13 நவ., 2010

மர்பி விதிகள் 801-825


801. உங்கள் தந்தை ஏழையாக இருந்தால் அது உங்கள் விதி. உங்கள் மாமனார் ஏழையாக இருந்தால் அது உங்கள் முட்டாள்தனம். 

802. நீங்கள் பிறக்கும் போது அறிவாளி தான். கல்வி தான் உங்களைக் கெடுத்து விட்டது. 

803. நாம் இங்கிருப்பது அடுத்தவர்க்கு உதவி செய்யத் தான் என்றால், அடுத்தவர்கள் இங்கிருப்பது எதற்காக? 

804. ஆம். ஒளி ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும். நீங்கள் பேசுவதற்கு முன் உங்கள் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் முகம் பிரகாசமாக இருப்பதில் இருந்து இதை உணரலாம். 

805. பணமே அனைத்துமல்ல. கடனட்டைகளும் இருக்கின்றன. 

806. ஓவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். தோல்விக்குப் பின் இருவர். 

807. காரின் சீட்டுகளில் இருக்கும் குழந்தைகளால் விபத்துக்கள் ஏற்படலாம். காரின் சீட்டுகளில் ஏற்படும் விபத்துக்களால் குழந்தைகளும் ஏற்படலாம். ;) 

808. உங்கள் எதிர்காலம் நீங்கள் காணும் கனவுகளில் இருக்கிறது. எனவே உடனே உறங்கச் செல்லுங்கள். 

809. வேலையை உங்களுக்கு ரொம்பப் பிடித்தால், அதைச் செய்யாமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருங்கள். 

810. நீங்கள் அதிகம் கற்றால், அதிகம் தெரிந்து கொள்வீர்கள்; அதிகம் தெரிந்து கொண்டால் அதிகம் மறப்பீர்கள்; அதிகம் மறந்தால் பின் ஏன் கற்க வேண்டும்? 

811. தகவல் தொடர்பு சாதனங்களை அதன் வேகத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தினால், 1. தந்தி 2. தொலைபேசி 3. ஹும். அதாங்க. ரகசியம்! 

812. வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பது வேலையைச் செய்வதை விட எடையைக் குறைக்க உதவும் தந்திரமாகும். 

813. எந்த ஒரு எளிய பொருளும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மிகவும் கஷ்டம் என்பது புரியும். 

814. எந்த ஒரு கஷ்டனான பொருளும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மேலும் கஷ்டம் என்பது புரியும். 

815. எந்த ஒரு பொருளும் விழுந்து உருண்டோடி கண்ணுக்குத் தெரியாத மூலைக்குச் செல்லும் முன் உங்கள் கால் சுண்டு விரலில் விழுந்து தான் செல்லும். 

816. எந்த ஒரு கணக்கின் விடையும் ஒரு சமன்பாடின் விடையேயன்றி, பிரச்னையின் தீர்வு அல்ல. 

817. குகைக்குள் தெரியும் வெளிச்சம் உங்களை நோக்கி வரும் ரயிலினுடையதாகவும் இருக்கலாம். 

818. கட்டுப்பாடற்ற சந்தையில் நல்ல பணத்தைக் கெட்ட பணம் புழக்கத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கும். 

819. சில தவறுகளை மீண்டும் செய்து காட்டச் சொன்னால் உங்களால் முடியாது. 

820. ஆனால் எதிர்பாராத வேறு தவறு ஏற்பட்டிருக்கும்! 

821. ஒரு விதி விலக்கு அந்த விதியை பரிசோதனை செய்து பார்க்கவேயன்றி அதை நிரூபிக்க அல்ல. 

822. எந்த ஒரு விதிக்கும் மறைந்திருக்கும் பல விதி விலக்குகள் உண்டு. 

823. புத்திசாலிகளால் (விதியை எழுதுபவர்களால்) அந்த மறைந்திருக்கும் விதி விலக்குகளைக் கண்டு கொள்ள முடியாது. 

824. ஒரு நேர்மையான மனிதனால் அனைத்தையுமே அடைந்து விட முடியாது. 

825. மீண்டும் மீண்டும் ஒரு வேலையைச் செய்வது பலனைத் தராது. அனுபவம் பெறுவதில் கூட.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons