரு மென்பொருள் கன கச்சிதமாக எந்த ஒரு பிழையுமின்றி எதிர்பார்த்தபடி செயல்படுகிறதோ அது வைரசைத் தவிர வேறெந்த மென்பொருளாக இருக்க முடியும்?

148. ஹும். இந்த மனிதர்கள் கணிணியை உபயோகிப்பது எவ்வளவு எளிதென்கிறார்கள்? நாம் கேட்பதோ நேரம் என்ன என்று. அவர்கள் சொல்வது எவ்வாறு ஒரு கடிகாரத்தை செய்வது என்று.

149. எல்லா பிழைகளையும் சரி செய்யும் ஒரே கட்டளை பார்மட் C: என்பது தான்.

150. உங்கள் வேலையில் உள்ள தவறுகளை நீங்கள் உங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு தான் காண்பீர்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons