13 நவ., 2010

மர்பி விதிகள் 1526-1550


1526. ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தில் ஒரே ஒரு மின் தூக்கி (லிப்ட்) இருக்குமானால், அது எப்போதும் நீங்கள் இப்போது இருக்காத மாடியிலேயே இருக்கும்.

1527. 12 கோமாளிகளுக்கு நடுவே நின்று நீங்கள் எதைப் படித்தாலும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னவோ நீங்கள் 13வது கோமாளி தான்.

1528. ஏழைகளையும் நடுத்தர மக்களையும் காக்கும் அளவுக்குத் தன்னிடம் அதிகப்படியான பணம் இருக்கின்றது என்று காட்டுபவரையே வெற்றி வந்தடைகின்றது.

1529. அலை தினமும் வருகின்றது போகின்றது. நீங்கள் என்ன அதிலிருந்து பெற்றீர்கள்?

1530. யானை எதையும் மறப்பதில்லை என்று சொல்கின்றார்கள். ஆனால், யானை நினைவில் வைத்திருக்க என்ன இருக்கின்றது?
1531. முட்டாள்கள் உருவாக்கும் சட்டங்களை முட்டாள்கள் தான் பின்பற்றி நடப்பார்கள்.

1532. எல்லோரும் வெறுத்தால் அதில் என்ன தான் இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். எல்லாரும் விரும்பினால் அதில் என்ன தான் இருக்கின்றது என்று காண வேண்டும்.

1533. நாம் சாதாரணமாகச் சொல்லும் ஒரு பொய்: இது உன்னை விட என்னைத் தான் அதிகம் பாதிக்கும்.

1534. எதிர்பார்க்கும் நஷ்டம் அனுபவபூர்வமாகும். எதிர்பார்க்கும் லாபமோ அழிவுக்குத் தான் வழிவகுக்கும்.

1535. நல்ல நேரம் விரைவில் முடிந்து விடும். கெட்ட நேரம் நீடிக்கும் வகையானது.

1536. அதிகமாக அன்பளிப்பை (டிப்ஸ்) எதிர்பார்க்கும் பணீயாளரின் (சர்வர்) சேவை மட்டமாகவே இருக்கும்.

1537. மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தில், மிகக் குறைந்த நிகழ்தகவு கொண்ட வாய்ப்பே அதிகம் இல்லாத இரண்டு சிறிய நிகழ்ச்சிகளால் தான் அதிகப்படியான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. 

1538. உங்கள் அலுவலகத்தின் சதுர அடிகளின் எண்ணிக்கையும் உங்கள் அலுவலகத்தில் நடக்கும் தவறுகளும் எண்ணிக்கையும் சரி சமமாக இருக்கும்.

1539. ஒரு கூட்டத்தில் பேசப்படும் விவகாரம் எடுத்துக் கொள்ளும் நேரமும், அந்த விவகாரத்தால் செலவாகும் நிதியின் அளவும் எதிர்மறை விகிதத்திலேயே இருக்கும்.

1540. உங்களால் உங்கள் நடவடிக்கை குறித்து விளக்கி சமாதானப் படுத்த முடியவில்லையா? புரியாதபடி குழப்பி விட்டு விடுங்கள்.
1541. சமையலறை விதி: சுத்தமாக இருப்பது முடியாத ஒரு காரியம்.

1542. ஒரு மோசமான சட்டம் மாற்றப்படுவதற்குப் பதிலாக வழிமொழியப்படும்.

1543. சமூக விதிகளால் அறிவியல் விதிகளை மாற்ற இயலாது.

1544. உருவத்தைப் பார்த்து ஏமாறக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டே தான் ஏமாறுவீர்கள்.

1545. நிர்வாகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்குக் கூட்டம் கூட்டிப் பேசவும், கடிதங்களில் கையெழுத்துப் போடவும் தான் விருப்பம் இருக்கும்.

1546. ஆண்டவனே! நாங்கள் எதைச் செய்தாலும் சரியாகச் செய்ய வரம் கொடு. அப்படியே அந்தச் சமயங்களில் எங்கள் மனம் மாறாதிருக்கவும் வரம் வேண்டும்.

1547. பல வித யோசனைகளையும், தகுந்த ஆலோசனைகளையும் தருவதும் பெறுவதும் போய், வேலையை நாமே செய்தே முடிக்க வேண்டிய தருணம் வராமலா போய் விடும்?!

1548. நிர்வாகத்தின் பொறுமைக்குத் தகுந்தவாறு தவறுகளும் இருக்கும்.

1549. ஒரு நிர்வாகத்தின் வேலையில் அதிக மாற்றங்கள் இல்லை என்றால், அந்நிர்வாகத்தில் மாற்றங்கள் நிகழந்து கொண்டிருக்கின்றது என்று அர்த்தம்.

1550. அரசு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் வேலையை உருவாக்கிக் கொள்வார்கள். :)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons