13 நவ., 2010

மர்பி விதிகள் 1101-1125


1101. ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஆரம்பித்து விட்டதென்றால் மற்ற அனைத்தும் சீரழிய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். 

1102. உங்கள் விலையை எவ்வளவு இறக்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் தொழிலை விட்டு வெளியேறி விடலாம். 

1103. விளம்பரத்தின் அளவினைப் பெரிதாக்கினால் லாபத்தின் அளவு சிறிதாகி விடும். 

1104. நல்ல வேலைக்காரன் உங்களுக்கு எதிரே தான் கடை போடுவான். 

1105. மோசமான வேலைக்காரனோ உங்களை விட்டுப் போவதே இல்லை. 

1106. எதுவுமே சாத்தியம் தான். ஆனால் எதுவுமே எளிது இல்லை. 

1107. கூரையில் ஒட்டை இருக்கும் இடத்திற்கும் நீர் ஒழுகும் இடத்திற்கும் சம்பந்தமே இருக்காது. 

1108. உங்களிடம் ஒரே ஒரு ஆணி மட்டுமே இருந்தால் அது அடிக்கும் போது வளைந்து தான் போகும். 

1109. நீங்கள் தாமதமாகச் செல்லும் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்திற்கு ஆரம்பித்திருக்கும். 

1110. நான் உண்மையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது அத்தனை சுவாரசியமானதாக இல்லை.
1111. இதற்கும் மேல் ஒரு விஷயம் தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லையென்றால், அதற்கு மேலும் அது தவறாகப் போகும். 

1112. கும்மிருட்டாக ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கும் இடத்தில் தான் விளக்கு அணைந்து போகும். 

1113. மேம்பட்ட தொழில் நுட்பம் பார்ப்பதற்கு மாய மந்திரம் போலவே இருக்கும். 

1114. ஒரு கமிட்டி என்பது 12 வயிறுகளைக் கொண்ட மூளையில்லாத ஒரு உயிர் மட்டுமே உடைய ஒரு அமைப்பாகும். 

1115. ஒரு கமிட்டியால் குதிரையைக் கூட ஒட்டகம் என்று முடிவு செய்ய இயலும். 

1116. ஒரு கமிட்டி செய்யும் தவறுக்கு யாருமே பொறுப்பாக மாட்டார்கள். 

1117. ஒரு கமிட்டி என்பது ஒருவர் செய்யும் வேலையைக் கூட 12 பேர் சேர்ந்து செய்ய முடியாத ஒரு அமைப்பாகும். 

1118. எந்தக் கூட்டமும் முடியும் நேரம் வரை எதுவும் பேசாமல் இருங்கள். அது உங்களை அறிவாளி என்று எண்ணத் தூண்டும். 

1119. யார் எரிச்சலடையச் செய்யும் வண்ணம் பேசுகிறாரோ அவரே முக்கிய விருந்தினர் என்றழைக்கப்படுவார். 

1120. வெளியூருக்குக் கிளம்பும் போது பாதித் துணிகளையும் இரண்டு மடங்கு பணத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.
1121. அரசாங்க வேலைகளில் காகிதங்களின் அளவும், வேலை நடந்த அளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

1122. இந்த உலகில் நெறியில்லாத ஒரே இனம் மனித இனம். 

1123. இந்த உலகில் பண்படாத, பண்படுத்த வேண்டிய ஒரே இடம் உங்கள் தொப்பிக்குக் கீழே இருக்கிறது! 

1124. நம்பிக்கையுடன் வாழ்பவன் ஏமாற்றத்துடனே சாகிறான். :( 

1125. உங்களுக்கு சொறிந்தே ஆக வேண்டும் என்னும் அவசியம், 1. நீங்கள் எத்தனை பேர் கொண்ட கூட்டத்தின் நடுவில் இருக்கிறீர்கள்? 2. உங்கள் கையால் எட்ட முடியாத இடம் எது? 3. நீங்கள் தொட வெட்கப்படும் இடம் எது? என்பதைப் பொருத்தது! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons