12 நவ., 2010

மர்பி விதிகள் 276-300


276. தெருக்களில் நீங்கள் சத்தமின்றி பேச வேண்டுமானால், உங்கள் அருகில் ஒரு அல்சேசன் நாய் இருக்கட்டும். 

277. நீங்கள் இரண்டு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய புட்டியில் இருந்து எப்போதும் 3 மாத்திரைகள் தான் விழும். 

278. நீங்கள் 16 முறுக்கிகளைக் கழற்றிய பின் தான் கண்டுபிடிப்பீர்கள் தவறான பாகத்தைக் கழற்றி விட்டோம் என்று. 

279. நீங்கள் 16 முறுக்கிகளை முறுக்கிய பின் தான் முக்கியமான பாகத்தை வெளியே வைத்து விட்டது தெரியவரும். 

280. சட்டம் இயற்றுபவர்களின் எந்த ஒரு செயலாக்கமும் கடைசியில் வரி செலுத்துவோரின் பையை நோக்கி தான் இருக்கும். 

281. எதுவாக இருந்தாலும் அது அதிக பணத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். 

282. சத்தம் போடும் இயந்திரத்துக்கு தான் எண்ணை கிடைக்கும். 

283. காற்று எந்த திசையில் வீசினாலும் புகை பிடிப்பவர் விடும் புகை புகைப்பழக்கம் இல்லாதவரை நோக்கியே செல்லும்! 

284. புகை பிடிப்பவருக்கு புகைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், அந்த இடத்தில் எத்தனை புகைப்பழக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்பதும் நேர் விகிதத்தில் இருக்கும். 

285. உணவின் சுவையும் அதன் கொழுப்பளவும் நேர் விகிதத்திலேயே அமையும். 

286. எந்த ஒரு பெரிய மனிதரிடம் இருந்து வரியைப் பெறுவதற்கு புது சட்டம் போடுகிறீர்களோ அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்கு அவர் பலம் வாய்ந்தவராகவே இருப்பார். 

287. வரி இருப்பது வரை வரி ஏய்ப்பும் இருக்கும். 

288. அரசியலின் மூன்று முக்கிய தத்துவங்கள் (1) தேர்ந்தெடுக்கப்படுங்கள் (2) மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுமாறு நடந்து கொள்ளுங்கள் (3) பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

289. அதிகார வர்க்கத்தை அடக்க வேண்டுமா? உங்கள் பிரச்னையை அவர்கள் பிரச்னையாக மாற்றி விடுங்கள். 

290. ஒரு நிர்வாக அமைப்பில் மேலே செல்ல செல்ல குழப்பமே அதிகமாகும். 

291. எந்த ஒரு வாய்ப்பும் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் தான் கதவைத் தட்டும். 

292. இரு விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறு இருக்குமானால் நீங்கள் எதை விரும்பவில்லையோ அது தான் நடக்கும். 

293. இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவிடக்கூடிய நேரம் என்பது ஒரு விபத்தை வரப்போகிறது என்று உணரும் நேரத்துக்கும் அந்த விபத்து நடைபெறும் நேரத்துக்கும் உள்ள இடைவெளியாகும். 

294. உங்கள் பயண நேரமும் உங்கள் இருக்கையின் சொகுசும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

295. சரித்திரத்திலிருந்து மனிதன் கற்றுக் கொண்டது என்னவென்றால், சரித்திரத்திலிருந்து மனிதன் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை. 

296. மற்றவர்கள் செய்வது எதை நீங்கள் பாவம் என்கிறீர்களோ, அதை நீங்கள் செய்யும்போது மட்டும் சோதனை செய்வது பார்ப்பதாகவே தோன்றும். 

297. ஒரு ஆடையின் விலை நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குப் பொருந்தி வந்தால் அது உங்களுக்கு அணிந்து பார்க்கும் போது பொருந்தாது. 

298. முடி வெட்டுபவரிடம் போய் நான் முடி வெட்டினால் அழகாக இருக்குமா என்று கேட்காதீர்கள். 

299. ஒரு முடிவெடுக்கத் தேவையில்லாத போது முடிவெடுக்காமலிருப்பது தேவையாகும். 

300. நாம் கச்சேரிகளுக்கு போக வேண்டும் என்று கடவுள் தீர்மானித்திருந்தால் நுழைவுச்சீட்டையும் நமக்குக் கொடுத்திருப்பார் அல்லவா? 

300? நிஜம் தானா? நம்பவே முடியவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons