12 நவ., 2010

மர்பி விதிகள் 376-400


376. ஒரு இயந்திரத்தின் பாகத்தில் ஏற்படும் கோளாறும், உங்களுக்கு ஏற்படும் அனுபவமும் நேர் விகிதத்திலேயே இருக்கும். 

377. ஒரு படகோட்டியை நதியைக் கடக்கும் வரை வையக் கூடாது. 

378. இயந்திரங்கள் என்றால் வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் என்றால் சிந்தனை செய்ய வேண்டும். இரண்டுமே நடப்பதில்லை. 

379. மூளைகளின் கணிதம்: 1+1 = 1.5, 2+2 = 0.5, 4+4 = 0.25 கூட்டம் கூடக் கூட மூளையின் சிந்தனை அளவு குறைந்து கொண்டே செல்லும். 

380. ஒரு வேலையைச் செய்து முடிக்க இதை விட சுலபமான வழி இருந்தே தீரும். 

381. ஒரு நாட்டின் அதிகாரத்துவமும், சாக்கடையும் ஒன்று தான். கழிசடைகள் மட்டுமே மேலே வர முடியும். 

382. ஒரு நிறுவனத்தின் முன்னறையின் ஜொலிப்பும், அதன் வெற்றியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

383. ஒரு நாட்டில் இருக்கும் கொடுமைகளின் மொத்த அளவு ஒரு மாறிலியாகும். எனவே ஒருபுறம் ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்தால் இன்னொருபுறம் கொள்ளையும் சுகாதாரக் கேடும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும். 

384. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும். 

385. குறுக்கு வழி என்பது இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள அதிகபட்ச தூரத்தினைக் குறிக்கும். 

386. எப்படிப்பார்த்தாலும் காகிதத்தின் உபயோகம் குறையப் போவதில்லை. ஜனநாயகமாக இருந்தால் எந்த ஒரு படிவத்தையும் நான்கு படிகள் எடுத்தே கொடுக்கவேண்டும். முதலாளித்துவமாக இருந்தால் எந்த ஒரு பொருளையும் நான்கு தாள்கள் கொண்டு சுற்றிக் கொடுக்க வேண்டும். 

387. எந்த ஒரு மனிதனின் உரிமையும், உடமையும் பாதுகாப்பானதல்ல, பாராளுமன்றம் நடப்பில் இருக்கும் வரை. எப்போது வேண்டுமானாலும் சட்டம் இயற்றி அதைப் பறித்துக் கொள்ளலாம். 

388. கடையிலிருந்து வாகனம் இருக்கும் தூரமும் உங்களிடம் இருக்கும் பொருட்களின் எடையளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

389. மாற்றம் என்பது ஒரு தலைமைக்குப் பொதுவானது. அதுவே மற்றவர்கள் செய்வதற்குள் செய்து விட்டால் வெற்றியாகிறது. 

390. ஐந்து மாதங்களில் மூன்று நல்ல கூட்டங்கள் நடைபெற்றால் அவை அனைத்தும் ஒரே நாளில் அமையப் பெறும். 

391. வாகனத்திலிருந்து விழும் எந்த ஒரு பொருளும் அதன் புவிநடுப் புள்ளியில் தான் விழும். 

392. யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம். 

393. ஒரு வேலை நடக்க வேண்டுமாயின் அதைச் செய்பவரைத் தேடுங்கள். அதைப்பற்றி எழுதுபவரோ, மேற்பார்வை பார்ப்பவரோ, முறைப்படுத்துபவரையோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம். 

394. எந்த ஒரு அறிக்கையும் நான்கு காலங்களைக் கொண்டதாக இருக்கும். 1. இறந்த காலம் 2. நிகழ் காலம் 3. எதிர்காலம் 4. இவையனைத்துக்கும் மேலான ஊகம். 

395. எப்போதும் மேலாளர் தான் முதலில் வர வேண்டும். 

396. தமது பிரச்னைகளைத் தீர்க்க சிக்கனம்மாக இருப்பார்கள். மற்றவர்கள் பிரச்னைக்கோ தாராளமான ஆலோசனை சொல்வார்கள் 

397. ஒரு விஷயத்தைக் காலி செய்ய வேண்டுமானால் அதை நிர்வகிக்க ஒரு கமிட்டியை உருவாக்கினால் போதும். 

398. நீங்கள் முன்பே ஒரு வழியில் ஒரு விஷயத்தைச் செய்திருந்தால் அது தவறானதாகவே இருந்திருக்கும். 

399. ப = க / சா. ஒரு நிர்வாகத்தில் ஒருவருக்கு இருக்கும் தவியின் அளவு அவர் திறக்க வேண்டிய தவுகளையும் அதற்கு அவர் வைத்திருக்கும் சாவிகளையும் பொருத்ததாகும். அதாவது காவலாளியிடம் 20 சாவிகள் இருக்கும், 20 கதவுகளுக்கு (ப = 1) . மேலாளருக்கு 2 கதவுகள், 1 சாவி (ப = 2), முதலாளிக்கோ சாவி தேவையில்லை (ப = ∞). 

400. ஒரு கூட்டத்தின் பயனும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணீக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons