12 நவ., 2010

மர்பி விதிகள் 71-100

71. உங்களுக்கு எந்த வாடிக்கையாளர் லாபம் அதிகம் அளிப்பாரோ அவரைத் தான் நமது எதிராளி முதலில் தொடர்பு கொள்வார். 

72. எந்த ஒரு எளிய விதியும் கஷ்டமான வார்த்தைகளாலேயே விளக்கப்பட்டிருக்கும். 

73. பழுதாகாத எந்த ஒரு பொருளையும் பழுது பார்க்காதீர்கள். ஏனென்றால் அது பழுதாகும் சமயத்தில் உங்களால் பழுது பார்க்க இயலாது. 

74. தண்டவாளத்தை மட்டும் பார்த்து ரயில் எந்தப்புறம் சென்றது என்று சொல்ல இயலாது. 

75. நீங்கள் சரியாகக் குழம்பவில்லை என்றால் உங்களுக்கு அனைத்துத் தகவல்களும் சரியாக வந்து சேரவில்லை என்று அர்த்தம். 

76. எந்த ஒரு செயலியின் புதுப் பதிப்பும் நீங்கள் எப்போதும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டளையை மாற்றியமைப்பதாகவே இருக்கும். 

77. இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன தேவை என்பதை மட்டும் நம்மால் படிக்க முடிவதில்லை. 

78. எந்த ஒரு எளிதான விஷயத்தையும் கஷ்டமான விஷயமாக்குவது எளிது. ஆனால் கஷ்டமான காரியங்களை எளிதாக்குவது அவ்வளவு எளிதல்ல. 

79. ஒரு இயந்திரத்தின் அடிக்கடி மாற்ற வேண்டிய பொருள் கைக்கு எளிதில் எட்டாத இடத்திலேயெ இருக்கும். 

80. ஒரு ரூ.10,000/- மதிப்புள்ள பொருளைக் காக்க ரூ.10/- மதிப்புள்ள ஃப்யூஸ் போட்டால் அது ரூ.10/- ஃயூஸைக் காக்க 10,000/- மதிப்புள்ள பொருள் வெடித்துவிடும். 

81. பிரதி எடுக்கும் இயந்திரம் முக்கியமான பக்கம் வரும் போது மட்டுமே சிக்கிக் கொள்ளும். 

82. உங்களை விட்டால் இந்த இடத்துக்குத் தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். நடந்து கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்? 

83. உங்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட மாதத்திலிருந்து இறுதியில் பையில் இருக்கும் பணம் குறைவாகவே இருக்கும். 

84. எந்த கடிதத்திலும் இரண்டு கேள்விகளை மறந்தும் கேட்டு விடாதீர்கள். எந்தக் கேள்விக்கு மிகவும் பதிலை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது. 

85. முதலாளி உற்பத்தி தரத்தைப் பற்றி சொல்லும்போது அவரைப் பற்றி சொல்கிறார் என்று நினைத்து விடாதீர்கள். 

86. முதலாளி சொன்னால் ஆண்டவன் சொன்ன மாதிரி. 

87. தவறுதல் மனித இயல்பு. ஆனால் மன்னித்தல் நிறுவனத்தின் வழக்கம் இல்லை. 

88. கடைசியாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் தான் எந்தத் தவறுக்கும் பொறுப்பாளி. மீண்டும் வேறொருவர் வெளியேறும் வரை. 

89. நீங்கள் நல்லவராக இருந்தால் அவ்வளவு வேலையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப்படும். ரொம்ப நல்லவராய் இருந்தால் வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான். 

90. மக்கள் ஒரு முறை செய்த தவறு மற்றும் ஒரு முறை செய்வதில்லை. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து முறைகள் என்று தான் செய்வார்கள்.

91. புதன்கிழமை ஏன் யாருக்குமே உடல்நலக்குறைவே ஏற்படுவதில்லை? 

92. விதிகளை அனுசரிப்பதால் மட்டுமே வேலை முடிந்து விடாது. 

93. உங்கள் பதவியின் பெயர் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் உங்கள் வேலை முக்கியமில்லாததாக இருக்கும். 

94. விளம்பரத்தில் ஒரு சலுகையைப் பார்த்து விட்டு அவசரமாக போனால் தான் தெரியும் அந்த சலுகை நேற்றுடன் முடிந்தது என்றும் அந்தப் பொருளின் விலை அதிகரித்து விட்டது என்றும். 

95. தபாலில் காசோலைகளை விட பட்டி(பில்?)களே அதிக வேகத்தில் வந்து சேரும். 

96. அனைத்து முக்கியமான வேலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உங்களுக்கு வந்து சேரும். அவை யாவும் மறு திங்கட்கிழமை காலைக்குள் முடிக்கப்பட வேண்டியிருக்கும். 

97. வேலையைக் கச்சிதமாக முடித்தவுடன் சம்பள உயர்வைப் பற்றி பேசவே பேசாதீர்கள். 

98. முதலாளி எப்போது சிடுசிடு என்று இருக்கிறாரோ அது தான் சம்பள உயர்வு பற்றிப் பேச சரியான நேரமாகும். 

99. பிரச்னை இருந்தால் தானே உங்களைத் தேட வேண்டும்? எனவே பிரச்னை வரும் நேரமே சம்பள உயர்வைப் பற்றி விவாதிக்க சரியான நேரமாகும். 

100. வெள்ளத் தனையது மலர் நீட்டம். உங்கள் வருமானத் தனையது உங்கள் செலவு. :) 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons