13 நவ., 2010

மர்பி விதிகள் 576-600


576. காதல் சொர்க்கம் போன்றது தான். ஆனால் அது தரும் அவஸ்தை நரகம் போன்றதாக இருக்கும். 

577. ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு பிரச்னைக்கு தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தால், அந்தப் பிரச்னைக்கு அதை விட எளிமையான தீர்வு அவனைத் தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

578. துரதிருஷ்டம் தனியாக வருவதில்லை. 

579. ஒரு வேலையின் கடினத் தன்மையும் அதற்குத் தரப்படும் கூலியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

580. எந்த ஒரு ஆட்சிக்கும் எதிர்க்கட்சியினர் இருப்பார்கள். 

581. எந்த ஒரு தோல்வியின் அளவும், உங்களுக்கு வெற்றி எந்த அளவு அவசியம் என்பதிலும், நீங்கள் அதற்காக எவ்வளவு உழைத்துள்ளீர்கள் என்பதிலும் இருக்கிறது. 

582. உங்கள் மேஜையிலிருந்து விழுந்து விட்ட ஒரு நுண்ணிய பொருள் உங்களுக்கு கைக்கு கிடைக்காமலிருப்பது அதன் முக்கியத்துவத்தையும், அதன் விலையையும் பொருத்தது. 

மேலாளராவதற்கு உண்டான 8 தகுதிகள்: 

583. எப்போதும் தம்மை முக்கியமானவராகக் கருதவேண்டும். 

584. முக்கியமான மனிதர்களுடன் உங்களை அடிக்கடி காண முடிய வேண்டும். 

585. அதிகாரத்துடன் பேச வேண்டும். தகுந்த ஆதாரம் காட்டப்பட்டால் படத்தைக் கீழே போடவும் தெரிந்திருக்க வேண்டும். 

586. விவாதத்தில் எப்போதும் கலந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு கலந்து கொள்வதாயிருந்தால் சாவதானமாக அமர்ந்து கொண்டு அந்த விவாதத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டு வைக்க வேண்டும். 

587. உங்களுக்குக் கிழே உள்ளவர் உங்களை மாட்டும்படி ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தால் அவரை ஒரு எறும்பைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டும். அவர் தமது தலையைத் தாழ்த்தும் போது அவர் கேட்ட கேள்வியை அப்படியே சொற்களை மட்டும் மாற்றி கேள்வி கேட்கத் தெரிந்திருக்க வேண்டும். 

588. அலுவலகத்தை விட்டு வெளியே செல்கையில் புயல் போல செல்ல வேண்டும். அப்போது தான் யாருக்கும் எந்தக் கேள்வியும் உங்களைக் கேட்க இயலாது. 

589. உங்கள் அறைக் கதவு எப்போதும் பூட்டப்பட்டே இருக்க வேண்டும். 

590. எந்த உத்தரவும் வாய் மொழியாய் இருக்க வேண்டுமே ஒழிய தவறியும் கைப்பட எழுதி விடாதீர்கள். 

591. அரசாங்கத்தின் அனைத்து புள்ளியியல் விபரங்களும் பாமரர்களிடமிருந்து பெறப்பட்டது. 

592. நீங்கள் போக வேண்டிய ஊர் எப்போதுமே தூரத்தில் தான் இருக்கும். 

593. உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து தவறுதலாக பூட்டிய பிறகு தான் மாற்று சாவி வைத்திருக்கும் வீட்டின் சாவியும் காருக்குள்ளேயே இருப்பது தெரிய வரும். 

594. மரணம் தான் இறுதியானது. இறுதி எப்போதுமே நேர்த்தியானது. எதற்குமே இறுதி என்பதே கிடையாது. எதுவுமே நேர்த்தியானது கிடையாது. 

595. அனுமதி வாங்குவதை விட மன்னிப்பு வாங்குவது எளிது. :) 

596. எது எளிதாக தெரிகிறதோ அது கடினமானதாகும். எது கடினமாக தெரிகிறதோ அதைச் செய்யவே முடியாது. 

597. மூடநம்பிக்கை கொள்வது துரதிருஷ்டம் உடையது. 

598. பணம் இருக்கும் இடத்துக்கு செல்லுங்கள். 

599. யார் அதிக இரைச்சலுடன் கத்துகிறார்களோ அவர்களுக்கு தான் பதவி சொந்தம். 

600. உள்ளே நுழையும் முன் எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons