13 நவ., 2010

மர்பி விதிகள் 1301-1325


1301. ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால் அதைத் திருத்துவதற்கு நேரம் இருக்கும். 

1302. பணம் என்பது சாணத்தைப் போன்றது. பரப்பி வைத்தால் எல்லோருக்கும் உதவக்கூடும். ஒரே இடத்தில் சேர்த்து வைத்தால் நாற்றமெடுக்கும்! 

1303. பொருளின் விலையும் அதன் உடையும் தன்மையும் எப்போதும் நேர்விகிதத்திலேயே இருக்கும். 

1304. நீங்கள் எத்தனை கஷ்டப்பட்டாலும் உங்களுக்குப் புரிந்த விஷயத்தை மற்றொருவருக்கு அப்படியே புரியவைக்க முடியாது. 

1305. அடுத்தவர் எத்தனை கஷ்டப்பட்டாலும் அவருக்குப் புரிந்ததை உங்களுக்குப் புரியவைக்க முடியாது. 

1306. அருங்காட்சியகத்தில் நீங்கள் ஆர்வமாகப் பார்ப்பதில் தான் எந்த விளக்கமும் இருக்காது. 

1307. மேதாவி என்பவர் உங்கள் ஊரிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கும் சாதாரண மனிதர் ஆவார். 

1308. தவறுகளுக்கு என்றும் எல்லையே இருந்ததில்லை. 

1309. ரகசியமான வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளே நம்பத்தகுந்தவை. 

1310. கையிலிருக்கும் பறவை தலைக்கு மேல் இருக்கும் பறவையை விட பாதுகாப்பானது!
1311. மாற்றுச் சக்கரத்திலும் காற்று இல்லாத போது தான் கடையில்லாத இடமாய்ப் பார்த்து சக்கரத்தில் ஆணி ஏறும். 

1312. அது பெரிய விஷயம் இல்லையென்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள். 

1313. அது உங்களால் மாற்ற முடியாத விஷயமென்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள். 

1314. அது அடுத்தவரின் பிரச்னை என்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள். 

1315. எளிதாகச் சரி செய்ய முடிகின்ற எந்தத் தவறையும் யார் செய்தார்கள் என்று பார்ப்பதில்லை. 

1316. நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கற்றுணர்ந்த பின் அதை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பமே வாய்க்காது. 

1317. முடிவில்லா மோசங்களை விட மோசமான முடிவு சாலச் சிறந்தது. 

1318. ரொம்பக் கைராசிக்கார மருத்துவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவும். 

1319. ஒரு பொருளின் 7/8 பாகம் எப்போதும் மறைவிலேயே இருக்கும். 

1320. அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் வரிகள் பற்றிப் பேசுவதில்லை.
1321. மேதாவியிடம் நேரம் என்று கேட்டால் உங்கள் கடிகாரத்தைப் பார்த்துத் தான் பதில் சொல்வார். 

1322. மேதாவி என்பவர் உங்கள் ஊரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் அழகான கைப்பெட்டி வைத்திருக்கும் முட்டாள் ஆவார். 

1323. நாட்டில் இருக்கும் பத்தில் ஒருவர் முன்னேற மீதி இருக்கும் ஒன்பது பேர் உழைப்பார்கள். இது வளரும் நாடுகளில் இன்னும் அதிகமாகும்! 

1324. புதிய அறிவியல் வரவானது எப்போதும் இடத்தைச் சுருக்கவும், காலத்தைக் குறைக்கவும், தொழிலாளர்களை மிச்சப்படுத்தவுமே இருக்கும். 

1325. வெறுங்கால் என்னும் காந்தம், கூர்மையான பொருட்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையது. அதிலும் கூர்மையான பக்கம் மேற்புறமாக இருப்பது இருளில் தான் அதிகம் இருக்கும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons