12 நவ., 2010

மர்பி விதிகள் 401-425


401. ஒரு பொருளுக்குத் தரப்பட்ட உத்திரவாதம் அந்தப் பொருளுக்கான பணத்தைச் செலுத்தியவுடன் முடிவுறுகிறது. 

402. எந்த ஒரு துணியையும் சரியான அளவுக்கு வெட்டியவுடன் அது அளவில் சுருங்கிவிடும். 

403. நீங்கள் ஒரு பொருளின் காப்புரிமைக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உங்களின் முகம் தெரியாத இன்னொரு நண்பரால் அதே பொருளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கும். 

404. ஒரு இயந்திரத்தை உருவாக்க n பொருட்கள் தேவைப்படுமாயின் நம்மிடம் n-1 பொருட்கள் தான் இருக்கும். 

405. வாழ்க்கை என்பது நீங்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் போது உங்களைக் கடந்து செல்வதாகும். 

406. பத்திரிகையில் காணப்படும் அனைத்தும் உண்மையானவை தான். நீங்களே நேரடியாக பார்த்த விஷயங்கள் தவிர. (எவ்வளவு உண்மை!) 

407. ஒரு விஷயத்தின் கடினத் தன்மையும் அதைப் பற்றிய விவாதத்தின் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

408. எந்த ஒரு விஷயம் நிறைய பேருக்கு அசௌகரியத்தைத் தருகிறதோ அது நடந்தே தீரும். 

409. யாருமே செய்யாத ஒரு காரியத்தை நீங்களாக எடுத்து செய்தால் அதை வாழ்க்கை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். 

410. ஏமாற்றம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். ஆனால் நீங்கள் அடைய விரும்பியதை அடைவதால் ஏற்படும் கஷ்டங்களை விட அது பெரிதல்ல. 

411. வரி செலுத்துபவர் யாரெனின், அரசாங்கத்துக்கு சேவை செய்வதற்காக IAS படிக்காதவர்! 

412. சூடான பாத்திரமும் தண்மையான பாத்திரமும் பார்க்க ஒன்று போல தான் இருக்கும். 

413. எதுவுமே இன்னொன்றைச் சார்ந்தே இருக்கிறது. 

414. வரி என்பது வரி செலுத்துபவரின் பயனுக்காக வசூலிக்கப்படுவதல்ல. 

415. ரூ.100/-ஐ 7% வட்டிக்கு 200 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் போட்டு வைத்தோமேயானால் அதன் அளவு அப்போது ரூ. 1 கோடியையும் தாண்டி நிற்கும். ஆனால் அதன் மதிப்போ ரூ.100/-க்கும் குறைவாகவே இருக்கும். 

416. உள்ளூர்காரன் தான் தாமதமாக வருவான். 

417. ஒரே தவறைத் திரும்ப திரும்ப செய்தால் அது சரியாகி விடும். 

418. சத்தமாகப் பேசுவது தவறு செய்பவரின் கேடயம் ஆகும். 

419. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்லவனை விட கெட்டவனே அதிகம் உபயோகிப்பான். 

420. எந்தத் தீர்மானம் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறதோ அது ஒரு மனதால் தீர்மானிக்கப்படுகிறது. :) 

421. நகைச்சுவை வரவழைக்க பார்க்க சகிக்காதவராக இருக்க வேண்டும். 

422. ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. அந்த சமயத்தில் பெரிய்ய்ய்ய மீன் வந்து கொக்கையே இழுத்துக் கொண்டு சென்றுவிடுமாம்! 

423. வீதியில் கிடக்கும் குப்பையின் அளவும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் நேர்விகிதத்திலேயே இருக்கும். 

424. மேதைகள் சொல்வதை எந்நேரமும் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களை எதை எப்போது செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதை அப்போது செய்யுங்கள். முன்னேறிவிடலாம். 

425. எந்த ஒரு தலைமுறை சரித்திரத்தை மறக்கிறதோ அவர்களுக்கு இறந்த காலம் இருக்காது. எதிர்காலமும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons