13 நவ., 2010

மர்பி விதிகள் 1226-1250


1226. மருத்துவர்களுக்கும் வக்கீல்களுக்கும் உங்களுக்கு நேரமில்லாத போது தான் அனுமதி கொடுத்திருப்பார்கள். 

1227. ஒரு துறையில் உங்களுக்கு இருக்கும் அறிவை நிரூபிப்பது அந்தத் துறை பற்றி நீங்கள் பேசும் போது பொது மக்களுக்கு எவ்வளவு தூரம் புரியாமல் இருக்கும் என்பதைப் பொருத்தது. 

1228. உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், அவர்களைக் கவனிக்க நீங்கள் வைத்திருக்கும் சிப்பந்திகளின் எண்ணிக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

1229. உங்கள் கடைக்கு உங்கள் சிப்பந்திகள் அனைவரும் வந்த அன்று தான் ஒரு வாடிக்கையாளரும் வர மாட்டார். 

1230. நீங்கள் மட்டும் கடையில் தனித்து அமர்ந்திருக்கும் போது தான் அவசரத்துடன் நிறைய வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு வருவார்கள்.
1231. சட்டம் மோசமாக இருந்தால் சாட்சியை வைத்து வாதிடுங்கள். சாட்சி மோசமாக இருந்தால் சட்டத்தை வைத்து வாதிடுங்கள். 

1232. மேற்சொன்ன இரண்டும் மோசமாக இருந்தால் வாய்தா வாங்குங்கள். 

1233. அதிகமாக ஒரே தவறைச் செய்தால் அதுவே சரியாக மாறி விடக் கூடும். 

1234. எந்தப் புத்தகமும் கடன் கொடுப்பதால் தொலைந்து விடாது. உங்களுக்குப் பிடித்த புத்தகம் தவிர. 

1235. ஒருவரிடமிருந்து எண்ணத்தைத் திருடினால் அது திருட்டு. பலரிடம் இருந்து திருடினால் அது ஆராய்ச்சி எனப்படும். 

1236. சுவாரசியமாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகள் எதிர்பார்ப்பது போல் சுவாரசியமாக நடப்பதில்லை. 

1237. நுகர்வோருக்கென்று எதைத் தயாரித்தாலும் அதை மக்கள் வாங்கிவிடுவார்கள். 

1238. பொய்யைப் பொய்யென்று பல முறை நிரூபித்த பின்னரும் அதை நம்புவதற்கு ஆட்கள் இருப்பார்கள். 

1239. அனைவருமே பொய் சொல்கின்றார்கள். ஆனால் பாதகமில்லை. அதைத் தான் யாரும் கேட்பதில்லையே. 

1240. நீங்கள் விரும்பியதைச் செய்து முடித்ததும் நீங்கள் வேறொன்றை விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள்.
1241. எந்த மாற்றமும் முதலில் ஜீரணிக்க முடியாமல் தான் இருக்கும். பின்னர் அதுவே உங்களை ஜீரணித்து விடும். 

1242. உங்களுக்கு எப்போவாவது வயிற்று வலி வரும் என்றால், அது ஐந்து மாதங்களாக நீங்கள் காணத் தவித்துக் கொண்டிருக்கும் உங்கள் காதலியைப் பார்க்கும் போது தான் வரும். 

1243. முடிவில்லா மோசங்களை விட, மோசமான முடிவு நல்லது தானே! 

1244. எதிர்காலத்தினைப் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கவலைப்படாதீர்கள். தற்போதுள்ள நிலையே நீடிக்கும்! 

1245. ஒரு பல்கலைக் கழகத்தில் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் வகுப்புக்கள் அந்தக் கட்டிடத்தின் இரு எதிரெதிர் முனைகளிலேயே நடக்கும். 

1246. யார் உடனே வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மோசமானதே கிடைக்கும். 

1247. யார் பொறுத்திருந்து பெறுகின்றார்களோ அப்போது அவர்களுக்கு அது உதவாது. 

1248. விமானவியல் கண்டுபிடிப்பு: விமானத்தில் தரப்படும் தேநீரே விமானத்தின் தடுமாற்றத்திற்குக் காரணமாகும். 

1249. ஒரு குளத்தினுள் இறங்கிப் பார்க்காமல் அதன் ஆழத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. 

1250. நமது லட்சியம் எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக இளமையாகவே சாவது என்பது தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons