12 நவ., 2010

மர்பி விதிகள் 201-225

201. ஒரு நீளமான சாலையில் ஒரு குறுகிய பாலமும் இரண்டு கார்களும் செல்வதாக வைத்துக்கொண்டால் (1) எப்போதும் அந்த இரண்டு கார்களும் எதிரெதிராகத் தான் வரும். (2) அவை சரியாக பாலத்தில் தான் சந்திக்கும். 

202. இருப்பதிலேயே அதிவேகமான கணிணி என்பது அது முடங்கிப்போகும் வேகத்தைக் குறிக்கும். 

203. ஒரு இயந்திரத்தை வடிவமைப்பவரின் முக்கிய பணி அவ்வியந்திரத்தை உருவாக்குபவரும் அதை பின்னாளில் பழுது பார்ப்பவரும் கஷ்டப்படும்படி வடிவமைப்பதாகும். 

204. நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் கேட்கமுடியாது. (கேட்க விரும்பும் நபர் உங்களுக்கு மேல் பதவியில் உள்ளவராக இருப்பார்) 

205. உங்களால் ஒரு பதிலை ஜீரணிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது. 

206. ஒரு பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கும் முன் உங்களுக்கு அதற்கான விடை தெரிந்திருந்தால் நல்லது. எல்லாவற்றிற்கும் முன்னால் விடைக்குண்டான பிரச்னை அது தான் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

207. உங்கள் விமானம் தாமதமாக இருக்கலாம். ஆனால் அந்த விமானத்தில் சென்று நீங்கள் பிடிக்க விரும்பும் அடுத்த விமானம் சரியான நேரத்தில் தான் சென்றிருக்கும். 

208. எந்த விஷயத்துக்குள்ளும் செல்வது எளிது தான். 

209. நீங்கள் எந்தத் திசை நோக்கி சென்றிருந்தாலும் உங்கள் இல்லத்துக்கு திரும்பி வரும் போது எதிர்காற்று தான் அடிக்கும். 

210. ஒரு வாகனத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சரக்கு மட்டும் எப்போதும் ஐந்து நாட்கள் கழித்து தான் வந்து சேரும். 

211. எந்தப் புத்தகமும் கடன் கொடுப்பதால் தொலைந்து விடாது. ஆனால் அதை நீங்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நல்ல புத்தகம் என்று மட்டும் நினைத்திருக்கக் கூடாது. 

212. நீங்கள் கடன் வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய ஒரு பொருள் உடையக் கூடியதாக இருந்தால், நீங்கள் நிச்சயம் கடன் வாங்குவீர்கள். அதை நிச்சயம் உடைப்பீர்கள். 

213. எது நல்ல அரசியலோ அது மோசமான பொருளாதாரமாகும். எது மோசமான அரசியலோ அது சிறந்த பொருளாதாரமாகும். 

214. எப்போதுமே உச்சியில் இருந்து கீழே இறங்குவது அதிக வேகத்தில் தான் நடைபெறும். 

215. உங்கள் காலணிக்குள் இருக்கும் சிறு கல் சரியாக எந்த இடத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அவ்விடத்தை நோக்கி தான் நகரும். 

216. நீங்கள் கஷ்டப்பட்டு சேரும் அந்த ஊரில் இருக்கும் ஒரே விடுதி நீங்கள் செல்லும் போது மட்டும் நிறைந்து தான் இருக்கும். 

217. பொது இடங்களில் (குறிப்பாக கல்யாண மண்டபம்) நீங்கள் விட்டுவிடக் கூடாத ஒரே பொருள் செருப்பு மட்டுமே. (அட மர்பிக்கு கூட இது தெரிந்தெருக்கே!?) 

218. உங்கள் வீட்டில் உள்ள கொசு வர்த்திச் சுருளின் அளவும் கொசுக்களின் எண்ணிக்கையும் எதிர்மறையாக இருக்கும். 

219. வேகத்தடை இப்போது நீங்கள் சென்று கொண்டிருக்கும் வேகத்தை விட மூன்று மடங்கு குறைவான வேகத்தில் சென்றாலும் அல்லது மூன்று மடங்கு அதிக வேகத்தில் சென்றிருந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்காது. 

220. உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் உங்களை விட குறைந்த வேகத்திலேயே செல்லும். 

221. ஒரு நம்பிக்கை எந்த அளவு மூடத்தனமாக இருக்கிறதோ அந்த அளவு அது அதிக மக்களைச் சென்றடையும். 

222. முதியவர்கள் என்பவர்கள் என்னை விட 15 வயது அதிகமானவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். 

223. ஒரு கட்டுப்பாடற்ற சந்தைக்குள் ஒரு அரசாங்கம் கொடுக்கும் தலையீடு அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிப்பதாகவே அமையும். 

224. ஆற்று நீர் மூக்கு வரை வந்து விட்டதா? மறந்தும் வாயைத் திறந்து விடாதீர்கள். 

225. இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதை விட வேறு ஒரு வேலை தேடுவது எப்போதுமே கடினமானதாகும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons