12 நவ., 2010

மர்பி விதிகள் 226-250

226. எதையும் ஒரு விற்பனையாளர் விளக்கும் போது வாங்க வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். 

227. நிறைய பிரச்னைகளுக்கு பல தீர்வுகளோ அல்லது ஒரு தீர்வும் இல்லாத நிலையோ இருக்கும். ஒரு சில பிரச்னைகளுக்கு தான் ஒரே தீர்வு இருக்கும். 

228. ஒரு தீர்வு என்பது தவறாகவோ, சரியாகவோ, இரண்டுமாகவோ, இரண்டுமில்லாமலோ இருக்கலாம். நிறைய தீர்வுகள் கடைசி வகையைச் சார்ந்தவை. 

229. பொதுவாக அனைத்து வாக்கியங்களுமே பொய்யானது தான், இந்த வாக்கியத்தைப் போல! 

230. சாப்பாட்டைத் தான் சூடாக பரிமாற வேண்டும். அவசரமாக கண்டெடுத்த விடைகள் சூடானவை. அவற்றை ஆறவிட்டு பாருங்கள். அதிலுள்ள தவறுகள் தெரியவரும். 

231. நீங்கள் நுழைவு வாயிலில் இருந்து எவ்வளவு அதிக தூரத்தில் காரை நிறுத்தி விட்டு நுழைவு வாயிலை நோக்கி வருகிறீர்களோ அந்த அளவே குறைந்த தூரத்தில் இருந்து அப்போது தான் ஒரு காரை ஒருவர் வெளியேற்றிக் கொண்டு இருப்பார்.! 

232. எல்லா மிதிவண்டிகளுமே 50 கிலோ எடையுள்ளவை. 30 கிலோ மிதிவண்டிக்கு 20 கிலோ சங்கிலியும் பூட்டும் தேவை. 40 கிலோ மிதிவண்டிக்கு 10 கிலோ சங்கிலியும் பூட்டும் தேவை. 50 கிலோ மிதிவண்டிக்கு பூட்டோ சங்கிலியோ தேவையில்லை. 

233. நீங்கள் மேடான பாதையில் மிதிவண்டியில் செல்லும்போது மட்டும் எதிர்காற்று வீசும். 

234. கடன் வாங்கி செலவழிப்பதாயிருந்தாலும் கூட வருமானத்திற்கு மேல் செலவு செய்யாதீர்கள். 

235. எந்த ஒரு புது தொழில் நுட்பம் வந்தாலும் பழைய தொழில்நுட்பம் சுத்தமாக அழிந்து விடுவதில்லை. 

236. நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணர்கிறீர்களா. கவலையே வேண்டாம். அந்த நிலை மாறிவிடும். 

237. இப்பொதைய நிலவரத்தில் வருமானமும் செலவும் ஒன்றை விட ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஏறிக்கொண்டே இருக்கின்றன. 

238. எல்லாமே உங்களை நோக்கி வருவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் சாலையின் வலது (இந்தியா) பக்கமாக போய்க் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்! 

239. ஒரு விதியின் எதிர் விதி மோசமானதாகத் தெரிந்தால் முதல் விதி புத்திசாலித்தனத்துக்கு இழிவானதாகவும், ஏற்கனவே சொல்லப்படாமல் இருந்திருக்க வேண்டியதாகவும் இருக்கும். 

240. தகவல் யாருக்குத் தேவையில்லையோ அவருக்கு விரைவாகச் சென்று சேரும். 

241. ஒரு பெரிய வேலையின் முடிவுறாத பகுதி அலுவலகத்தின் எந்தத் துறைக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோமோ அங்கே தான் நடைபெறாமல் இருக்கும். 

242. மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்துக்கு, அடிக்கடி மாற்று விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கும். 

243. பொருளாதாரம் வளர்ச்சியடைகையில் மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைகின்றன. 

244. ஒரு செயலியின் தரம் அந்த செயலியை உருவாக்கிய நிறுவனத்தைப் பிரதிபலிக்கும். 

245. எல்லாமே சாத்தியம் தான். ஆனால் சுலபமில்லை. 

246. முதலாளித்துவம் இரண்டு இடங்களில் தான் சரிப்பட்டு வரும். வளர்ந்துவிட்ட நாடு அல்லது போர்க்களங்களில். 

247. வரலாறு எதையும் நிரூபிப்பதில்லை. 

248. வளர்ச்சி என்பது யாதெனின், ஒவ்வொருவரின் அடிமனதிலும் உள்ள வருமானத்துக்கு மேல் செலவு செய்யத் துடிக்கும் துடிப்பு தான். 

249. ஒரு பதார்த்தம் எவ்வளவு அடைமொழிகளுடன் விளக்கப்பட்டிருக்குமோ அவ்வளவுக்கு அது சுவையின்றி இருக்கும். 

250. கார் சக்கரத்தில் காற்று இல்லாததால் தாமதமாக வந்ததாக மேலாளரிடம் சொன்னீர்களேயானால் மறு நாள் கார் சக்கரத்தில் காற்று இருக்காது. :)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons