151. நீங்கள் எந்த ஒரு கடிதத்தை அச்சடிக்க கட்டளை கொடுத்தாலும் முதல் பக்கத்தில் கடிதம் அச்சடிக்கப்பட்டு 2வது பக்கத்தில் கடைசி வரி மட்டும் அச்சடிக்கப்படும்.
152. 99% ஒரு கோப்பை இறக்கம் செய்த உடனேயே மின் இணைப்பு போய் விடும்.
153. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் உங்கள் பிரச்னையைத் தவிர அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும்.
154. மேற்கண்ட மென்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளும் மைக்ரோசாப்ட்க்கு (எந்த பதிப்பாக இருந்தாலும்) கச்சிதமாக பொருந்தும்.
155. தானியங்கி தவறு நீக்கி (Auto correct) தவறை நீக்குவதில்லை. தவறை உருவாக்கும்!
156. மாதாந்திர சேவை புரியும் பணியாளர் (AMC worker) வரும் வரை கணிணி ஒழுங்காக தான் வேலைபார்த்துக் கொண்டிருந்திருக்கும்.
157. வன் தட்டு பழுதினால் வைரசும் அழிந்து போகும். இதனால் நீங்கள் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் வைரசு நீக்கிக்கு வேலை இருக்காது.
158. தண்ணீரின் மேல் நடப்பதும் ஒரு மென்பொருளை அதன் தேவைக்கேற்ப (Features) உருவாக்குவதும் எளிது தான். அது உறைந்திருக்கும் வரை. (Frozen)
159. உங்கள் இ-தபால் பெட்டியின் அளவும் உங்களுக்கு வரும் அனாமதேய தபால்களின் அளவும் எதிரெதிர் விகிதத்தில் இருக்கும்.
160. ஒரு கணிணி அதை உபயோகிப்பாளரின் அறிவினை நிகர்த்தது.
161. ஒரு வைரசு உங்கள் கணிணியைத் தாக்கிய பின்னரே அதை வைரசு நீக்கி கண்டறியும்.
162. மூளை * அழகு * வாய்ப்பு = மாறிலி (இதில் மாறிலியின் மதிப்பு எப்போதுமே 0 ஆகும்)
163. உங்கள் காதலி உங்கள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவு நீங்கள் அவள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
164. பணத்தால் காதலை வாங்க முடியாது தான். ஆனால் அது உங்களை ஒரு பேரம் பேசும் நிலையில் (bargaining position) வைத்திருக்கும்.
165. உங்கள் மனைவி உங்களை முழுவதும் புரிந்து கொண்ட நாள் முதல் உங்கள் சொல்லை காதில் வாங்குவதே இல்லை.
166. காதலை விட மோசமான விஷயங்கள் இருக்கின்றன. காதலை விட நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் காதலுக்கு சமமாய் எதுவுமே இல்லை.
167. காதல் புத்திசாலித்தனத்தை கற்பனை எப்போது மிஞ்சுகின்றதோ அப்போது தான் ஏற்படும்.
168. பின் வரும் விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். 1. மது 2. மாது 3. இசை. முக்கியமாக இசையிடம்
169. அழகு தோல் வரை (skin deep). அழகின்மை எலும்பு வரை.
170. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை காதல் வந்து விட்டால்.
171. ஒரு பெண்ணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் எதிர்பாராத பரிசை எதிர்பாராத நேரத்தில் கொடுப்பதாகும்.
172. எப்பொதும் நடந்து கொண்டே இருக்கும் காதல் போரில் பெண்கள் ஏற்கனவே வென்று விட்டனர்.
173. எந்த ஒரு ஆணும் தான் தொடங்கி வைத்த விவாதத்தில் வெற்றி பெறுவதில்லை.
174. காதலுக்கு கண் இல்லை. திருமணம் தான் அந்த கண்ணைத் திறந்து வைக்கும்.
175. உங்கள் காதலி "விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்காதீர்கள்" என்று கூறி அதை நீங்கள் கடைப்பிடித்தால் தாடியுடன் அலைய வேண்டியது தான்.



10:45 AM
SASIMO
Posted in:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக