13 நவ., 2010

மர்பி விதிகள் 1576-1600


1576. நீங்கள் இப்போது இருக்கும் இடமே துவங்குவதற்கு வசதியானது.

1577. ஒரு கிராமப் புறத்திட்டம் எவ்வளவு தூரம் செயல்படுத்த முடியாமல் இருக்கின்றதோ அவ்வளவுக்கு அது பெருவெற்றி அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

1578. எந்த ஒரு சோதனைச்சாலைப் பரிசோதனையையும் மீண்டும் செய்து காட்ட இயலாது.

1579. ஒரு விசயம் பச்சையாக இருந்து அசைந்தால் அது தாவரவியல். நாற்றமடித்தால் அது வேதியியல். அசையாமல் இருந்தால் அது இயற்பியல். அவ்வளவு தான் அறிவியல். :)

1580. அதிகப்படியான கண்டுபிடிப்புக்கள் தவறுகளாலேயே நிகழ்ந்திருக்கின்றன. பணம் அதிகம் செலவளித்தால், அத்தவறு நடக்கும் வாய்ப்புக்கான காலம் அதிகரிக்கக் கூடும்.
1581. ஒரு விஷயம் சரியாக நடக்கும் போது அதைக் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

1582. கலைத்த துணியை மீண்டும் வைக்கும் போது அதை விடப் பெரிய பெட்டியில் தான் வைக்க இயலும்.

1583. வேலைக்கு மக்கள் எப்போதுமே இறந்த காலத்தில் தான் அதிகம் கிடைத்திருப்பார்கள். ஆனால் மக்கள் தொகை மட்டும் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

1584. வேலை அதிகரிக்கின்றதோ, குறைகின்றதோ, செலவு மட்டும் ஒரே வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கும்.

1585. அனைத்து கண்டுபிடிப்புக்களும் தற்செயலான தவறுகளாலேயே உண்டாகின்றன.

1586. செலவு அதிகமாக அதிகமாக, கண்டுபிடிக்கத் தேவையான அந்தத் தவறு நிகழ்வது தாமதமாகும்!

1587. ஏதேனும் ஒரு விஷயத்தை அனைவரையும் நம்ப வைக்க அதை மெல்லிய குரலில் கிசு கிசுவெனச் சொல்ல வேண்டும்.

1588. சில மாதங்களின் சோதனைச் சாலை, நூலகத்தின் சில மணி நேரங்களைச் சேமிப்பதாகும்.

1589. அகராதி என்பது ஒரு சொல்லை இன்னொரு சொல்லின் மூலம் விளக்குவதாகும். இரண்டு சொற்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அகராதியால் உபயோகமில்லை.

1590. எந்த ஒரு திட்டத்துக்கும் செயல்படாமல் போனால் சொல்வதெற்கென்று ஒரு சப்பைக் கட்டு தயாராக இருத்தல் அவசியமாகும்.
1591. முதுகில் தட்டிக் கொடுப்பதற்கும் தட்டி வைப்பதற்கும் ஓரிரு விரற்கடைகளே வித்தியாசம் ஆகும்.

1592. பேசக் கூடாததைப் பேசும் வரை எந்தக் கூட்டமும் பலனளிக்காது.

1593. நீங்கள் காரைக் கழுவும் போது தான் மழை வரும். அதற்காக மழை வரட்டும் என்று காரைக் கழுவினால் மழை வராது!

1594. பள்ளத்தை நோக்கியே நீர் எப்போதும் செல்லும். அது போல, பொருளாதார வெற்றிடத்தை நோக்கியே தொழில்கள் நகரும்.

1595. எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பவரை யாருமே விரும்புவதில்லை. 

1596. இளமையில் உங்கள் கதவை வாய்ப்புத் தட்டும் போது நீங்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்.

1597. மூட நம்பிக்கையுடன் இருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும்.

1598. பொருட்கள் எப்போதும் சரியான கோணத்திலேயே விழுந்து உடையும்.

1599. நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், ஏதேனும் ஒரு சட்டத்தின் பிரிவைக் காட்டி உங்களைக் காவல் துறை கைது செய்ய இயலும்.

1600. எப்போதும் உங்கள் அலுவலக அறைக் கதவைச் சாத்தியே வைத்திருங்கள். அப்போது தான் வெளியில் இருப்பவர்கள் நீங்கள் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons