13 நவ., 2010

மர்பி விதிகள் 1501-1525


1501. ஒரு பூனையை எப்போதும் முந்த நினைக்காதீர்கள்.

1502. நீங்கள் ஆடும் இந்த விளையாட்டு (வாழ்க்கை) கொஞ்சம் பயங்கரமானது தான். ஆடாமல் இருக்கவும் முடியாது. பந்தயம் கட்டினால் மட்டுமே ஜெயிக்கவும் முடியும்.

1503. ஓய்விலும் பசியிலும் முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது.

1504. யானை: அரசாங்கம் ஒரு எலியை உருவாக்க நினைத்தால் உருவாவது.

1505. முட்டாள்தனத்தை பணத்தாலோ, படிப்பாலோ, சட்டம் போட்டோ மாற்றி விட முடியாது. உண்மையில் முட்டாள்தனம் ஒரு பாவமல்ல. ஆனால், முட்டாள்தனம் ஒரு குற்றம் ஆகும். அதன் தண்டனை மரணம். எந்த வித இரக்கமும் இன்றி உலகம் தாமாகவே அதை முட்டாள்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது.

1506. ஆறுக்கும் மேற்பட்ட கால்களும், மூளையே இல்லாததுமான ஒரு அமைப்பே கமிட்டி ஆகும்.

1507. வெகுநாட்களுக்கு முன்பே போடப்பட்ட திட்டம் நிச்சயமாய் தோல்வியிலேயே முடிவடையும்.

1508. எளிதில் சொல்லும் பொய்: நான் இதுவரை இப்படிச் செய்ததே இல்லை.

1509. ஒரு பொருளை எடுக்க செலவளிக்கும் சக்தியை விட, அதை மீண்டும் அதே இடத்தில் வைக்க செலவளிக்கும் சக்தி அதிகமாகவே இருக்கும்.

1510. டைட்டானிக்கில் செல்ல முடிவெடுத்த பிற்பாடு, ஏன் நீங்கள் முதல் வகுப்பில் செல்லக் கூடாது?
1511. எந்த ஒரு நேரத்திலும் ஆயிரக்கணக்கான தலைவர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் எல்லாரும் தாங்கள் இந்த நாட்டின் பிரதமராகி விட வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள். ஆனால், இவர்களில் யாருமே அதை நனவில் அடைவதில்லை!

1512. எந்த ஒரு பிரச்னையையுமே சரியான கோணத்தில் பார்த்தால் இன்னும் பெரியதாகவே தோன்றும்.

1513. ஆவணங்கள் இருக்க வேண்டுமென்றால் அவை இருக்காது!

1514. அப்படியே இருந்தாலும் அவை காலாவதி ஆனவையாய் இருக்கும்.

1515. உபயோகமே இல்லாத ஆவணங்கள் மட்டுமே மேலே சொன்ன இரு விதிமுறைகளையும் தாண்டி வந்திருக்கும்!

1516. அதிகாரத்திற்கு மனிதர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. ஆனால், அதற்கு மனிதர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் சக்தி கிடையாது.

1517. தவறுதல் மனித இயற்கை. மிகவும் சுவாரசியமாகவும் இருக்கும்!

1518. 90% மக்கள் தங்களை சராசரிக்கும் மேலே அறிவுள்ளவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.

1519. வாடகை கட்ட முடியாதவர்கள் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். வாடகை கட்ட முடிபவர்கள் வீடு கட்டுகின்றார்கள்.

1520. ஒரு ரூபாய் தோரணை ஒரு பைசா செயல்பாட்டுக்குச் சமம்.
1521. அரசாங்கத்தில் ஏற்படும் ஊழல்கள் யாவுமே இறந்த காலத்தில் தான் சொல்லப்படும். 

1522. நீங்கள் ஏற்கனவே பள்ளத்தில் இருந்தால் தோண்டுவதால் என்ன பயன்?

1523. யாரிடம் இருக்கின்றதோ, அவர்களுக்கே மீண்டும் மீண்டும் கிடைக்கும்.

1524. ஒரு இயந்திரத்தில் எளிதில் எட்டாத பாகம் தான் அடிக்கடி பழுதாகும்.

1525. முதல் முறையே வெற்றி பெற முடியாவிட்டால், பனிச்சறுக்கு விளையாட்டு உங்களுக்கு உகந்ததல்ல.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons