13 நவ., 2010

மர்பி விதிகள் 601-625


601. ஒரு கல்வி நிலையத்தின் தரத்திற்கும் அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் நேரடித் தொடர்பே கிடையாது. 

602. நீங்கள் ஜெயிப்பதற்கான தகவு 1 ஆக இல்லையென்றால் அது நிச்சயம் 0 க்கு அருகிலேயே இருக்கும். 

603. நீங்கள் ஒரு விசயத்தைத் தவறு என்று நினைத்தால் அது தவறாகவே இருக்கும். 

604. நீங்கள் ஒரு விசயத்தைத் தவறு என்று நினைத்தால் நீங்கள் சரியாகத் தான் நினைத்திருக்கிறீர்கள்! 

605. உங்களை நோக்கி ஒருவர் உங்களுக்கு நல்லது செய்வதற்காக வருகிறேன் என்று வந்தால் உயிருக்குப் பயந்து ஓடுவது போல் ஓடுங்கள். 

606. முட்டாள்கள் சட்டம் போடுகிறார்கள். முட்டாள்கள் மட்டும் தானே கடைப் பிடிக்க வேண்டும். 

607. சுய விமரிசனம் சரியாகவே இருக்கும். சுய பாராட்டு தவறாகவே இருக்கும். 

608. யாரொருவர் ஓட்டலில் டிப்ஸ் அதிகம் எதிர்பார்க்கிறாரோ அந்த சர்வர் தான் இருப்பதிலேயே மோசமாக பரிமாறுவார். 

609. மிகச் சரியாக திட்டமிடப்பட்ட ஒரு இயந்திரத்தில் குறைந்த தகவே உடைய இரண்டு எதிர்பாராத நிகழ்ச்சிகள் எதிர்பாராத நேரத்தில் ஒரே சமயத்தில் நடைபெற்று அந்த இயந்திரம் பழுது ஏற்பட வாய்ப்பாகிறது. 

610. மேலாளரைப் பொருத்தவரை சாத்தியமில்லாதது என்று எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை. 

611. சமயங்களில் மோசமான முடிவை எடுப்பதை விட சும்மா இருப்பதே மேல். 

612. சமயங்களில் சும்மா இருப்பதை விட மோசமான முடிவை எடுப்பதே மேல். 

613. போர் நடக்கும் சமயத்தில் ஒரு ஆயுதம் பயன்படும் அளவும், அந்த ஆயுதத்தால் உங்களுக்கு ஏற்படும் தேவையும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். (எ.கா. கர்ணனின் கையில் நாகாஸ்திரம்) :) 

614. வெற்றியின் தகவு நீங்கள் எவ்வளவு தூரம் சாகக் கூட தயாராக இருக்கிறீர்கள் என்பதை வைத்தே அமையும். 

615. ஒரு வேலையில் தவறின் அளவு அதைச் செய்தவர்களின் எண்ணிக்கையை அந்த எண்ணிக்கையாலேயே பெருக்கி வரும் அளவுக்கு சமமாக இருக்கும். 

616. யார் அதி வேகமாகச் செல்கிறார்களோ அவர்கள் தனியாகவே பயணிப்பார்கள். அங்கு சென்றால் அவர் தான் முதல் ஆளாக இருப்பார். 

617. நீங்கள் தங்கியிருக்கும் விடுதி எவ்வளவு பெரிய விடுதியாக இருந்தாலும் அதிகாலை 4 மணிக்கு கிளம்பும் வாகனங்கள் உங்கள் சாளரத்திற்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருக்கும். 

618. உங்களால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லையா? அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கி விடுங்கள். 

619. தொழில்கள் அனைத்தும் பொருளாதார வெற்றிடத்தை நோக்கியே ஈர்க்கப் பெறும். 

620. அனைவருக்கும் பொதுவானதாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் அவ்வாறில்லாமல் மாறித் தான் நடைபெறும். 

621. ஒரு கூட்டத்தில் உணவின் சுவையும், அக்கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சின் சுவையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

622. ஒரு கூட்டத்தில் உணவின் சுவையும், அதை ருசிக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

623. நீங்கள் உங்கள் வாகனத்தினைக் கழுவி முடித்தவுடன் மழை வந்து நன்றாகக் கழுவி விடும். 

624. அதற்காக மழை வரவேண்டி வாகனத்தைக் கழுவினால் அன்று மழையே வராது. 

625. ஒரு விசயம் நடைபெற்றால் அது சாத்தியமே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons