12 நவ., 2010

மர்பி விதிகள் 176-200

176. நீங்கள் சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தீர்களேயானால் உங்கள் காதலி 20 நிமிடம் முன்னதாக வந்திருப்பாள். 20 நிமிடம் முன்னதாக நீங்கள் போய் சேர்ந்தால் 1 மணி நேரம் தாமதமாக வருவாள். 

177. ஒருவன் திடீரென முட்டாள்தனமாக நடந்து கொண்டால் காதலில் விழுந்து விட்டான் என்று பொருள். 

178. இப்போது (உங்கள் காதலியிடம்) எது ஆர்வமூட்டுகிறதோ அதுவே பின்னாளில் எரிச்சலூட்டும். 

179. நீங்கள் ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாளே என்று பார்த்தால் அதை நிரூபிப்பதற்கு ஒரு நண்பன் அவளுடன் கண்டிப்பாக இருப்பான். 

180. இரண்டு பேர் காதலில் விழுவதற்கு (falling in love) புவிஈர்ப்பு விசையை குற்றம் சொல்ல முடியாது. 

181. காதலுக்கும் காய்ச்சலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் காய்ச்சலுக்கு மருந்துண்டு. 

182. உலகின் மிக அழகான பெண்மணி அழகில்லாத ஒரு ஆணைத் தான் மணப்பாள். 

183. காதல் ஒரு சிறந்த எதிரி அல்லது மோசமான நண்பன். 

184. எல்லோரும் காதலை நம்புகிறார்கள். அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? 

மன்ற நண்பர்கள் காதல் பற்றி சொன்னதற்கு அடிக்க வராமல் இருந்தால் சரி தான். :) 

185. தவறான ஒரு முடிவை நம்பிக்கையுடன் அறிவுபூர்வமாக எடுப்பதற்கு பெயர் தான் லாஜிக் (தமிழ் தெரியவில்லை. உதவுங்களேன்!) 

(பாவம் தையல்காரர்கள். நம்மிடம் மாட்டிக் கொண்டார்கள்!) 

186. நீங்கள் 6 பித்தான்களை தைக்க வேண்டியிருந்தால் உங்கள் பெட்டியில் 5 பித்தான்கள் தான் இருக்கும். 

187. நீங்கள் அவசரப்படும்போது தான் ஊசியில் துவாரம் சிறியதாக மாறிவிடும். 

188. நீங்கள் எவ்வளவு தவறாக தைக்கிறீர்கள் என்பது துணியின் விலையைப் பொருத்தது. 

189. நீங்கள் தொலைத்த ஊசி உங்கள் மாமியார் வெறுங்காலுடன் நடக்கும் போது கண்டுபிடிக்கப்படும்! 

190. நீங்கள் தைக்கும் உடை இரண்டு விதமாக இருக்கலாம். பெரியதாக அல்லது சிறியதாக. 

(இப்போது புகைப்படக்காரர்கள்) 

191. தானியங்கி கேமராக்கள் தானாக இயங்குவதில்லை. 

192. உங்களால் உறுதியாக சொல்லமுடியவில்லை என்றால், பிலிமை வீட்டில் தான் வைத்து வந்திருப்பீர்கள். 

193. உங்களுக்கு தட்பவெப்ப நிலை எப்போதுமே எதிரி தான். 

194. வீட்டில் வேலை செய்யும் அனைத்து கேமராக்களும் வெளியிடங்களுக்கு செல்லும் போது தான் பழுதாக இருக்கும். 

195. அனுபவமில்லாத புதிய புகைப்படக்காரர் தான் புளிச்சர் (சரி தானா?) விருதை தட்டி செல்வார். 

196. புகைப்படக்காரர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாதபடி தான் இருப்பார்கள். 

197. காட்டுக்குள் புகைப்படம் எடுக்கப் போகும் போது இரண்டில் யாராவது ஒருவர் தான் எப்போதும் தயாராக இருப்பார். 1. நீங்கள் 2. விலங்கு. 

198. மேற்கண்ட விதி குழந்தைகளுக்கும் பொருந்தும். :) 

199. கனகச்சிதமான புகைப்படம் என்று இதுவரை எந்த புகைப்படமும் இல்லை. (அப்படியா?) 

200. கீழே விழும் லென்சு (தமிழ்?) தான் இருப்பதிலேயே விலையுயர்ந்தாகும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons