13 நவ., 2010

மர்பி விதிகள் 1256-1275


1251. நல்ல விதிகளை மாற்ற மோசமான விதிகள் தான் வந்து சேரும். 

1252. மனிதர்களின் ஆசை, எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக ஆனால் இளமையாகவே சாக வேண்டும் என்பது தான். 

1253. அதிசயமாக பாயசம் செய்த நாள் தான் விருந்தினரும் வந்து சேர்வார். 

1254. ஒரு குழந்தைக்கு ஏற்கனவே அசுத்தமான தரையை அசுத்தமாக மாற்றத் தெரியாது! 

1255. வீட்டில் முழுப்பாட்டும் படிக்கின்ற குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அமைதியாக இருக்கும். 

1256. வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் தாம் சரியாக ஓட்டுவதாகத் தான் எண்ணிக் கொள்வார்கள். 

1257. நீங்கள் அவசரமாகப் போக நினைக்கும் போது தான் சாலையில் சிவப்பு நிற விளக்கு எரிந்து கொண்டிருக்கும். சரியென்று நீங்கள் காரை நிறுத்தியவுடன் பச்சை நிற விளக்கு எரியும்! 

1258. நீங்கள் சட்டப்படி ஒழுங்காக ஓட்டும் வரை சட்டம் பற்றியும் தண்டனை பற்றியும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. 

1259. உங்கள் வண்டி மட்டுமே மற்ற எந்த வண்டிகளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உபயோகிக்கும். 

1260. 4 சக்கர சக்தி (4 wheel drive) என்பது முக்கியமான கட்டத்தில், தேவையான நேரத்தில் கார் மாட்டிக் கொள்ளும் என்பதற்கான உத்தரவாதம் ஆகும்.
1261. ஒவ்வொரு பழமொழிக்கும் அதற்கு அப்படியே எதிர்மறையான அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய பழமொழி இருந்தே தீரும்! (உதாரணம் ஒன்று: ஆள் பாதி ஆடை பாதி; கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.) 

1262. எப்போதுமே நால்வரில் ஒருவர் பைத்தியமாகத் தான் இருப்பார். உங்கள் நண்பரில் மூவர் பைத்தியம் இல்லை என்றால், அநேகமாக நீங்கள் பைத்தியமாக இருக்கக் கூடும்! 

1263. கூட்டங்களில் சீக்கிரம் பேச்சை முடிப்பவரே சிறந்த பேச்சாளர். 

1264. பேருந்தைப் பிடிக்க வெறுப்பாகி நீங்கள் நடக்கத் துவங்கினால், சரியாக பாதி வழியிலேயே அந்தப் பேருந்து உங்களை முந்திச் செல்லும். 

1265. நன்றாக ஆரம்பித்த விஷயம் கெடுதலாகவே முடியும். 

1266. கெடுதலாக ஆரம்பித்த விஷயம் மோசமாகவே முடியும். 

1267. ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிப்புக்கு விட்டால் பொது மக்களே அந்த ஜனநாயகம் தேவையில்லை என்று வாக்களிப்பார்கள். 

1268. நீங்கள் கேட்க விரும்பும் வானொலி தான் சரியாக எடுக்காது. 

1269. எந்த ஒரு உலோகத்துக்கும் நீங்கள் அவசரத்தில் இருக்கின்றீர்கள் என்று தெரிவது ஆபத்தானதே! 

1270. தேவையில்லாமல் அசையாமல் இருக்கும் எதையும் தொடாமல் இருப்பது நல்லது.
1271. உங்கள் கார் மேல் அவர்களாகவே வந்து மோதியவர்கள், சொட்டையைப் பார்த்து விட்டு, "அட! இவ்வளவு சிறியதாகத் தான் இருக்கின்றதே!" என்று தான் சொல்வார்கள். 

1272. பொருட்கள் எப்போதும் சரியான கோணத்தில் தான் கீழே விழும். 

1273. உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்பதற்காக அடுத்தவருக்கு தெரியும் என்று அர்த்தம் அல்ல. 

1274. உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்பதற்காக அடுத்தவருக்கும் தெரியாது என்று அர்த்தம் அல்ல. 

1275. உங்களுக்குப் பதில் தெரிந்து விட்டது என்பதற்காக அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons