12 நவ., 2010

மர்பி விதிகள் 51-70



51. நீங்கள் ஒரு விஷயம் தவறாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்த்தும் அது சரியாகவே நடந்ததென்றால், அது தவறாகவே நடந்திருக்குமேயானால் உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்திருக்கும்.

52. முட்டாள்தனத்திற்கும் அறிவுஜீவித்தனத்திற்கும் உள்ள ஒரே வேற்றுமை அறிவுஜீவித்தனத்திற்கு எல்லை உண்டு.

53. யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது.

54. ஓராயிரம் வருடத்துக்கு மேலும் ஒரு விஷயம் தவறாக நடக்காமல் சரியாக நடந்து வந்து கொண்டிருக்கிறதென்றால் அது இப்போது தவறாக நடந்து விடும்.

55. நீங்கள் தவறு நடந்து கொண்டிருக்கும்போது தான் அந்த விஷயம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்வீர்கள்.

56. இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

57. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்.

58. கவலையே படாதீர்கள். எந்த ஒரு பிரச்னைக்கும் அதைவிட ஒரு பெரிய பிரச்னை தான் தீர்வாக அமையும்.

59. மர்பி விதிகள் பற்றி பார்க்க நினைக்கும் போது மட்டும் இந்த பக்கம் திறக்காமல் இருக்கும்!

60. வெற்றியின் பாதை எப்போதுமே சீரமைப்பில் இருக்கிறது.

61. நீங்கள் ஒரு வேலையைச் சரியாகச் செய்தால் அதைத் தான் தான் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ள ஒருவர் இருப்பார். அதில் பிரச்னை வரும் வரை. அதற்கு பின் நீங்கள் தான் பொறுப்பு.

62. மர்பி விதிகள் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். எப்படியும் அதன் படி நடக்கத் தான் போகிறது.

63. ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை " என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவியாம்!

64. ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள் நம்பி விடுவார். ஆனால் பக்கத்து மேசையில் தற்போது தான் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அதைத் தொட்டுப்பார்க்காமல் விட மாட்டார்!

65. எந்த ஒரு வேலையும் மதிப்பீடுக்குள்ளும், நேரத்திற்குள்ளும் முடிக்கப்பட்டதே இல்லை.

66. ஒரு நிர்வாகத்தின் மூட நம்பிக்கையே அப்படி ஒரு நிர்வாகம் இருப்பதாக அனைவரும் கருதுவது தான்.

67. புது இயந்திரங்கள் புது வித பிரச்னைகளையே உருவாக்கும்.

68. தவறு செய்தல் மனித இயற்கை. ஆனால் அது பூதாகரமாக உருவெடுக்க ஒரு கணினி தேவை.

69. ஒரு கணினி 20 ஆட்கள் 20 ஆண்டுகளாக செய்ய முடியாத தவறுகளைக்கூட 2 விநாடிகளில் செய்து முடித்து விடும்.

70. ஒரு விஷயத்தில் மேதாவியைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால் யார் அந்த வேலைக்கு அதிக பணச் செலவும், நேரமும் ஆகக்கூடும் என்று கணிக்கிறாரோ அவரையே தேர்ந்தெடுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons