12 நவ., 2010

மர்பி விதிகள் 451-475


451. குறைவே நிறைவு. 

452. எதுவுமே நிரந்தரமுமல்ல. எதுவுமே முடிவுமல்ல. 

453. ஒரு கயிறுக்கு ஒரு முனை இருந்தால் கண்டிப்பாக இன்னொரு முனையும் இருக்கும்! 

454. நம்முடைய சிந்தனை அனைத்துமே "ரொம்ப காலம் கழித்து மெல்ல இறக்க வேண்டும். அதே சமயம் இளமையாகவும் இருக்க வேண்டும்" என்பதாகும். (கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை!) 

455. பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்து விட்டால் இடமே நாசமாகி விடும். 

456. ஆராய்ச்சி என்பது இதுவரை யாருமே படித்திராத இரண்டு புத்தகங்களைப் படித்து யாருமே படிக்கவிராத மூன்றாம் புத்தகத்தை எழுதுவதாகும்! 

457. புள்ளியியல் என்பது ஒரு துல்லியமான அறிவியலாகும். அது சொல்வது எல்லாம் பாதி உண்மைகளை மட்டுமே. 

458. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் தண்ணீர் அருந்தாதே.(நீர் கெட்டிருக்கும்.) வளர்ந்து விட்ட நாட்டில் சுவாசம் செய்யாதே. (காற்றே கெட்டிருக்கும்.) 

459. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு அருமையான தீர்வு ஒன்று உண்டு. பிரச்னையே அதைக் கண்டுபிடிப்பது தான்! (இது எப்படி?) 

460. ஒன்று சிகரத்தில் இருக்கவேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம் தான் எப்போதும். 

461. தலைக்கு மேல் இருக்கும் பறவையை விட கையில் இருக்கும் பறவையே பாதுகாப்பானது! 

462. ஒரு தவறின் தன்மையும் அதை மறைக்க அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் நேர் விகிதத்திலேயே அமையும். 

463. 90 சதவீத வேலை 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் 10 சதவீத வேலை இன்னும் 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும். 

464. இரண்டு தவறுகள் சேர்ந்து செய்தும் ஒரு சரியானது நடக்கவில்லையென்றால் மூன்றாவதையும் முயற்சி செய்து பாருங்கள்! 

465. வழுக்கை விழுந்து விட்டால் உங்களால் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது! 

466. (ரூ.357.73 விதி) தணிக்கையாளர்கள் ஐந்தால் வகுபடும் செலவுகளை நம்புவதில்லை. 

467. சரியான காரணங்களுக்காக இதுவரை ஒரு காரியமும் செய்யப்பட்டதே இல்லை. 

468. உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்வதையும் கையெழுத்து இடுவதையுமே பெரிய வேலையாக நினைப்பார். 

469. நேற்றைய தேவையை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்! 

470. அனைத்துமே உடையக் கூடியது தான். 

471. ஒருவர் தான் இதுவரை பேசியதை சுருக்கமாக உரைக்கப்போவதாக சொன்னால், அவர் இதுவரை எடுத்துக் கொண்டதை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தமாகும். 

472. அனைத்துமே மாறாத பட்சத்தில், அனைத்துமே மாறுமே! 

473. எது நல்லதோ அது சட்டத்துக்குப் புறம்பானதாகவும் வருத்தமளிப்பதாகவுமே இருக்கும். 

474. நீங்கள் விரும்பியதை அடைந்தும், வசதியாக வாழ்ந்தும் கொண்டிருந்தால் எதற்கு பணக்காரனாக வேண்டும்? 

475. (20/80 விதி) உங்களின் 20 சதவீத வாடிக்கையாளரே 80 சதவீத விற்பனைக்கு வழி வகுப்பார். 20 சதவீத பொருட்களே 80 சதவீத விலை இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons