12 நவ., 2010

மர்பி விதிகள் 301-325


301. எந்த ஒரு உடையை எடுத்துக் கொண்டாலும், 10 ஆண்டுகளுக்கு முன் நாகரீகமற்றதாகவும், 1 ஆண்டுக்கு முன் தைரியசாலிகள் மட்டுமே அணியக்கூடியதாகவும், நடப்பில் அழகாகவும், 3 ஆண்டுகள் கழித்து சலித்துப் போவதாகவும், 20 ஆண்டுகள் கழித்து மறந்து போவதாகவும், 30 ஆண்டுகள் கழித்து வியக்கத்தக்கதாகவும், 100 ஆண்டுகள் கழித்து மனோகரமாகவும் 150 ஆண்டுகள் கழித்து மீண்டும் அழகாகவும் இருக்கும். 

302. உங்கள் குழந்தை எப்போது உங்கள் மடியில் அசந்து தூங்க ஆரம்பிக்கிறதோ அப்போது தான் நீங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசரம் ஏற்படும். 

303. முக்கியமாக மக்கள் எதிர்பார்க்கும் விஷயம் அவர்கள் எதிர்பார்க்கும் போது நடைபெறுவதில்லை. உம். தற்போதைய சேவாக்கின் உலக சாதனை :) 

304. வெற்றிகரமான சோதனையை உங்களால் எப்போதும் மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்ட இயலாது. 

305. அறிவியல் உண்மையானது. இது போன்ற வாக்கியங்களில் ஏமாந்து விடாதீர்கள்! 

306. பத்திரிகை அச்சாகும் வரை அதிலுள்ள பிழைகளைக் கண்டுபிடிக்க முடியாது. 

307. ஒரு முக்கியமான வேலையை நீங்கள் கெடுத்துக் கொண்ட பிறகு அதை மாற்ற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் மோசமானதாக்கும். 

308. உங்களுக்கு கிடைக்கும் தகவல் நீங்கள் விரும்பாதது. 

309. நீங்கள் விரும்பும் தகவல் உங்களுக்குத் தேவையில்லாதது. 

310. உங்களுக்குத் தேவையான தகவல் இருக்கும் இடம் உங்களால் அடைய முடியாதது. 

311. அவ்வாறு அடைய முடியுமானால் உங்களால் அதற்கு நீங்கள் நினைப்பதைவிட அதிக பணம் செலவிட வேண்டும். 

312. ஒரு பாடத்தை நல்ல முறையில் படிக்க வேண்டுமானால் ஆரம்பிக்கும் முன்னரே அதைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். (பின்னே எதுக்கு படிக்கணுங்கிறீங்களா? ஹி ஹி) 

313. எதிர்படும் அனைத்தையும் குறித்து வையுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதை நிரூபிக்க முடியும். 

314. முதலில் வரைபடத்தை வரைந்து கொள்ளுங்கள். பின்பு புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம். 

315. குழுவாகப் பணி செய்வது தான் சிறந்தது. அப்போது தான் மற்றவர் மேல் பழி போட முடியும். 

316. வாழ்க்கையின் 3 முக்கிய பொய்கள் (1) பணத்தால் எதையும் செய்ய முடியாது. (2) கருப்பராக இருப்பது வசதியானதாகும். (3) காசோலையை அப்போதே தபாலில் அனுப்பிவிட்டேனே! 

317. ஒரு விஷயத்தின் அதிகாரத்துவத்தில் எழுதப்படும் காகிதங்களின் அளவும் செயல்புரியும் வேகமும் எதிர் விகிதத்தில் அமையும். 

318. உலகில் மனித இனம் ஒன்று தான் முழுமையடையாத பிறப்பாகும். 

319. யாரொருவர் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கிறாரோ அவரே அதிர்ஷ்டசாலியாவார். ஏனென்றால் அவருக்குத் தான் ஏமாறுவதற்கு ஒன்றுமில்லையே. 

320. புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு உலகில் எந்த ஒரு விஷயமும் கிடையாது. 

321. சூழ்நிலையால் எதற்கும் தகுதியில்லாதவனையும் எத்தகையை தகுதியுடையவனாகவும் ஆக்க முடியும். 

322. ஒருவனுக்கு உதிக்கும் யோசனைகளும் அதனை சாத்தியமாக்கும் திறனும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

323. 9 பெண்களைக் கர்ப்பமாக்குவதால் ஒரு குழந்தையை ஒரே மாதத்தில் பெற முடியாது! 

324. காலம் = பணம். 

325. எந்த ஒரு நல்ல சட்டமும் ஊடகங்களால் வெளிக் கொணரப் படமாட்டாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons