13 நவ., 2010

மர்பி விதிகள் 976-1000


976. யாராலும் தேவையான தகவல்கள் கிடைத்தால் முடிவு எடுக்க முடியும். 

977. ஒரு நல்ல மேலாளரோ தேவையான தகவல்கள் கிடைக்காமலும் முடிவு எடுக்க வல்லவர் ஆவார். 

978. ஒரு சிறந்த மேலாளரோ எந்தத் தகவலும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆவார். 

979. நீங்கள் என்ன செய்தீர்களோ, அதைத் தானே செய்வதற்குத் திட்டமிட்டிருந்தீர்கள்? 

980. ஒருவரின் மேதாவித்தனம் அவரது வாக்கியங்களைப் பொது மக்களால் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என்பதைப் பொருத்ததாகும். 

981. காரைத் திறக்கும் வேகமும் மழையின் வேகமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

982. அலுவலகத்திலிருந்து உங்கள் வீட்டின் தூரமும், நீங்கள் முக்கியமான ஒரு அலுவலகக் கோப்பை வீட்டிலேயே வைத்து விட்டு வருவதற்கான வாய்ப்பும் நேர் விகிதத்திலேயே இருக்கும். 

983. நீங்கள் உணவகத்திற்கு எவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. பணியாளர் மிக மெதுவாகவே உங்களுக்குப் பரிமாறுவார். 

984. பக்கத்து மேசைக்காரர் சாப்பிடும் உணவை உங்கள் குழந்தை கேட்கும் போது தான் அது தீர்ந்திருக்கும். 

985. உணவின் சுவையும் அதில் உள்ள கொழுப்புச் சத்தும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

986. நீங்கள் விரும்பும் எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கும். 

987. பூசணிக்காயைச் சாப்பிடுவதானாலும் ஒவ்வொரு வாயாகத் தான் சாப்பிட முடியும். 

988. எந்த ஒரு மனிதனின் நேர்மைக் குறைவையும் திருட்டுத் தனம் ஆட்கொண்டு விடும். 

989. நீங்கள் ஏற வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் நிறைந்தே வரும். 

990. நீங்கள் உட்காரும் இருக்கை தான் அந்தப் பேருந்திலேயே வசதிக் குறைவான இருக்கையாக இருக்கும். 

991. நாம் அனைவரும் ஒரே சாலையில் தான் செல்கிறோம். ஆனால் வேறு வேறு திசையில். 

992. எந்த இடத்தில் பஞ்ச்சர் ஆனாலும் கார் சக்கரத்தின் கீழ் பக்கம் தான் சப்பையாக இருக்கும். (பெரிய கண்டுபிடிப்பு!) 

993. பிரச்னையைத் தீர்க்கும் வேலை அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிவதுடன் முடிந்து விடும். 

994. எல்லா தகவல்களும் நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் ஒழுங்காகவே செல்லும். கெட்ட தகவல்கள் மட்டும் கீழிருந்து மேலே செல்வதில் வல்லவை ஆகும். 

995. எதிரி கீழே விழும் போதே மீண்டும் ஒரு முறை உதைத்துக் கொள்ளுங்கள. 

996. யார் பக்கத்தில் இருக்கிறார்களோ, அவர்களே தாமதமாகவும் வருவார்கள். 

997. தவறைச் சரியென நிரூபிக்க, அதே தவறைப் பல செய்திருக்க வேண்டும். 

998. கடவுள் ந்ம்மை இரண்டாவது வகுப்பில் (விமானத்தில்) செல்ல வெண்டும் என்று தீர்மானத்தில் வைத்திருந்தால், நம்மை ஒல்லியாகப் படைத்திருப்பார் அல்லவா? 

999. வெற்றி பெற்றவர் என்று யாரும் இல்லை. தப்பிப் பிழைப்பவர்கள் தான் உண்டு. 

1000. நடைமுறைப்படுத்த முடியாத எந்த ஒரு விதிக்கும் அதன் தேவை நிதர்சனமாக இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons