12 நவ., 2010

மர்பி விதிகள் 326-350


326. ஒரு குழுவில் சரியான நபர்கள் இணைந்துவிட்டனர் என்பதாலேயே அது சரியான பாதையை நோக்கி செல்லும் என்று சொல்ல முடியாது. 

327. யார் ஒருவர் 4 முறைக்கு மேல் ராஜினாமா செய்வதாக அடித்து சொல்கிறாரோ அவர் ராஜினாமாவே செய்யமாட்டார். 

328. ஒரு மேதாவி என்பவர் பெரிய தவறுகளைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று சிறிய தவறுகளாக செய்வார். 

329. அடுத்த வீட்டுக்காரரின் திருப்புளி அடுத்த வீட்டுக்காரர் இடத்தில் மட்டுமே வேலை செய்யும். 

330. உங்கள் வீட்டுத் திருப்புளி எல்லோர் வீட்டிலும் வேலை செய்யும்! 

331. எது தேவையில்லை என்று நினைக்கிறீர்களோ அதிலிருந்தே நிறைய விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்! (நம்ம மர்பி விதிகள் போல :)

332. ஒரு பொருள் நமக்குத் தேவையில்லை என்பதற்கு உங்களால் எந்தக் காரணமும் கற்பிக்க இயலவில்லை என்றால் அந்தப் பொருள் உங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருள் என்று அர்த்தம். 

333. கொஞ்சம் முட்டாள்தனம் போதும் ஒரு விஷயத்துக்கு. அதை அதல பாதாளத்துக்கு கொண்டு செல்ல. 

334. அரசியல்வாதிக்கும் நத்தைக்கும் உள்ள ஒரு வேற்றுமை நத்தை அது கடந்து வந்த பாதையை யார் வேண்டுமானாலும் காணலாம். 

335. எந்த ஒரு பொருள் நகரத் தொடங்கி உள்ளதோ அது தவறான திசையை நோக்கியே இருக்கும். 

336. எந்த ஒரு பொருள் நகராமல் இருக்கிறதோ அது தவறான இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். 

337. கணிணிகள் நம்ப முடியாதவை தான். ஆனால் மனிதனை விட அல்ல. 

338. அரசியல் தலைவருக்கான முக்கிய விதி: தோள்களின் மேல் யாரும் ஏறி இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். முதுகுக்குப் பின் தொடர்கிறார்களா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள். 

339. முதலாளித்துவத்தின் அடிப்படை நீங்கள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 

340. ஜனநாயகத்தின் அடிப்படை உங்களால் ஜெயிக்கவும் முடியாது தோற்கவும் முடியாது எனற நம்பிக்கையில் உள்ளது. 

341. சர்வாதிகாரத்தின் அடிப்படை உங்களால் வெளியேற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 

342. ஒரு பொருளை வாங்கும் முன் நீங்கள் அனுமானித்த பலன்களை அந்தப் பொருளை வாங்கியவுடன் உங்களால் பெற முடியாது. 

343. ஒருவரின் தகுதியும் அவர் இருக்கும் இடமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

344. யாரிடம் தங்கம் இருக்கிறதோ அவரே சட்டம் இயற்ற தகுதியானவர். 

345. உங்களுக்கு அணிய சுகமாக இருக்கும் செருப்பு பார்க்க அசிங்கமாகவே இருக்கும். 

346. ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு அதில் உள்ள வார்த்தைகளை விட அது எழுதப்பட்ட தாளில் தான் அதிகம் இருக்கும். 

347. மிகச் சரியாகத் திட்டமிடாத ஒரு திட்டம் மூன்று மடங்கு நாட்கள் அதிகம் எடுக்கும். மிகச் சரியாகத் திட்டமிட்ட திட்டமோ இரண்டு மடங்கு மட்டுமே எடுக்கும். 

348. ஒரு புதிய இயந்திரம், பழைய இயந்திரம் கழற்றி விற்கப்பட்ட மறு நிமிடத்திலிருந்து தான் தகராறு செய்ய ஆரம்பிக்கும். 

349. ஒரு பொருள் உடையும் என்றிருந்தால் அதன் உத்திரவாதம் முடிந்த மறு நாள் தான் உடையும். 

350. நீங்கள் அதிகம் மதிக்கும் ஒரு நபர் அதிகம் யோசிப்பதாக நீங்கள் நினைக்கும் நேரத்தில் அவர் மதிய உணவைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons