13 நவ., 2010

மர்பி விதிகள் 551-575


551. திசை காட்டியில் 32 அளவைகள் இருப்பதும் உண்மை தான். இது 32 கோணங்கள் இருப்பதை உறுதி செய்தாலும், ஒரு கரண்டியை வைத்து தக்காளியையோ, திராட்சையையோ அழுத்தினால் சாறு உங்கள் கண்களில் தான் சரியாக பீச்சியடிக்கும். 

552. சோம்பேறித்தனம் தான் 10ல் 9 கண்டுபிடிப்புகளின் காரண கர்த்தாவாகும். 

553. மீதி இருக்கும் அந்த ஒரு கண்டுபிடிப்பும் சோம்பேறித்தனமாக இருக்கும் போது கண்டுபிடித்ததாக இருக்கும். 

554. தொலைக்காட்சியில் எந்தக் காட்சியை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உருகி உருகி இயக்குநர் எடுத்துள்ளாரோ அப்போது தான் அனைவரும் ஏதாவது கொறித்துக் கொண்டே அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

555. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வயோதிகர்கள் தான் விரும்பிப் பார்ப்பார்கள். 

556. வயோதிகர்களின் நிகழ்ச்சிகளை சிறுவர்களுக்குத் தெரியாமல் வயோதிகர்களும், வயோதிகர்களுக்குத் தெரியாமல் சிறுவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள். 

557. எந்த ஒரு விசயம் தவறாக நடந்து கொண்டிருந்தாலும் நாம் பார்க்கும் போது சரியாகவே நமக்குத் தோன்றும். 

558. ஒரு கடிகாரம் மட்டும் வைத்திருக்கும் மனிதன் சரியான நேரத்தை அறிந்து கொள்வான். 

559. ஒரு தேர்வுத் தாளைத் திருத்தும் ஆசிரியருக்கு முதலில் திருத்தப்பட்ட தாளையே அனைவரும் பார்த்து எழுதியது போலவே தான் தோன்றும். 

560. தரத்தில் உயர்ந்த ஒரு பொருளைத் தயாரிக்க உங்களுக்கு முதலில் தரமற்ற பொருளைத் தயாரித்தல் எப்படி என்பது தெரிந்திருக்க வேண்டும். 

561. எந்தப் பிரச்னைக்கும் காரணகர்த்தாவே அதன் தீர்வு தான். 

562. ஒரு அரசியல்வாதியின் வளர்ச்சியும் அவர் தனது கொள்கையில் வைத்திருக்கும் பிடிப்பும் எப்போதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

563. ஒரு திரைப்படத்திற்குத் தரப்படும் விளம்பரமும் அத்திரைப்படத்தின் தரமும் எப்பொதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

564. முக்கியமான கோப்பை சேமித்துக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் மடிக்கணிணியின் மின்கலன் தன் சேமிப்பை இழந்திருக்கும். 

565. நீங்கள் எதில் மக்கு என்பதைத் தெரிந்து வைத்திருப்பது பாதி புத்திசாலித்தனமாகும். 

566. சிறிதளவு முட்டாள்தனமே போதுமானது. கடைசி வரை முட்டாளாக இருப்பதற்கு. 

567. சர்வ உண்மை என்று எதுவுமே கிடையாது - இதுவே சர்வ உண்மை. 

568. இயற்கை விதிகளை நாம் அறிந்து கொண்டு விட்டதால் நாம் அதற்கு அடிமை அல்ல என்றாகிவிட முடியாது. 

569. சேர்த்து ஒட்டி வைத்த எதுவுமே எப்போதாவது பிரிந்து விழத் தான் செய்யும். 

570. உங்கள் எதிரிகள் நீங்கள் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் செய்து கொண்டே இருங்கள். 

571. எப்போதுமே "என்னிடம் அந்தப் பொருள் இல்லை என்று கூறாதீர்கள்". "நேற்று தான் விற்று முடித்தேன்", என்று கூறுங்கள். 

572. 10 வார்த்தைகள் இருந்தால் போதும் என்னும் இடத்தில் ஒரு வார்த்தை கூட இடாதீர்கள். 

573. ஒரு விஷயம் புரிந்து விட்டால் அது இன்னும் முழுமையாக உங்களுக்குப் புலப்படவில்லை என்று அர்த்தம். 

574. எதையும் நீங்கள் முதல் ஆளாகச் செய்யாதீர்கள். 

575. எது உங்களுக்கு மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறதோ அது பற்றாக்குறையாகவே இருக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons