13 நவ., 2010

மர்பி விதிகள் 1476-1500


1476. முக்கியமான கட்டத்தில் கிரிக்கெட் வீரர் பீல்டிங்கில் கோட்டை விடவில்லை என்றால் அவர் பந்தை எறியும் போது கோட்டை விடுவார்!

1477. வாழ்க்கையின் இறந்த காலத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் புரியவேண்டியது எதிர்காலம் அல்லவா?

1478. ஒரு விஷயம் தவறாகப் போய் விட்டதே என்று வருந்தாதீர்கள். அவ்வாறு தவறாகப் போய்விடும் என்று ஏற்கனவே ஒருவர் யூகித்து வைத்திருப்பார்.

1479. ஒரு பொய்யை எத்தனை முறை பொய் என்று நிரூபித்தாலும் அதை நம்புவதற்கும் ஆட்கள் இருப்பார்கள்.

1480. நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் வேறொன்றை விரும்பிக் கொண்டிருப்பீர்கள்!
1481. ஒரு கெட்டது வந்து நமக்கு நல்லது செய்து விட்டதே என்று சந்தோசப்பட்டால், ஒரு நல்லது வந்து அதைக் கெடுத்து விடும்!

1482. எதிர்பார்த்த நிகழ்வுகள் எதிர்பாராமல் நிகழும்.

1483. ஏகமனதான தீர்மானம் என்ற ஒன்று இதுவரை கிடையாது. இனிமேலும் கிடையாது.

1484. நுகர்வோருக்கு என்று மட்டும் சொல்லி விட்டால் பொதுமக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்குவார்கள்.

1485. தெருவில் கிடக்கும் குப்பைக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் நேர் விகிதத் தொடர்பு உண்டு.

1486. புதுப் பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது ஒரு தவறைச் சரி செய்ய முடியவில்லையென்றால், அதை அந்தப் பொருளின் சிறப்பியல்பாக்கி விடுங்கள்!

1487. வாழ்க்கை சண்டை போன்றது தான். களத்தில் இறங்காமல் அதை வெல்ல முடியாது.

1488. எந்த ஒரு சாமியாரும் போலி தான். போலி இல்லை என்று தான் அவர் நிரூபிக்க வேண்டி இருக்கும்!

1489. மேதைகளிடம் எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் தான் எதை, ஏன், எப்போது செய்யக் கூடாது என்று சொல்வார்கள். அதை அப்போது சரியாகச் செய்யுங்கள்!

1490. சரியாகக் கணிக்காத சோதிடரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. சரியாகக் கணிப்பவரைக் கண்டதும் சுட வேண்டும்!
1491. உங்கள் வானொலியில் நீங்கள் அதிகம் கேட்க விரும்பும் நிலையத்தை மட்டும் தெளிவாகக் கேட்க இயலாது.

1492. ஒரு தவறைச் சரி செய்வதற்கான நேரமும், அத்தவறைச் செய்ய எடுத்துக் கொண்ட நேரமும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும். 

1493. போதும் என்பது போதும் என்பதற்குப் பொருந்தாது.

1494. மக்களின் பலத்த போராட்டத்துக்குப் பின், இங்கே இருக்கும் வாகன நெரிசல் ஒரு கிமீ தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்படும். :)

1495. இரண்டு தவறுகளுக்கும் தொடர்பு இல்லாவிட்டால் கூட இரண்டும் ஒரே நேரத்திலேயே நிகழும்.

1496. உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் செயல்களைச் செய்பவர்களே முன்னேறுகிறார்கள்.

1497. மூன்று முறை வாழ்க்கையில் தொடர்ந்து சரியாக ஊகிக்க முடிந்தால், கை கொடுங்கள், நீங்களும் மேதை தான்.

1498. பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு எதிராகவே அதே கொள்கை பயன்படுத்தப்பட்டு பொய் என்று நிரூபிக்கப் படும்.

1499. உங்களுக்கு வரும் அநாமதேய விற்பனை அழைப்புக்களின் எண்ணிக்கை நீங்கள் எத்தனை அவசரமான அவசியமான செயல் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே அமையும்.

1500. வேலை என்பது புல்வெளியாக இருக்கலாம். ஆனால் பணம் தான் அதைப் பசுமையாய் வைத்திருக்க உதவுகின்றது.
மனம் நீ குரங்கு, 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons