13 நவ., 2010

மர்பி விதிகள் 1276-1300


1276. உங்களுக்குப் பதில் தெரிந்து விட்டது என்பதற்காக அடுத்தவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. 

1277. அடுத்து நகரம் ஏதாவது வரும் என்று நினைத்தால் கிராமங்கள் மட்டுமே வரும். 

1278. பொது மக்களின் முடிவு தவறாகவே இருக்கும். 

1279. பணம் எப்போதும் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள் தான் தேடிப் போக வேண்டும். 

1280. முன்னேற்ற அறிக்கையின் நீளமும், அந்த திட்டத்தின் முன்னேற்றமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
1281. பெரியவர்களின் பொன்மொழிகளைத் திருத்தும் அதிகாரம் நமக்கு இருக்கின்றது. 

1282. இறந்த பல பெரிய மனிதர்கள் தற்போதைய அரசியலுக்குத் தகுந்த மாதிரி பொன்மொழிகள் சொல்லி இருப்பார்கள்! 

1283. பெரும்பாலும் மூலம் தெரியாத பொன்மொழிகள் சீனப் பழமொழிகளாகவே இருக்கும். 

1284. ஒரு இயந்திரம் ஓடாமல் நிற்கும் நிலையில், உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஒரு இலவச உதவியும், நீங்கள் ஏற்கனவே செய்து பார்த்ததாகவே இருக்கும். 

1285. அளவைகள் எப்போதுமே நம்மால் உடனடியாக உபயோகிக்க முடியாததாகவே இருக்கும். உதாரணத்திற்கு தூரம் எவ்வளவு என்றால் 5 பர்லாங் என்று விடை கிடைக்கும். 

1286. ஒரு இயந்திரம் எப்போதும் தவறான திசையிலேயே சுற்றும். 

1287. ஒரு இயந்திரத்தினை அதன் பாகங்களிலிருந்து முழுதுமாய் உருவாக்கிய பின்னர் சில உதிரி பாகங்கள் மிச்சம் இருக்கும். 

1288. வாழ்க்கை என்பது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு நிகழ்வது ஆகும். 

1289. நடைபெறும் விவாதத்தின் நீளமும் பிரச்னையின் ஆழமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

1290. எது பலருக்கு தர்மசங்கடத்தைத் தருமோ அது நடந்தே தீரும்.
1291. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் வருத்தமளிக்கக் கூடியது தான். ஆனால் நினைத்தது கிடைத்து விடுவதில் இருக்கும் அழிவு அதில் இல்லை. 

1292. நண்பர்களால் ஏமாற்றப் படுவதை விட அவர்களைச் சந்தேகிப்பது மிகவும் மோசமானது. 

1293. சத்தம் போடும் சக்கரம் தான் மாற்றப்படும்! 

1294. நிகழ்வுகளை நீங்கள் தலையிடாமல் அது படியே நடக்க விட்டிருந்தால் இன்னும் நன்றாக நடந்திருக்கும். 

1295. நாங்கள் கடவுளை மட்டுமே நம்புகின்றோம். மற்றவர்கள் பணத்தைக் கட்டுங்கள். (ஒரு கடையில் இருந்த வாசகம்) 

1296. முட்டாள்தனமான பதில்களைத் திருத்துவதை விட முட்டாள்தனமான கேள்வி கேட்பது எளிது. 

1297. ஒருவர் ஒரு விஷயத்துக்குத் தயங்குகின்றார் என்றால் அது சரியாகக் கூட இருக்கலாம். 

1298. எதுவும் சரிப்படவில்லை என்றால் முதலாளி சொல்வதைக் கேளுங்கள். 

1299. விடுதியில் உங்கள் அறையில் தங்கியிருக்கும் நண்பரின் வேலை நேரம் உங்களுக்கு எதிர்ப்பதமாகவே இருக்கும். 

1300. ஒரு பொருளை யாரும் உபயோகிக்கவில்லை என்றால் அதில் காரணம் இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons