13 நவ., 2010

மர்பி விதிகள் 1201-1225


1201. நீங்கள் மிகவும் உழைத்து நிறைய தகவல்களைப் பேசுவதற்காகச் சென்றால் அங்கு வெகு சிலரே இருப்பார்கள். 

1202. நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துகையில் அதைக் காண யாரும் இருக்க மாட்டார்கள். 

1203. உங்கள் மென்பொருளில் தவறேதும் இல்லையென்றால் அது எதிர்பார்த்த அறிக்கையைத் தராது. 

1204. ஒரு எந்திரத்தின் பழுதான பகுதியில் இருக்கும் நல்ல பகுதியைக் கழட்டவே முடியாது. 

1205. அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் கதையளக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் நேரம் அனைத்துமே அவர்களுக்கான சந்தர்ப்பங்களே. 

1206. காலையில் விஷயங்கள் நன்றாகத் தான் ஆரம்பிக்கும். மாலையில் மாறி விடும். 

1207. காலையில் மோசமாக ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மாலையில் மேலும் மோசமாகும். 

1208. எதனோடும் சமானமில்லாத இரு பொருட்கள் அவைகளுக்குள் சமமானதாக இருக்கும். 

1209. நீங்கள் என்ன செய்யப் போவதில்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

1210. ஒரு விஞ்ஞானியிடம் கேட்டால் ஒரு கண்டுபிடிப்புக்கு அவசியம் மூளை, ஒரு பேப்பர், ஒரு பென்சில் என்பார். ஆனால் ஆய்வுக்குண்டான பட்ஜெட் போடும் போது இதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வராது.
1211. நீங்கள் ஒரு விஷயம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்ந்தால் நீங்கள் எதையுமே சரியாகப் பார்க்கவில்லை என்று பொருள். 

1212. இப்போது ஏதேனும் நடந்தால் ஒரு காரியம் முழுக்கக் கெட்டு விடும் என்றால் அப்போது அது நடக்கும். 

1213. பொதுமக்களிடம் இரண்டே பிரச்னைகள் தான். ஒன்று சிந்திக்க மாட்டார்கள். இரண்டு செயல்படுவார்கள். 

1214. செய்யத் தெரிந்தவர் செய்வார். தெரியாதவர் சொல்லித் தருவார். சொல்லத் தெரியாதவர் நிர்வகிப்பார். 

1215. எப்போதுமே ஒரு செயலைச் செய்ய நேரமே இருப்பதில்லை. அதற்கான காலம் முடிந்த பின் அதே செயலைச் செய்ய மட்டும் நேரம் இருக்கும். 

1216. உங்கள் கோப்பையில் காபி ஊற்றியவுடன் தான் விமானம் மேகக் கூட்டத்திற்குள் செல்லும். 

1217. ரயிலில் உங்கள் பெட்டி மட்டும் கடைசியில் தான் இருக்கும். 

1218. அவர்களுக்குள்ளேயே பேசும் மனிதர்கள் வெளியே அதிகம் பேசமாட்டார்கள். 

1219. வாழ்க்கையின் ரகசியமே எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக ஆனால் இளமையாகச் சாவது என்பது தான். 

1220. உங்களுக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் போது தான் விருந்தாளி வந்து அதைக் கேட்பார்!
1221. நீங்கள் செல்ல விரும்பும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததுமே உங்கள் கைக்குக் கிடைக்கும். 

1222. எவ்வளவுக்கெவ்வளவு எண்ணிக்கையில் செயல்கள் குறைவாகச் செய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு இயந்திரங்கள் பழுதாகாமல் வேலை செய்யும். 

1223. நீங்கள் செய்யும் எதுவும் முழுத் தோல்வியை அடையாது! முழுவெற்றியும். 

1224. நீங்கள் செய்யும் செயல்கள் மோசமான செயல்களின் எடுத்துக்காட்டாய் விளங்கும் என்பதில் ஐயமேது? 

1225. யாரொருவர் பிரச்னையின் முழு சொரூபத்தினையும் சரியாக உணரமுடிகிறதோ அவர் பிரச்னையின் ஒரு பங்காய் இருப்பார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons