13 நவ., 2010

மர்பி விதிகள் 1375-1400


1376. எந்த ஒரு மாற்றமும் துவக்கத்தில் பூதாகரமாகத் தான் இருக்கும். 

1377. முடிவில்லா மோசங்களை விட மோசமான முடிவு எவ்வளவோ மேல். 

1378. அரசியல் நடத்துவது என்பது கால்பந்து நடுவரைப் போல. உங்களுக்கு விளையாட்டு தெரிந்திருக்க வேண்டும் ஆனால் விளையாடக் கூடாது! 

1379. கிடைப்பதற்கு அவசரப்படுபவர்களுக்கு மோசமான பொருளே கிடைக்கும். 

1380. எந்தக் குழந்தையும் அசுத்தமான சுவரில் கிறுக்காது.
1381. உலகில் சின்ன வேலை என்று எதுவுமே கிடையாது. (அலுவலகம் போகும் வழியில் ஒரு 'சின்ன' வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துட்றேன்!) 

1382. உங்கள் எதிராளி களைப்படையும் போது, இன்னும் உதையுங்கள். 

1383. ஒவ்வொரு சிறிய பிரச்னைக்குள்ளும் ஒரு பெரிய பிரச்னை வெளியே வரத் தவித்துக் கொண்டிருக்கும். 

1384. அவசரமானது முக்கியமானதில்லை. முக்கியமானது அவசரமானதில்லை! 

1385. தொழிலாளிகளுக்கிடையே இருக்கும் சிறு சிறு மனக்கசப்பே நிறுவனத்தின் மொத்த ஆரோக்கியமாகும். 

1386. ஒரு எதிரியை உருவாக்க வேண்டுமா? யாருக்காவது ஏதாவது உதவி செய்யுங்கள்! 

1387. பத்திரிகையாளரின் தத்துவம்: ஒரு தலைப்புச் செய்தி கேள்விக்குறியோடு முடிந்திருந்தால், பதில் இல்லை என்பதாகும்! 

1388. சமைக்கும் போது ஒரு பண்டம் தவறாகச் சமைத்து கெட்டுப் போனால், அதை ருசியாக்க உபயோகிக்கும் எதுவும் மேலும் மோசமாகவே ஆக்கும். 

1389. உங்களுக்கும் உலகுக்கும் நடக்கும் சண்டையில் உலகைப் பின் தள்ளுங்கள். வெற்றி உங்களுக்குத் தான். 

1390. பொருளாதாரம் சம்பந்தமாய் யாரேனும் அரசியல்வாதி பேசினால், அவரது பேச்சை விட, செயல்பாடுகளைக் கவனியுங்கள்!
1391. எந்த முதலாளிக்கும் உருப்படியான தொழிலாளி எந்நேரமும் கிடைத்துக் கொண்டிருக்க மாட்டார். 

1392. ஒரு சிறந்த ஆசிரியரிடம் அவருக்குத் தெரிந்த விஷயத்தை விட, தெரியாத விஷயத்தை நடத்தச் சொல்லித் தான் உத்தரவு வரும். 

1393. ஒரு பொருளில் கெட்டுப்போன பாகங்களிலிருந்து பிரிக்க முடியாததாகவே நல்ல உருப்படியான பாகங்களும் இருக்கும். 

1394. அரசியல்வாதிகள் நல்லதோ கெட்டதோ அதிகப்படுத்தியே பேசுவார்கள். 

1395. காலை நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கின்றதா? கவலைப்படாதீர்கள். மாலை மோசமானதாகத் தான் இருக்கும். 

1396. முந்தைய ஆண்டு இதே நாள் நன்றாகவே இருந்திருக்கும். 

1397. நீங்கள் தேடும் புத்தகம் மட்டும் நூலகத்தில் கிடைக்காது. 

1398. ஒரு உணவகத்தில் உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவரின் குரலின் அளவும் அவர் பேசும் விஷயத்தின் தரத்தின் அளவும் எதிர்மறை விகிதத்திலேயே அமையும். 

1399. ஒரு பொருள் உடைபடும் நேரமும், அதை உருவாக்கத் தேவைப்படும் நேரமும் எதிர்மறையாகவே இருக்கும். (கண்ணாடி ஜாடி உடையும் நேரமும், அதை மீண்டும் ஒட்ட எடுத்துக் கொள்ளும் நேரமும்!) 

1400. சம்பளம் உயர உயர கட்டுப்பாடு தளர்ந்து போகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons