12 நவ., 2010

மர்பி விதிகள் 251-275


251. குழப்பம் என்று வரும் போது வங்கியில் உள்ள கணக்கின் இருப்பு உங்கள் கணக்கை விட குறைவாகவே இருக்கும். 

252. நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு விளக்கினாலும் கேட்கத் தான் ஒருவரும் இருக்க மாட்டார்கள். 

253. 1000 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதனுடன் 10 ரூபாய் பேட்டரி இணைப்பதில்லை. 

254. எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பானாலும் அது அறிவியலாகட்டும், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும், கலையாகட்டும் அல்லது எதுவாகட்டும். கீழ்க்கண்ட 3 விமரிசனங்களைத் தாண்டி தான் வந்திருக்கும். (1) "இது நடப்பதற்கான சாத்தியக் கூறே இல்லை." (2) "இது நடக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் இதனால் ஒரு உபயோகமும் இல்லை." (3) "இதைத் தான் நான் அப்போதே சொன்னேன். இது மாதிரி ஒன்று உண்டா என்று!" 

255. சாலையில் ஆள் நடமாட்டத்தின் அளவும் உங்கள் கார் பழுதாகும் வாய்ப்பும் எப்போதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

256. ஒரு விஷயத்தை அரசியலில் பரப்ப வேண்டுமானால் அதை ரகசியம் என்று சொன்னால் போதும். 

257. இந்த உலக மக்களின் புத்திசாலித்தனத்தின் கூட்டுத் தொகை ஒரு மாறிலியாகும். ஆனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது!

258. எந்தக் கூட்டத்துக்கும் சரியான நேரத்துக்குப் போய்விடாதீர்கள். நீங்கள் தான் முதல் ஆளாக இருப்பீர்கள்! 

259. கூட்டம் நடைபெறும் போது பாதி நேரத்துக்கு எதுவும் பேசாதீர்கள். அது உங்களை அதி புத்திசாலி என நிரூபிக்கும். 

260. நீங்கள் பேசும் பேசசு திட்டவட்டமாக இல்லாமல் வளவள என்று இருத்தல் அவசியம். அப்போது தான் அது யாரையும் பாதிக்காது. 

261. எப்போதுமே கூட்டத்தை ஒத்திப் போடும் தீர்மானத்தை நீங்களே எழுப்புங்கள். அது உங்களை பிரபலமாக்கும். ஏனென்றால் அது தான் அனைவரும் விரும்புவது. 

262. இங்கு எதுவும் இலவசம் இல்லை. (மிகவும் பிரசித்தி பெற்ற வாக்கியம் - There is no free lunch.) 

263. ஒரு வாக்கியத்தின் ஒரு எழுத்து அதன் அர்த்தத்தையே மாற்றி விடுமென்றால் எந்த எழுத்தால் அதிக பாதிப்பு ஏற்படுமோ அந்த எழுத்து தான் மாறி இருக்கும். 

264. ஒரு அலுவலகத்தில் ஒருவர் மட்டும் எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். அவர் தான் முதலில் காலி செய்யப்பட வேண்டியவர். 

265. புது சட்டம் புது ஓட்டையைத் தான் உருவாக்கும். 

266. ஒரு வாக்கியத்தில் முக்கியம் என நீங்கள் நினைக்கும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையா? கவலை வேண்டாம். அந்த வார்த்தை இல்லாமலே அந்த வாக்கியம் சரியான அர்த்தம் கொடுக்கும். 

267. பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று முன் புறப்பட்டு சென்ற பேருந்து தான் உங்கள் பேருந்து. 

268. பேருந்துக்காக நீங்கள் காத்திருக்கும் நேரமும், தட்பவெப்ப நிலையின் பாதிப்பும் நேர் விகிதத்தில் இருக்கும். 

269. உங்கள் வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தம் உள்ள பேருந்து உங்கள் அலுவலக நேர முடிவுக்கு 5 நிமிடம் முன்னதாகத் தான் புறப்படும். 

270. அதிகாரம் என்பது யாரால் ஒரு வேலையைச் செய்ய முடியாதோ அவருக்கே அதை அளிப்பதாகும். 

271. காகிதம் கிழிக்க வேண்டிய இடத்தில் தான் பலமாக இருக்கும். 

272. ஒரு வேலையைச் செய்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. (1) நீங்களே செய்யலாம். (2) யாரையாவது வேலைக்கமர்த்தலாம். (3) உங்கள் குழந்தைகளை அதைச் செய்யாதே என்று சொல்லலாம். 

273. எந்த ஒரு விவாதத்திற்கும் இரண்டு பக்கமுண்டு நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்துக்கு சாயாமல் இருக்கும் வரை! 

274. வரலாறு மீண்டும் திரும்பும். அது தான் வரலாறின் ஒரே மோசமான குணம். 

275. யாரிடம் சிறந்த அறிவுரைகள் இருக்கின்றனவோ, அவர் அறிவுரையே வழங்குவதில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons