13 நவ., 2010

மர்பி விதிகள் 1326-1350



1326. பிரச்னை பெரியதாக இருந்தால் எளிதான, மலிவான தீர்வுகள் எல்லாமே ஒதுக்கப்பட்டு விடும். 

1327. முட்டாளுக்கும் திருடனுக்கும் உள்ள ஒரே வேற்றுமை என்னவென்றால், முட்டாள் திட்டத்தை முறியடிப்பதில் எதிர்பார்க்காமலும், மிகப் பெரிய விளைவை உண்டாக்கும் வண்ணமும் செயல்படுவான்! 

1328. வாயில் வைத்திருக்கும் சிகரெட்டானது அறிவாளிக்கு சிந்திக்கும் திறனையும், முட்டாளுக்கு மதியீனத்தையுமே வழங்கும். 

1329. முட்டாள்கள் இருந்த இடத்துக்கு படுமுட்டாள்களே வந்து அமைவார்கள்! 

1330. இந்த உலகில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். 1. அமைதியாக செயலேதும் புரியாமல் அமர்ந்து இருப்பவர்கள். 2. அப்படி இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள். 3. செயலைப் புரிவதாகச் சொல்லிக் கொள்பவர்கள். 4. செயலைச் செய்பவர்கள்!
1331. எந்தப் பொருளையும் அதன் முழுத் தகுதிக்கும் உபயோகிக்க ஆரம்பித்தால் அது உடைந்து போகும். 

1332. நீங்கள் என்ன செய்ய மாட்டீர்கள் என்பதை யாரிடமும் சொல்லாதீர்கள். 

1333. அதிகாரத்துவத்தை அழிக்க வேண்டுமானால் உங்கள் பிரச்னையை அவர்கள் பிரச்னையாக மாற்ற வேண்டும். 

1334. எந்த முயற்சியும் நூறு சதம் தோல்வியைத் தழுவுவதில்லை. எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாகவாவது அது இருக்கும். 

1335. சந்தேகப் படும் கருத்தை நம்ப வைக்க உரக்கச் சொல்லுங்கள். 

1336. எல்லோரையும் திருப்திப் படுத்த நினைத்தால் யாரையும் திருப்தி படுத்த முடியாது. 

1337. பிரச்னையைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நாமும் தான் பிரச்னைக்கு அதி முக்கிய காரணம் என்பது தெரிய வரும். 

1338. நீங்கள் ஒரு விஷயம் செய்ய முடிவெடுத்திருக்கின்றீர்கள். அது சரியே! ஆனால் அதற்கு முன் முடிக்க வேண்டிய விஷயம் முடிந்தால் தானே இதைச் செய்ய முடியும். அதைத் தான் மறந்து போவீர்கள். 

1339. நால்வரில் ஒருவர் எப்போதும் முட்டாளாம். உங்கள் நண்பர்கள் மூவரைக் கண்காணியுங்கள். அவர்கள் இல்லையென்றால் அது நீங்களாகத் தான் இருக்கும். 

1340. பொது மேடையில் நயமாகப் பேசுபவர்கள் சீக்கிரம் முடித்து விடுவார்கள்.
1341. பழச்சாறையும் பருக வேண்டும், சுகாதாரமாகவும் சாப்பிட வேண்டும் என்பவர்கள், பழச்சாறு தயாரிப்பதைப் பார்க்காமல் இருப்பதே நல்லது. 

1342. குளியலறையில் கனத்த மனிதர் ஒல்லியான மனிதரை விட அதிகம் சோப்பை செலவளிப்பார். 

1343. வெளியீடை மதிப்பிட முடியவில்லை என்றால் பரவாயில்லை, உள்ளீடை மதிப்பிடுங்கள். 

1344. ஒரு அறிவியல் விதி சரிவரவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றது விதிவிலக்கு. 

1345. தவறு என்று திருத்திய பின் தான் அது தவறில்லை என்று தெரியவரும். 

1346. அப்படிச் செய்த தவறை பின் எப்படியும் திருத்த முடியாது! 

1347. தேடாத பொருள் எளிதில் கிடைக்கும். 

1348. தேடிய பொருள் கிடைத்தவுடன் அடுத்த பொருள் காணாமல் போகும். 

1349. பத்திரப் படுத்திய பொருள் தேவைப்படுவதில்லை. 

1350. தேவைப்படும் பொருள் பத்திரப்படுத்தப்படுவதில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons