13 நவ., 2010

மர்பி விதிகள் 1351-1375


1351. வாடகை வண்டியில் ஏறும் முன் வாடகை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. 

1352. ஒரு உயரந் தாண்டும் போட்டிக்காக தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், 7 அடி உயரம் தாண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமேயன்றி, 7 ஒரு அடி உயரம் தாண்டுவோரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. 

1353. உள்ளே சென்ற எதுவும் வெளியே வந்து தான் ஆக வேண்டும். 

1354. மோசமானவர்களைக் கேலி செய்வது எளிது. யாரும் அன்பு காட்டாவிட்டால் நீங்களும் மோசமானவர் ஆகி விடுவீர்கள். 

1355. நான் செய்வது தவறு என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் செய்வது தவறு தான்! 

1356. நான் செய்வது தவறு என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் நினைத்தது சரி தான்! 

1357. எந்த முட்டாளும் சட்டம் போட முடியும். எல்லா முட்டாள்களும் அதை மதிப்பார்கள். 

1358. ஒரு பொருளை எல்லாரும் வெறுத்தால் ஏன் என்று பார்க்க வேண்டும். எல்லாரும் விரும்பினாலும் ஏன் என்று பார்க்க வேண்டும். 

1359. ஒரு பொருளை வாங்கும் வரை அதை வைத்து என்ன செய்யப் போகின்றோம் என்று தெரியாது. வாங்கியவுடன் நாம் நினைப்பதைச் செய்ய முடியாது என்று மட்டும் தெரிந்து விடும். 

1360. நல்ல நேரம் சீக்கிரம் முடிவடைந்து விடும். கெட்ட நேரம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது.
1361. மோசமான சட்டத்தை நீக்குவதை விட அதை எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் அரசாங்கம் நினைக்கும். 

1362. தூரத்தில் சரியாகத் தெரிவது பக்கத்தில் தவறாக இருக்கும். 

1363. தூரத்தில் தவறாகத் தெரிவது பக்கத்திலும் தவறாகவே இருக்கும். :) 

1364. தோற்றத்தைப் பார்த்து ஏமாறக் கூடாது என்று நினைத்துக் கொண்டே ஏமாறுவோர் தான் அனைவரும். 

1365. நீங்கள் எங்கே எந்த நிலையில் இருந்தாலும், அங்கே அந்த நிலையில் தான் இருப்பீர்கள். 

1366. பறக்கும் தூசு சரியாக பக்கத்தில் இருக்கும் கண்ணைத் தேடித் தான் போகும். 

1367. ஒரு நிர்வாகம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தால், அங்கே வேலை குறைவாய் நடக்கின்றது என்று பொருள். 

1368. எந்த ஒரு பொருளின் 7/8 பாகமும் கண்ணுக்குத் தெரியாது. (அதாவது நமக்கு எட்டுத் திசையில் ஒரு திசையில் இருந்து தான் பார்க்க முடியும் என்று மர்பி தெளிவாய்ச் சொல்கின்றார் பாருங்கள்!) 

1369. உங்களுக்குச் சரியென்று தோன்றும் போது, நீங்கள் செய்வது தவறு என்று சொல்பவரை நம்புங்கள். 

1370. நீங்கள் செய்வது தவறென்று தோன்றும் போதும், இன்னொருவர் நீங்கள் செய்வது சரி என்று சொன்னால், தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.
1371. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பார்க்கும் கணக்குகள் அனைத்தும் தவறாகவே இருக்கும். 

1372. உங்களுக்கு ஒரு விஷயம் அழகாய்ச் செய்ய கைவந்து விட்டதென்றால் அதை மீண்டும் செய்யும் வாய்ப்பே வரப்போவதில்லை என்று அர்த்தம். 

1373. ஒவ்வொருவர் வாழ்விலும் மிகச் சிறந்த நாள் என்று ஒன்று இருக்கும். அந்த நாள் உங்களுக்கு ஏற்கனவே முடிந்திருக்கும். 

1374. யாராலும் எதையும் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியாது. 

1375. உலகில் எந்த இரு நபர்களும் ஒரு விஷயத்தை ஒரே மாதிரி புரிந்து கொள்ள முடியாது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons