12 நவ., 2010

மர்பி விதிகள் 351-375

351. ஒரு பொருளின் உபயோகத் தன்மையும் அதன் மதிப்பும் எதிர் விகிதத்தில் தான் இருக்கும். 

352. அதிவிரைவான கணிணியின் விலை சாதாரண கணிணியின் விலையின் 4 மடங்காக இருக்கும். பாதி விலைக்குக் கிடைக்கும் கணிணியின் வேகம் நான்கில் ஒரு பங்கு தான் இருக்கும். 

353. எப்போது இரண்டு மனிதர்கள் சேர்ந்து மூன்றாம் மனிதனின் பணத்தைச் செலவழிக்கத் திட்டமிடுகின்றனரோ அப்போது தான் கள்ளத் தனம் ஆரம்பிக்கிறது. 

354. அனைவருக்குமே சொர்க்கத்துக்கு செல்ல ஆசை தான். ஆனால் சாக யாருக்குமே விருப்பமில்லை. 

355. தேவாலயத்துக்கு செல்ல முடியாது, பாதை மோசமாக இருக்கிறது. அதைத் தாண்டி இருக்கும் சாராயக் கடைக்குப் போய் வரலாம், கவனமாகச் செல்வோம். 

356. நீங்கள் ஒரு தீக்குச்சியை காரின் வெளியே எறிந்தால் காட்டுத் தீயே மூளும். ஆனால் பத்து தீக்குச்சியை உபயோகித்தாலும் அடுப்பை எரிய வைக்க முடியாது. 

357. குழந்தைகள் முழு இரவும் தூங்கி எழுந்தாலும் கூட நாள் முழுதும் கடினமாக விளையாடிய பின் இருக்கும் பலம் இருக்காது. 

358. யார் அதிக அதிர்ஷ்ட சீட்டு வாங்குகிறார்களோ அவருக்கு பரிசே கிடைக்காது. 

359. நீங்கள் எதை விரும்பவில்லையோ அது கண்டிப்பாக வரும். (உம். மரணம், வரி) 

360. ஒரு பத்திரிக்கைகாரர் உங்களுக்கு எதிராக எழுதிவிட்டார் என்று கோபம் வருமாயேனால், அவர் மேலும் புகழ் பெறவோ, பணக்காரராகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஆவார். 

361. நீங்கள் கற்பனை செய்வதை விட உலகம் பெரிது கிடையாது. உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியது. 

362. ஒரு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் உள்ள லாபமும் உண்மையான லாபமும் எதிர் விகித்திலேயே இருக்கும். 

363. மிகஅதிமேதாவித்தனமாக உங்களுக்கு எழும் எந்த ஒரு விஷயமும் ஏற்கனவே யாராவது கண்டுபிடித்ததாகத் தான் இருக்கும். 

364. ஒரு கைக்குள் அடக்க முடிகிற எதுவும் கைக்குள்ளேயே தான் இருக்கும்! 

365. ஒரு உணவகத்தின் வெற்றி என்பது கூட்டமாக இருக்கையில் வேகமாகவும் கூட்டமே இல்லாத சமயத்தில் மிக மெதுவாகவும் பரிமாறுவதில் தான் இருக்கிறது. 

366. மோட்டார் வாகன விதிகள் (1) வார இறுதியில் தான் வாகனத்துக்கு பழுது ஏற்படும். (2) வாகனத்தை அவசரமாக எடுக்கையில் தான் பழுதேற்படும். (3) வாகனத்துக்கு ஏற்படும் எந்தப் பழுதும் சிறிய பழுதாக இருக்காது. 

367. ஒரு பெரிய நாட்டில் எந்த ஒரு விஷயத்துக்கும் 50 நபர்களை எடுத்துக்காட்டாக வைக்க முடியும். 

368. ஒரு குடிகாரனின் வாயிலிருந்து வரும் சாதாரணமான வார்த்தைகள் ஒரு தத்துவ மேதை வெகுவாக சிந்தித்து வெளியிடும் வார்த்தைகளை விட தத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

369. ஒரு நிர்வாகத்தின் வெற்றியும் அந்த நிர்வாகத்துக்கு இருக்கும் மொத்தத் திறமையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

370. நீங்கள் ஒரு விஷயத்துக்காக காத்திருந்தால் அது போயேவிடும்; 

371. சாதாரணமாகப் போகாமல், உங்களுக்குத் தேவையில்லாத கெடுதல்களைச் செய்து விட்டுத் தான் போகும; 

372. அதுவே மோசமானதாக இருந்தால் திரும்பவும் வரும். 

373. ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்காக நிறைய கூட்டங்கள் கூட்ட வேண்டியிருந்தால் பின்னால் பிரச்னையை விட கூட்டங்களே அதிக பிரச்னையை உருவாக்கியிருக்கும். 

374. ஒரு பொருள் சிறந்ததாக இருந்தால் அதை தயாரிப்பதையே நிறுத்தியிருப்பார்கள். 

375. ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் அவர்களின் கவனத்தின் மொத்த அளவு எப்போதுமே ஒரு மாறிலியாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons