13 நவ., 2010

மர்பி விதிகள் 1651-1680


1651. நமக்கு நன்றாகப் புரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு விளக்க முனைந்தால் நமக்கும் குழம்பி விடும்! 

1652. நடக்க நடக்க கால் செருப்புகள் இரண்டும் ஒரே போல் தான் தேயும். பூட்டும் சாவியும் ஒரே போல் தான் தேயும். ஆனால், ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்காக ஒதுக்கிய நிதியும், பிரச்னையும் ஒரே போல் தேய்வதில்லை. நிதியைச் செலவளித்து முடித்ததும் தான் பிரச்னை பூதாகரமானதாக வளர்ந்திருப்பது தெரியும்!

1653. இரண்டு பேர் சேர்ந்து ஒரு வேலையைச் செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு மூன்றாமவர் தான் பொறுப்பாளி என்று சுட்டிக் காட்டப்படுவார்.

1654. தனது தவறுக்கான பொறுப்பைத் தன் கீழ் வேலை செய்பவர்கள் மேல் சுமத்துபவர்கள் இருக்கும் நிர்வாகத்தில், கடைநிலை ஊழியரின் தவறுக்கான பொறுப்பை மொத்த நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள நேரிடும்.

1655. பலனை எதிர்பார்ப்பதையே கடமையாகக் கொண்டவர்கள் தவிர மற்றவர்களுக்குக் கீதை கசப்பானதாகவே இருக்கும்!

1656. அது என்னவோ நாம் அடிக்கும் போது எவரும் மறுகன்னத்தைக் காட்டுவதில்லை.

1657. பெருக்கலிலும் வகுத்தலிலும் சிறந்தவர்கள் கூட்டலிலும் கழித்தலிலும் கோட்டை விடுவார்கள். 

1658. அடிமுட்டாள்களையும் அதிபுத்திசாலிகளையும் சிலசமயங்களில் வித்தியாசம் காண்பது கடினமாகவே இருக்கும்.

1659. ரயில் நிலைய நடைமேடையில் ரயில் நம்மருகே வரும் போது தான் ரயில் ஒலிப்பானை அலற‌விடுவார்கள். 

1660. புத்திசாலிகளை உலகம் வரவேற்கின்றது. ஆனால் துணிச்சல்காரர்களுக்குத் தான் கதவைத் திறந்து விடுகின்றது.

1661. எத்தனை முறை கூட்டினாலும் ஐந்தொகையின் பற்று வரவுக் கூட்டுத்தொகை சரியாகாது.

1662. அடித்தல் திருத்தல் செய்யக் கூடாத இடத்தில் தான் அடித்தல் திருத்தல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

1663. கணக்கில் இருக்கும் நட்டம் எந்த வடிவில் இருக்கின்றது என்று தெளிவாகத் தெரிவது போல், கணக்கில் இருக்கும் லாபம் எந்த வடிவில் சொத்தாக இருக்கின்றது என்று காட்டவே இயலாது.

1664. 11 மாதம் லாபம் காட்டும் ஒரு கணக்கு கடைசி 1 மாதத்தில் நட்டம் காட்டும்.

1665. ஐந்தொகையில் இருக்கும் 100 ரூபாய் வித்தியாசத்தைத் திருத்த நினைத்தால் அடுத்ததாக 1000 ரூபாய் தவறு கண்ணுக்குத் தெரியும். 

1666. கணக்கை முடித்துத் தணிக்கை அறிக்கை வந்த பின்னர் தான் அதில் விட்ட தவறுகள் அனைத்தும் தெரியவரும்.

1667. கணக்குப் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும், கணக்கின் நம்பகத் தன்மைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

1668. யார் சொன்னார்கள் கணக்கர்களுக்கு நகைச்சுவை தெரியாது என்று? அவர்கள் எழுதும் கணக்கை என்னவென்று நினைத்தீர்கள்?

1669. ஒரு கணக்கை எத்தனை பேர் கணக்கிடுகின்றார்களோ அத்தனை விடைகள் கிடைக்கும். 

1670. கணக்கர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரே கணக்கு பட்டிக்கணுப்பு மட்டுமே. (பட்டிக்கணுப்பு ‍= Suspense Account)
1671. மென்பொருளாக்கம் என்பது மென்பொருள் வல்லுநர்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் நடக்கும் போட்டியாகும். மென்பொருள் வல்லுநர்கள் எந்த ஒரு முட்டாளும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருப்பதிலேயே எளிதான மென்பொருளை உருவாக்க முயல்கின்றனர். பிரபஞ்சமோ முட்டாள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. இதுவரை பிரபஞ்சம் தான் வென்று கொண்டிருக்கின்றது.

1672. ஒரு மகிழ்வுந்தின் மிகச் சிறந்த பாதுகாப்புச் சாதனம் அந்த வாகனத்தின் பின்புறம் காட்டும் கண்ணாடியும் அதில் தெரியும் காவல்துறை அதிகாரியும் ஆகும்.

1673. சாவைக் கண்டு யாருக்கும் பயமெல்லாம் கிடையாது. ஆனால் அது நிகழும் சமயம் அங்கே இருக்க யாரும் விரும்புவதில்லை!

1674. அதிகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதி சிறந்த தலைவராக இருக்கமாட்டார்.

1675. சரிவிகித உணவில் உணவே முக்கியப்பங்கு வகிக்கின்றது. 

1676. தவறுவதும், தவறைக் கணினி மேல் சுமத்துவதும் மனித இயற்கை.

1677. நீங்கள் விரும்புவதை அடைய வேண்டுமா? எதை விரும்புவது என்று முதலில் முடிவு செய்யுங்கள்.

1678. உங்கள் உள்ளக்கிடக்கையை நீங்கள் விரும்பாமல் யாரும் அறிந்து கொள்ள முடியாது!

1679. இந்தப் பிரபஞ்சம் புதிது புதிதாகப் போட்டு நிரப்பும் குப்பையைக் காட்டிலும் வெற்றிடம் எவ்வளவோ மேலானது.

1680. ஒருவர் கூறும் அனைத்தையும் அவர் ஒத்துக் கொள்கின்றார் என்று பொருளாகாது.
thank u muthamil mandram rathnagiri

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons