13 நவ., 2010

மர்பி விதிகள் 1401-1425


1401. அதிக மக்களுக்குத் தொல்லை தரக்கூடிய ஒரு விஷயம் நடந்தே தீரும். 

1402. எந்த ஒரு தொல்லையும் உங்களுக்கு நேரும் போது இனி இந்தத் தொல்லை வராது என்றே உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது மாயை ஆகும். 

1403. ஏமாற்றம் என்பது தாங்க முடியாது தான். ஆனால் நீங்கள் நினைத்ததைப் பெறும் போதும் அதே நிலை தான். 

1404. ஒரு நண்பனிடம் ஏமாறுவதை விட அவனை நம்பாமல் இருப்பது மோசமானதாகும். 

1405. நிகழ்வுகளை நீங்கள் தலையிடாமல் அதுவாகவே நடக்க விட்டிருந்தால் இன்னும் நன்றாகவே நிகழ்ந்திருக்கும். 

1406. அனைத்துச் சட்டங்களும் அடிப்படையில் பொய்யானவை. 

1407. ஏமாறுபவர்களிடம் பணம் இருப்பது நல்லதில்லை. 

1408. பெரிய மனிதர்கள் பெரிய விஷயங்களுக்காகச் சண்டை போடுவதில்லை. 

1409. ஒரு சட்டத்தைப் பரிந்துரை செய்து ஒப்புதல் அளிப்பவர்கள் தான் அந்தச் சட்டத்தை முதலில் மீறுபவர்களாக இருப்பார்கள். 

1410. வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தல் எளிது தான். ஆனால் வாழ்வதோ முன்னோக்கி அல்லவா செய்ய வேண்டும்?!
1411. வானொலியில் நீங்கள் கேட்க நினைக்கும் அலைவரிசை மட்டும் கிடைக்காது. 

1412. பிரச்னை தூங்கிக் கொண்டிருக்கும் போது அதை ஏன் எழுப்பி விடுகின்றீர்கள்? 

1413. கலாச்சாரம் எத்தனை பெரியதாய் பரவியிருக்கின்றதோ அத்தனை மாற்றத்துக்கு உள்ளாகும். 

1414. உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், நீங்கள் அதன் கூடவே செல்லத் தயாராக வேண்டும். 

1415. எந்த ஒரு நிறுவனத்திலும் மேலிருப்பவர்களால் கீழிருப்பவர்களைச் சமாளிப்பதை விட, கீழிருப்பவர்களால் மேலிருப்பவர்களைச் சமாளிப்பது தான் மிகக் கடினமாக இருக்கும். 

1416. நம் கடிகாரத்தையும் கொடுத்து, பணமும் கொடுத்து, நேரம் கேட்டுக் கொண்டால் தான் நமக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கு மரியாதை. 

1417. அடுத்து ஒரு எளிதான கேள்வி என்று யாரேனும் சொன்னால், அந்தக் கேள்வி என்னவென்றே புரியாது என்று தெரிந்து கொள்ளுங்கள்! 

1418. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் இடத்தை விரிப்பதாகவும், காலத்தைச் சேமிப்பதாகவும், சோம்பலைப் பெருக்குவதாகவும் இருக்கும். 

1419. எந்த ஒரு விஷயத்தையும் சொல்வதற்கு முன் அதன் முக்கியத்துவம் பற்றிச் சொல்லக் கூடாது. 

1420. நீங்கள் தான் எதையுமே கடினமாய்ச் சிந்திக்கின்றீர்கள்.
1421. அடுத்தவர்களின் செலவு எப்போதும் அநாவசியமானது தான்.

1422. வளர்ந்த நாடுகளில் இருப்போர் வளரும் நாடுகளின் மக்கள் முன்னேறாதவர்கள் என்று இரண்டிலிருந்து நான்கு மடங்கு வரை தப்புக்கணக்கு போடுவார்கள்.

1423. ஒரு பொருளின் உபயோகத்தன்மையும், அந்தப் பொருளின் உபயோகம் குறித்த மக்களின் கருத்தும் எதிர்மறையாகவே இருக்கும்.

1424. மையை வண்டி வண்டியாய் வாங்குவோருடன் விவாதம் செய்யக் கூடாது! (யாரென்று தெரிகின்றதா?)

1425. சாதாரணப் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மிகப் பெரிய பிரச்னைகள் சாதாரணப் பிரச்னைகளாகும் வரை காத்திருக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons