13 நவ., 2010

மர்பி விதிகள் 1551-1575


1551. நீங்கள் உங்களையே தேடாமல் இருக்கும் வரை தொலைந்து போக மாட்டீர்கள்.

1552. எல்லா விளையாட்டிலும் எப்போதும் பெரிய மனிதர்கள் வெற்றி பெறுவதில்லை. இருந்தாலும் அவர்கள் மேல் பந்தயம் கட்டுவது நல்லது.

1553. எத்தனை விற்பனை பிரதிநிதிகள் இன்று வந்து உங்களைத் தொந்தரவு செய்வார்கள் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமான வேலை பாக்கி இருக்கின்றது என்பதைப் பொறுத்தது.

1554. அவர்களில் யாரும் உங்களுக்குத் தேவையானதை விற்பதற்காக வந்திருக்க மாட்டார்கள்.

1555. நல்ல விற்பனை பிரதிநிதிகளுக்குப் பசி எடுப்பதில்லை.

1556. வயது முதிர்ந்தோர் தொலைக்காட்சியில் அதிகம் ரசித்துப் பார்ப்பது சிறுவர்கள் ரசித்துப் பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளாகத் தான் இருக்கும்.

1557. மற்ற எல்லா சூழ்நிலையும் மாறாதிருக்கையில், ஒரு தடிமனான மனிதர், ஒல்லியான மனிதரைக் காட்டிலும் அதிக சோப்பை உபயோகிப்பார்.

1558. எது தவறாக நடந்தாலும், சரியாக நடப்பது போலவே தான் தோன்றும்.

1559. எந்த ஒரு பிரச்னையையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நடப்பதற்குப் பல வழிகள் இருந்தாலும், அதில் சிறந்த வழியின் மூலமாகத் தான் பிரச்னையை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்,

1560. நீங்கள் தேடாத விஷயம் எப்போதும் கண் முன்னே தான் இருக்கும்.
1561. நீங்கள் தேடியது கிடைத்து விட்டதா? உங்களிடம் இருக்கும் இன்னொரு பொருள் காணாமல் போயிருக்கும். கவலைப்படாதீர்கள். 

1562. ஒரு ஆவணத்தை நினைவுடன் கோப்பில் சேர்த்து வைத்து விட்டீர்கள் என்றால் அதற்கு இனி தேவை இராது என்று அர்த்தம். 

1563. ஒரு பொருள் காணாமல் போனால் தேட வேண்டிய முதல் இடம், நீங்கள் கடைசியாக எங்கே தேடுவீர்களோ அது தான். 

1564. அரசியலில் ஒரு விஷயத்தைப் பிரபலமாக்க, அதை எல்லோரிடம் இருந்தும் மறைக்க முயற்சி செய்தால் போதும்!

1565. எந்த ஒரு பிரச்னையின் மூல காரணமும் அதன் தீர்வு தான்.

1566. மின் தூக்கி(லிப்ட்)யினுள் இருப்போருக்கிடையே இருக்கும் இடைவெளி எப்போதும் சமமாக இருக்கும்.

1567. ஒரு விஷயத்தில் குறைந்த மேதமை உள்ளவரிடமே அதிக கருத்துக்கள் வெளிப்படும்.

1568. குழுவுடன் ஒத்துழைக்க மறுப்பவர், அதன் தலைவராகத் தகுதியுடையவராகின்றார்.

1569. யாரையும் மன்னியுங்கள். ஆனால் மறந்து விடாதீர்கள்.

1570. உங்களுக்கு எது தெரியாது என்று தெரிந்து வைத்திருப்பது தான் அறிவாகும்.
1571. ஒப்பந்தம் என்பது படிப்பவருக்கு தகவல் தருவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. கையொப்பம் இட்டவர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது.

1572. அதிகாரம் இருந்தால் ஊழல் நிச்சயம் இருக்கும். சர்வாதிகாரத்தில் சர்வ ஊழல் இருக்கும்.

1573. பொதுமக்கள் என்பவர்களில் செய்தித்தாள்களில் பெயர் வருபவர்கள் கிடையாது.

1574. ஏதேனும் இன்னொன்றைப் பிடிக்கும் வரை இருக்கும் பிடியைத் தளர விடாதீர்கள்.

1575. புத்திசாலித்தனம் என்பது பலமிக்கவர்களால் தரக்குறைவாகவே நினைக்கப்படுகின்றது. ஏனெனில், புத்திசாலி பலமில்லாமலே வெற்றி வாகை சூட முடியும். ஆனால் அறிவில்லாதவர்கள் வெற்றி பெற வேண்டுமாயின் பலம் இருந்தே ஆக வேண்டியிருக்கின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons