41. ஒரு விலை மதிக்க முடியாத பொருள் எடுக்க முடியாத இடத்தில் விழுந்து விட்டதென்றால், அந்தப் பொருளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம் ஒரு விரற்கிடைக்கும் குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல் குறைவாக இருந்ததென்றால் நீங்கள் தொட்டவுடன் அந்த தூரத்திற்கு அது சென்று விடும்.
42. உங்கள் குடையின் அளவுக்கும் மழையின் அளவுக்கும் எப்பொதுமே எதிர்விகிதம் தான்.
42. எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் பின்னாலும் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
43. உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்!
44. உங்களுக்கு தேவையான கோப்பு எப்போதுமே அவிழ்க்க முடியாத கட்டுக்கு அடியில் தான் இருக்கும்.
45. பொது அறிவு அத்தனை பொதுவானது அல்ல!
46. அதிகாரம் என்பது எடுத்துக் கொள்ளப்படுவது. கொடுக்கப்படுவதே இல்லை.
47. இரண்டு சரியானவைகள் சேர்ந்து ஒரு தவறாவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இரு தவறுகள் சேர்ந்தால் மூன்றோ, நான்கோ ஆவதற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது.
48. உண்மை உங்கள் பக்கம் இருந்தால் யாருமே அதை நம்புவதில்லை.
49. உலகில் இரண்டு விஷயங்கள் அதிகம் பரவி இருக்கிறது. ஒன்று - ஹைட்ரஜன், இரண்டு - முட்டாள்தனம்.
50. உங்கள் செயலில் 50% சரியாக நடக்க வாய்ப்பிருக்கின்றது என்றால் 75% தவறாகவே செய்வீர்கள்.



10:40 AM
SASIMO
Posted in:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக