13 நவ., 2010

மர்பி விதிகள் 1076-1100


1076. எதிர்த்து யாரும் போட்டியிடாத வரை யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். 

1077. வாய்ப்பு என்பது நீங்கள் எதிர்பார்க்காத தருணத்தில் மட்டுமே கதவைத் தட்டும். 

1078. ஆணியைச் சரியாக அடித்து விடுவீர்கள். ஆனால் சுத்தியலைக் காலில் சரியாகப் போட்டுக் கொள்ளவும் தவறமாட்டீர்கள். 

1079. சிங்கமும் ஆடும் பக்கத்தில் படுத்துத் தூங்கலாம். ஆடு ரொம்ப நேரத்துக்கு தூங்க முடியாது. 

1080. நீதி எந்த நேரமும் ஜெயிக்கும். 7 க்கு 3 என்ற எண்ணிக்கையில். 

1081. நீங்கள் எந்தத் திசையை நோக்கிக் கிளம்பினாலும் காற்று உங்கள் எதிர்த்திசையிலிருந்தே வீசும். 

1082. ராணுவ விதி: ஒரு பொருள் அசைந்தால் அதைப் பார்த்து சல்யூட் அடிக்க வேண்டும். அசையாவிட்டால் அதைத் தூக்கி வேறு இடத்தில் வைக்க வேண்டும். அசைக்க முடியாவிட்டால் அதன் மேல் பெயிண்ட் அடித்து விட வேண்டும். 

1083. எந்த ஒரு ஆவணம் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமோ அது மட்டுமே கோப்பில் இருக்காது. 

1084. அப்படியே இருந்தால் அது காலாவதி ஆனதாக இருக்கும். 

1085. தேவையில்லாத ஆவணங்களுக்கு மேற்கண்ட இரண்டு விதிகளும் பொருந்தாது.
1086. பதவி மனிதர்களை ஈர்க்கும். ஆனால் நிரந்தரமாக வைத்திருக்காது. 

1087. நீங்கள் கீழே விழுவதில் தப்பே இல்லை. உங்களால் கீழிருந்து எழும் போது ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு எழ முடியும் பட்சத்தில். 

1088. ஒரு இடத்தில் உங்களைக் காப்பாற்றிய ஒரு விஷயம் மற்றொரு இடத்தில் உங்களைக் குப்புறத் தள்ளவே செய்யும். 

1089. ஒரு பத்திரிகையாளரின் பேச்சில் இருக்கும் சுவாரசியத்துக்கும், அவரது எழுத்தில் இருக்கும் சுவாரசியத்துக்கும் உள்ள தூரம், அவர் பேசிக்கொண்டிருக்கும் ஊருக்கும், அவரது பத்திரிகை வெளியாகும் ஊருக்கும் இடையேயான தூரத்துக்குச் சமமாக இருக்கும். 

1090. பழங்களைக் காயாக வாங்கினால் பழுக்கும் முன்னரே காலியாகி விடும். 

1091. பழமாக வாங்கினால் அழுகும் வரை காலியாகாது. 

1092. ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியாது என்று யார் சொன்னது? பணமில்லாத கணக்கிலிருந்து கொடுக்கப்பட்ட காசோலையின் வேகம் பிறகு என்னவாம்? 

1093. வேலை இல்லாமல் சுற்றுவதாயிருந்தால் எந்த இடத்துக்கும் பத்தே நிமிடங்களில் சென்று விட முடியும். 

1094. நம்பிக்கை எவ்வளவுக்கெவ்வளவு மூடத்தனமாகத் தெரிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நம்பிக்கையால் வெற்றி கிடைக்கும். 

1095. உங்களிடம் ஒரு சுத்தியல் இருந்தால் எந்தப் பொருளைப் பார்த்தாலும் ஆணி போலவே தான் தெரியும். 

1096. லாட்டரியில் எதிர்பாராமல் பணம் விழுந்தால் எதிர்பாராத செலவு முன்னமே வந்திருக்கும். 

1097. இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதை விட புதிய வேலையைக் கண்டறிவது கஷ்டமான காரியமாகும். 

1098. நீங்கள் தேடிய அனைத்துப் பொருட்களும் அதைக் கடைசியாகத் தேடிய இடத்தில் கிடைத்திருக்குமே! 

1099. எந்த ஒரு கமிட்டிக் கூட்டத்திலிருந்தும் புதியதான ஒரு யோசனை தோன்றியதாகச் சரித்திரமே இல்லை. 

1100. நீங்கள் எதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களோ அதைக் குறைந்த பட்சம் ஐந்து விதமாகப் புரிந்து வைத்திருப்பார்கள் கேட்டவர்கள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons