12 நவ., 2010

மர்பி விதிகள் 426-450


426. மனிதனின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டும் குறைத்து எடை போடக்கூடாது. 

427. ஒரு குடும்ப விவாதத்தில் நீங்கள் சொல்வது எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும். 

428. வரலாறு எப்போதாவது பதிவு செய்திருக்கிறதா என்ன? பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவு சரியாய் இருக்கும் என்று. 

429. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம். 

430. சூழ்நிலை அமையும் போது தவறு செய்து விட வேண்டும். மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன? 

431. இயற்கையின் நியதிகளில் இரக்கத்துக்கு இடமே கிடையாது. 

432. ஒரு கமிட்டி என்பது ஆறுக்கும் மேற்பட்ட கால்களுடைய மூளையே இல்லாத ஒரு உயிரமைப்பு ஆகும். 

433. எந்த ஒரு நல்ல விஷயமும் தண்டனைக்குத் தப்புவதில்லை. 

434. ஒரு முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த மூன்றாவது கால் தான்! 

435. யார் தயங்குகிறார்களோ அவர்களே கடைசி. 

436. நீங்கள் டைட்டானிக்கில் செல்வது என்றாகிவிட்டது. முதல் வகுப்பில் சென்றால் தான் என்ன? 

437. நிர்வாகத்திறன் என்பது அந்த நிர்வாகத்துக்குத் தேவையான அளவை விட எப்போதுமே குறைவாகவே இருக்கும். 

438. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது. 

439. எந்த ஒரு நிர்வாகத்திலும் அதிகமாக மேலாளர்களே இருப்பார்கள். 

440. காதல் வேதியியல் சம்பந்தப்பட்டது. கலவியோ இயற்பியல். :) 

441. எந்த ஒரு பனிப்பாறையின் எட்டில் ஏழு பங்கும் கண்ணுக்குத் தெரிவதில்லை. 

442. ஒரு விஷயம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரி சமமாக இருப்பதில்லை. 

443. ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவுக்கு அதன் செலவும் உயர்ந்து கொண்டே வரும். 

444. எந்த ஒரு கமிட்டியின் முடிவும் செலவை அதிகரிப்பதாகவே இருக்கும். 

445. ஒரு முட்டாள் உயர்ந்த பதவியில் இருந்தால் அதற்கு சிறந்த உதாரணம், ஒரு மலையின் மேல் ஒருவன் நிற்பதாகும். அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனைப் பார்ப்பவர்களுக்கும் அவன் சிறியதாகவே தெரிவான்! 

446. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்னை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார். 

447. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்களை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்! 

448. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) சில அடி தூரத்துக்குள் தங்கள் மாமியார் வந்தாலே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். 

449. யாரால் முடியுமோ அவர்கள் செய்கிறார்கள். யாரால் முடியவில்லையோ அவர்கள் கற்பிக்கிறார்கள். யாரால் கற்பிக்க முடிவதில்லையோ அவர்கள் நிர்வாகஸ்தர்கள் ஆகிறார்கள். 

450. ஒரு விஷயத்தைச் சரியான நேரத்துக்குள் முடிப்பதற்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதை மீண்டும் செய்வதற்கு மட்டும் நேரமிருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons